பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் இன்று நடந்தது பலருக்கு பாடம்! மயிலுக்கு கிடைத்த தண்டனை! மனம் மாறும் சரவணன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Pandian Stores 2 serial March 5 Episode) பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் 2026 மார்ச் 5ஆம் தேதிக்கான எபிசோடில், சரவணன் தங்கமயில் பற்றி தான் பேசியது தவறு தான் என்று புரிந்து கொள்கிறார். அதே நேரத்தில் தங்கமயில் கண் முன்பே சரவணன் அவருடைய முன்னாள் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் தான் கர்ப்பமாக இருப்பதை பற்றி சரவணனிடம் சொல்லி இருந்தார். அதற்கு முன்பு இதை சொன்னதும் சரவணன் ரொம்ப சந்தோஷப்படுவார் என்று எதிர்பார்ப்போடு போன தங்கமயிலுக்கு சரவணன் அதிர்ச்சி கொடுத்திருந்தார். இந்த குழந்தை என்னுடையது கிடையாது, இதற்கு நான் அப்பாவே இல்லை என்று சொல்ல அதனால் தங்கமயில் நொறுங்கிப் போய்விட்டார்.

இதுவரைக்கும் தன்னுடைய அப்பா அம்மா பேச்சைக் கேட்டு பொய் மேல் பொய் சொல்லி ஒவ்வொருவரிடமும் கெஞ்சிக் கொண்டு எந்த இடத்திலும் சுயமாக யோசிக்காததால் தன்னுடைய வாழ்க்கை பறிபோய் தான் நிற்கதியாக நிற்பதையும் தங்கமயில் புரிந்து கொண்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடு
இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ( Pandian Stores 2 serial today episode), தங்கமயிலிடம் அவருடைய அம்மா நீ மாப்பிள்ளையிடம் கர்ப்பமாக இருக்கிற விஷயத்தை சொல்லிட்டியா என்று கேட்க, அதற்கு தங்கமயில் நான் சொல்லவே இல்ல அவரை பார்க்கவே இல்லை ஆனால் நான் இந்த விஷயத்தை அவரிடம் சொல்ல போவது கிடையாது. அந்த குடும்பத்திற்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம், இதுவரைக்கும் நீங்க எனக்காக நல்லது செய்றேன்னு சொல்லி எனக்கு ஏற்படுத்திய பிரச்சனைகள் போதும்.
தங்கமயில் எடுத்த முடிவு
இனி என்னை வைத்து என் மாமியார் வீட்டில் எதுவும் நீங்க பேசக்கூடாது. நான் இந்த வீட்டில் தங்குவதற்கு என்ன செலவோ அதை தந்துடுறேன் என்று அதிர்ச்சி கொடுக்க, தங்கமயில் இப்படி எல்லாம் பேச மாட்டாளே என்று பாக்கியம் அதிர்ந்து போய்விடுகிறார். பிறகு பாக்கியம் போனதும் மீனா விட நான் கர்ப்பமாக இருக்கிற விஷயத்தை நீ அத்தை மாமாவிடம் சொல்ல வேண்டாம் என்று தங்கமயில் சத்தியம் வாங்கி விடுகிறார்.
பாக்கியம் கேட்ட கேள்வி
பிறகு மீனா அங்கிருந்து வெளியே வரும்போது பாக்கியம் அவரிடம் வந்து நான் இந்த விஷயத்தை மாப்பிள்ளை கிட்ட போய் பேச போறேன், என் பொண்ணை அவர் கூட்டிட்டு போக வைக்க போறேன் என்று திமிராக பேச அதற்கு மீனா ஏற்கனவே மாமா கிட்ட சொல்லிட்டாங்க அவர் இது என்னோட குழந்தையே இல்லைன்னு சொல்லிட்டாரு. நீங்க அவங்களை கேட்ட கேள்விகளால் அவங்க மனம் உடைந்து தற்கொலை பண்ண போனாங்க, இதுவரைக்கும் நீங்க சொன்ன பொய்களை எல்லாம் அவங்களும் வேற வழி இல்லாம பேசியதால்தான் இவ்வளவு பிரச்சனை.
திட்டிய மீனா
நீங்களும் அவங்களை புரிஞ்சிக்க மாட்டீங்க, மாமாவும் அவங்கள புரிஞ்சிக்க மாட்டேங்கிறாரு அவங்க தான் பாவம் என்று கோபமாக திட்டுகிறார். அதோடு நீங்க அக்கா விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காதீங்க என்று திட்டிவிட்டு வீட்டிற்கு போய்விடுகிறார். மறுபக்கத்தில் சரவணன் அஞ்சலியை சந்தித்து தங்கமயில் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்னது பற்றி சொல்கிறார்.
மயில் பார்த்த காட்சி
பிறகு நான் கோபத்தில் இந்த குழந்தை என்னுடையது கிடையாது என்று சொல்லிட்டேன், அப்படி நான் பேசி இருக்க கூடாது ஆனா மயில் கர்ப்பமாக இருக்க வாய்ப்பே இல்ல. அவா என்கிட்ட பொய் சொல்லுற என்று சொல்கிறார். அந்த நேரத்தில் மயில் டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரையில் ஒன்றை வாங்குவதற்காக ரோட்டில் நடந்து வந்து கொண்டிருக்கிறார். அப்போது மீனா போன் பண்ணி எங்க போயிட்டு இருக்கீங்க சாப்டீங்களா என்று விசாரிக்கிறார்.
பிறகு போனை கட் பண்ணியதும் ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருக்கும் மயில் அங்கு ஒரு கடையில் சரவணன் அஞ்சலியும் பேசி சிரித்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு அவர்கள் இருவரும் ஒரே பைக்கில் போக அதை பார்த்து மயில் அழுது கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications