என்னடா பேய்க்கதையெல்லாம் ஓட்டறீங்க.. ஷாக்கான ரசிகர்கள்.. செந்தூரப்பூவே!

Subscribe to Oneindia Tamil

சென்னை : செந்தூரப்பூவே சீரியலை திடீரென்று வேற லெவலில் கலாய்த்து வரும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்களைப் போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.

ஜீ தமிழில் சீரியலை இந்த சீரியலிலும் காப்பி பண்ணிட்டீங்களா என்று பலர் கேட்டு வருகின்றனர். காரணம் சீரியல் இப்போது வேறு ரூட்டில் பயணிக்க ஆரம்பித்துள்ளது.

ஃப்ளஷ்பேக்குக்கு பிறகு கதை சூடு பிடிக்குமா என்று பார்த்தால் இப்போ கதை வெறித்தனமால்ல மாறி இருக்கு .. இனி அருணாவின் ஆட்டம் வேற லெவல் தான் போல.

புது வாசத்தில் செந்தூரப்பூ

புது வாசத்தில் செந்தூரப்பூ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் திரைப்பட நடிகரான ரஞ்சித் துரைசிங்கம் கேரக்டரில் நடித்து வருகிறார். அவருக்கு முதல் மனைவியாக பிரியா ராமனும் இரண்டாவது மனைவியாக ஸ்ரீநிதி மேனனும் அதுமட்டுமல்லாமல் சகோதரியாக யமுனா சின்னத்துரை மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதில் துரை சிங்கத்தின் முதல் மனைவியான அருணா இரண்டாவது பிரசவ நேரத்தில் இறந்து விடுகிறார். அருணாவை காதலித்து திருமணம் செய்த துரைசிங்கம் அவருடைய இறப்பிற்கு பிறகு வாழ்க்கையில் எந்தப் பிடியும் இல்லாமல் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து வருகிறார்.

குடும்பத்துக்காக தான் அதை பண்ணுகிறார்

குடும்பத்துக்காக தான் அதை பண்ணுகிறார்

குழந்தைகளின் நலனை கருதி அவருடைய இரண்டாவது குழந்தையின் மீது பாசமாக இருக்கும் ரோஜாவை குடும்ப உறுப்பினர்களின் வற்புறுத்தலின் காரணமாக திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் ரோஜா ஏற்கனவே ஒருவரை காதலித்து அவருடைய குழந்தை வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ரோஜாவின் காதலன் உயிரோடு இல்லை என்பதால் குழந்தையை கொல்ல மனமில்லாமல் குழந்தைக்காக அவரும் வாழ்ந்து கொண்டிருப்பதால் துரை சிங்கத்தை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் துரை சிங்கத்தின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று அறிந்துகொள்ள ஆசைப்பட்டார். அப்போதுதான் துரை சிங்கத்தின் சகோதரி துரை சிங்கத்தின் முதல் திருமணத்தையும் அதற்குப் பிறகு அவர் அருணா எப்படி இறந்தார் என்பதை பற்றியும் கூறியிருக்கிறார்.

ஆரம்பமான அருணாவின் ஆட்டம்

ஆரம்பமான அருணாவின் ஆட்டம்

அருணாவின் மரணத்தை கேட்டு பீல் பண்ண ரோஜாவும் அவருடைய குழந்தைகளுக்காகவும் , துரை சிங்கத்திற்காகவும் அவருடைய மனைவியாக வாழவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார். இந்த நிலையில்தான் அருணாவின் நினைவு நாள் அன்று அவருடைய கல்லறைக்கு சென்று குடும்பமே சாமி கும்பிட்டு விட்டு வரும்போது ராஜேந்திரனின் கண்களுக்கு மட்டும் இனி அருணாவின் ஆட்டம் ஆரம்பம் என்று தெரிகிறது. அதனால் கொஞ்சம் பயந்து போன ராஜேந்திரன் தன்னுடைய மனைவியிடமும், ஐஸ்வர்யா விடவும் கூறினாலும் அவர்கள் நம்பாமல் வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட்டு விட்டு வந்து விட்டார்கள்.

மிரட்டும் பிரியாராமன்

மிரட்டும் பிரியாராமன்

ரோஜாவை கொல்வதற்காக அடியாட்களை செட் பண்ணி வைத்திருக்கும் ராஜேந்திரன் இரவு நேரத்தில் அந்த அடியாளை வர வைத்திருக்கிறார். அவன் அரிவாளை தூக்கும்போது ரோஜா திரும்பிப் பார்க்கிறார் .அப்போது ரோஜாவின் முகத்தில் அருணா தெரிகிறார். ரோஜாவையும் குடும்பத்தையும் பாதுகாப்பது தான் என்னுடைய வேலை என்னுடைய குழந்தை கூட என்னால் விளையாட முடியாமல் இந்த குடும்பத்தை விட்டு பிரிச்சி விட்டீர்களா அதற்கு இனி தான் உங்களை பழி வாங்கப் போகிறேன் என்று செமையாக பேய் கெட்டப்பில் மிரட்டியிருக்கிறார் . இந்த பிரேமோவை பார்த்ததும் ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர்.

இனி அப்போ பேயாட்டம் தான்

இனி அப்போ பேயாட்டம் தான்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியல் போலவே நீங்களும் ஆரம்பித்துவிட்டீர்களா என்று வண்டி வண்டியாக கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பலர் என்ன ஜீ தமிழ் வாசம் விஜய் டிவியில் வீசுகிறது. சொந்தமாக சீரியல் எடுக்க தெரியாதா இல்ல சீரியல் கதை மறந்து விட்டதா என்று பல்வேறு கமெண்டுகளை போட்டு வருகின்றனர். இப்போதைக்கு சமூகவலைதளத்தில் செந்தூரப்பூவே சீரியல் ப்ரோமோ தான் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் எப்படியோ போங்க பிரியா ராமன் மட்டும் தினமும் சீரியலில் காட்டுங்க போதுமென்று கூறியிருக்கிறார்கள். ஆனால் இன்னும் ஒரு சிலரோ என்ன அகிலாண்டேஸ்வரி பேயா மாறிட்டாங்களா என்று ஷாக் கொடுத்து இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+