பெண் புலியாக மாறிய முல்லை...பயப்படாமல் ரசிக்கும் ரசிகர்கள்
சென்னை: மிரட்டும் உடையில் கலக்கும் பார்வையால் ரசிகர்களை பாடாய் படுத்தி இருக்கிறார் காவியா அறிவுமணி.
பார்வையில் மிரட்டல் இருந்தாலும் ரசிகர்களின் கண்களுக்கு குளுமையாகத்தான் இருந்து கொண்டிருக்கிறாராம்.
அடடா இப்படி ஒரு பார்வை பார்த்தால் எத்தனை முறை வேண்டுமென்றாலும் பார்க்கலாமே என ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

பதறிப் போச்சி மனசு
புலியின் தோலை போன்ற உடையை போர்த்திக்கொண்டு இருக்கும் காவ்யா அறிவு மணியை பார்த்ததும் ரசிகர்கள் கலாய்க்க ரெடி ஆகி விட்டார்கள். எத்தனை முறைதான் இவர் விதவிதமாக போட்டோ சூட்களை நடத்திக் கொண்டிருந்தாலும் அதற்கு ரசிகர்கள் சலிக்காமல் கமெண்ட்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். இவரும் போட்டோ சூட்டை விடுவது போல இல்லை. சீரியலில் மட்டும்தான் இவர் அமைதியின் சொரூபமாக இருக்கிறாரே தவிர சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதுவும் இன்ஸ்டாகிராமில் இவர் அப்லோடு பண்ணும் போட்டோஸ்கள் எல்லாம் வேற லெவல் வைரலாகி வருகிறது. ரசிகர்களின் மனதை அறிந்து தன்னுடைய திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கும் காவியாவை சுற்றி வரும் ரசிகர்கள் அதிகம் தான்.

வேலூர் பொண்ணு
வேலூரில் பிறந்து வளர்ந்த காவியா அறிவுமணி சென்னையில் காலேஜ் படிப்பை முடித்ததும் அப்படியே மாடலிங்கில் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்துவிட்டார். ஆரம்பத்தில் பல ஷாட் ஃபிலிம்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் அதற்குப் பிறகு பல விளம்பரங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலிலும் நடித்துக்கொண்டிருந்தார். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் இதற்கு முன்பு இதே கேரக்டரில் விஜே சித்ரா நடித்துக்கொண்டிருந்தார். அவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டதும் அவருடைய கேரக்டரில் இவர் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர் புது முல்லை
ஆரம்பத்தில் முல்லை கேரக்டர் இவருக்கு செட்டாகாது என்று எண்ணிக்கொண்டிருந்த ரசிகர்கள் கூட தற்போது இவருடைய நடிப்பை பார்த்து அப்படியே கேரக்டராக மாறிவிட்டார் என்று கூறி வருகின்றனர். தொடர்ந்து விஜய் டிவியில் கலக்கி கொண்டிருக்கும் இவர் சினிமாக்களில் கதாநாயகியாக வரவேண்டும் என்பதுதான் இவருடைய ஆசையாம். அதற்காக பல மாடலிங் போட்டோ சூட்களையும் நடத்திக்கொண்டிருக்கிறார். எத்தனை நாளைக்குத்தான் சீரியலில் கதாநாயகியாக வலம் வருவது?? விரைவில் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்று இவரை விடவும் இவருடைய ரசிகர்கள் அதிகமாக ஆசைப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ரசிகர்களின் ஆசை வாய்ப்பு வந்ததும் நிறைவேறும் என்று இவரும் கூறியிருக்கிறார்.

புள்ளி போட்ட பனியன்
இவர் என்னதான் காலேஜில் சுட்டிப் பெண்ணாக வலம் வந்து கொண்டிருந்தாலும் சீக்கிரத்தில் யாருடனும் அதிகமாக மிங்கில் ஆகிவிட மாட்டாராம். ஆனால் செட் ஆகிவிட்டால், இவரை போல வேறு யாரும் இல்லை என்று சொல்ல வைத்து விடுவாராம். அந்த அளவிற்கு சுட்டி தனத்தாலும் அடுத்தவர்களை கலாய்ப்பதும் கெட்டிக்காரி தான் இவர் எடுக்கும் போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது இவருடைய வழக்கம். இவர் பதிவிட்டதும் அதை வைரல் ஆக்குவது இவருடைய ரசிகர்களின் வழக்கம். இப்படியே தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் இவருடைய போட்டோஸ்கள் செம வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது, என்ற நிலையில் லேட்டஸ்டாக இவர் புள்ளி போட்ட பனியன் போட்டுக்கொண்டு கையை தூக்கி கலக்கல் போஸ் கொடுத்திருக்கிறார். இதை பார்த்ததும் வழக்கம்போல லைக் பட்டன் தெறித்து வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications