ஜாதியை சொல்லி பிரச்சனை.. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்! ஆனால், ப்ளூ சட்டை மாறன் இப்படி கலாய்ச்சிட்டாரே
சென்னை: நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பேசிய சாதி தொடர்பான கருத்து சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில், தற்போது திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள பதிவு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

என்ன நடந்தது?
பவன் கல்யாண் நடித்த Ustaad Bhagat Singh படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்த்திபன், தன்னை அறிமுகப்படுத்தும் போது "நான் ஒரு நாயுடு அப்பாயி" என்று கூறியிருந்தார்.
இந்த ஒரு வார்த்தை தான் தமிழகத்தில் பெரிய சர்ச்சையாக மாறியது. "தமிழ்நாட்டில் சாதி பற்றி பேசாத நீங்கள், அங்கு சென்று இப்படிச் சொல்வது ஏன்?" என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
இரண்டு மாநிலம்
தமிழ் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்த இந்த பேச்சுக்கு, ஆந்திராவில் வேற மாதிரி ரியாக்ஷன் கிடைத்தது. அதே மேடையில் பவன் கல்யாண் பற்றி "அவர் அடுத்த முதல்வர் ஆகுவார்" என்று பார்த்திபன் கூறியதும், அங்குள்ள ரசிகர்கள் கைதட்டி வரவேற்றனர். இதனால், ஒரே பேச்சுக்கு இரண்டு மாநிலங்களில் முற்றிலும் வேறுபட்ட எதிர்வினை உருவானது.
மன்னிப்பு கேட்டும் சர்ச்சை குறையவில்லை
இந்த விவகாரம் பெரிதாகியதும், பார்த்திபன் சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்தார். "எந்த உள்நோக்கமும் இல்லாமல் தான் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். இனி இப்படிச் சம்பவம் நடக்காது" என்று அவர் கூறியிருந்தாலும், ரசிகர்கள் அதை முழுமையாக ஏற்க தயாராக இல்லை.
ப்ளூ சட்டை மாறன்
இந்நிலையில், திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பதிவில், "எப்போதாவது தவறினால் பரவாயில்லை... அடிக்கடி தவறுது" என்று சுருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இந்த ஒரு வரி பதிவு தான் தற்போது வைரலாகி வருகிறது. அவர் ஏற்கனவே பலமுறை பார்த்திபண்ணி சீண்டி போஸ்ட் போட்டு இருக்கிறார். அந்த வரிசையில் இப்போதும் அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். இதனால் சிலர் பார்த்திபனே மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்து வைத்து விட்டார். இவர் எதற்கு இதை சீண்டி பார்க்கிறார் என்று ப்ளூ சட்டை மாறனை திட்டி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் இரு தரப்பு கருத்து
இந்த பதிவை ஆதரித்து சிலர், சில நாட்களுக்கு முன்புதான் திரிஷா பற்றி பேசி சர்ச்சை உருவானது அது முடிவதற்குள், "மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்குவது தவறே" என்று கூறுகின்றனர். மற்றொரு தரப்பு, "ஒரு மனிதர் மன்னிப்பு கேட்ட பிறகும் தொடர்ந்து விமர்சிப்பது சரியா?"
என்று கேள்வி எழுப்புகின்றனர்.
தொடர்ந்து சர்ச்சையில் பார்த்திபன்
சமீப காலமாகவே பார்த்திபன் பெயர் பல சர்ச்சைகளில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னதாக திரிஷா கிருஷ்ணன் தொடர்பான கருத்து, அதன் பின்னர் சாதி பேச்சு-இப்படி தொடர்ந்து விவாதங்களில் சிக்கியுள்ள நிலையில், இந்த புதிய விமர்சனமும் அந்த பட்டியலில் சேர்ந்து விட்டது.
ஒரு மேடையில் சொன்ன ஒரு வரி... அதற்கு பிறகு வந்த விளக்கம்... இப்போது அதற்கு மேலாக வரும் விமர்சனங்கள்... இப்படி பார்த்திபன் விவகாரம் இன்னும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதில் ப்ளூ சட்டை மாறன் பதிவு புதிய தீப்பெட்டியாக மாறியுள்ளது. இந்த சர்ச்சை இங்கேயே முடிவடையுமா? அல்லது இன்னும் நீளுமா? என்பதே இப்போது கேள்வியாக உள்ளது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications