மீண்டும் திருமணமா?? ரசிகர்களின் கேள்விக்கு குதர்க்கமாக பதில் கேள்வி கேட்ட ரச்சிதா
சென்னை: சொல்ல மறந்த கதை சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ரச்சிதா ரசிகர்களிடம் கேட்ட கேள்வி பலரையும் யோசிக்க வைத்துள்ளதாம்.
மணப்பெண் அலங்காரத்தில் ரட்சிதா தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளத்தில் பலரும் பல வதந்திகளை கிளப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் தன்னுடைய கேரக்டரை பற்றி ரசிகர்களிடம் ரச்சிதா கேள்வி கேட்டிருக்கிறார்.

மனதை பறித்தவர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலமாக பட்டித் தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து தற்போது வரைக்கும் மீனாட்சி ஆக பலருடைய மனதிலும் வலம் வந்து கொண்டிருக்கும் ரச்சிதா தற்போது ஜீ தமிழ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். பல சீசன்களாக மீனாட்சி ஆக வலம் வந்த ரச்சிதா தற்போது சாதனாவாக ரசிகர்களின் மனதில் பதிந்துள்ளார். ரச்சிதா மகாலட்சுமி முதல் முறையாக பிரிவோம் சந்திப்போம் சீரியலில் அறிமுகமாகி இருந்தார். இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது பிசியாக சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆறுதல் தந்த கேள்வி
திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் தொடர்ந்து கதாநாயகியாகவே நடித்துக் கொண்டிருந்த ரச்சிதா தற்போது திருமண வாழ்க்கையில் இருந்து விலகப் போகிறார் என்று பல செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ரச்சிதா வெளியிட்ட திருமண அலங்காரத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் என்ன இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? ? என்று குழம்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் ரச்சிதா தன்னுடைய வீடியோவிற்கு கேப்ஷனாக இந்த மாதிரி சாதனாவை பார்ப்பதற்கு யாருக்கெல்லாம் பிடித்திருக்கிறது?? என்று கேட்டிருக்கிறார். இதை பார்த்த பிறகு தான் பலருக்கு மனது அமைதி அடைந்ததாம்.

ரசிகர்களின் அன்பு கட்டளை
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இது சொல்ல மறந்த கதை என்னும் சீரியலின் கதாநாயகியாக ரச்சிதா நடித்து வருகிறார். அதில் அவருடைய கணவர் இறந்து விடுவதால் இரண்டு குழந்தையோடு வசித்து வரும் இவர் தற்போது அவர் வேலை செய்யும் ஆபீஸில் பங்க்ஷனில் கலந்து கொள்வதற்காக திருமண உடை அலங்காரத்தில் இருக்கிறார். இந்த சீரியலில் சாதனா கேரக்டர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் போது இவரை இப்படி பார்த்த ரசிகர்கள் பலர் சீரியலாக இருந்தாலும் அதில் நீங்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று பலர் அன்பு கட்டளைகளை இட்டு வருகிறார்கள்.

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
சரவணன் மீனாட்சி சீரியலில் பாவாடை தாவணியில் பல சீசன்களாக பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது இரண்டு குழந்தைகளின் அம்மாவாக ரச்சிதாவை பார்த்ததும் ஆரம்பத்தில் அதிர்ச்சி அடைந்து இருந்தாலும் போகப்போக கதையின் அம்சம் அனைவரையும் கவர்ந்ததாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் ரச்சிதாவை மீண்டும் மணப்பெண் அலங்காரத்தில் பார்த்ததும் ரசிகர்கள் கதையில் பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது என்று எதிர்பார்த்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை கவிதைகளாக கொட்டுகிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications