இப்பதான் க்ளோஸ் ஆக நினைத்தேன் அதுக்குள்ள வந்துட்டியா?? முகத்துக்கு நேராக அபிஷேக்கை கலாய்த்த ராஜு
சென்னை: அபிஷேக் வருகையால் தன் மனதில் ஏற்பட்ட தாக்கத்தை முகத்துக்கு நேராக ராஜு கூறியிருக்கிறார்.
பிரியங்காவுடன் குளோஸ் ஆக நினைத்த நேரத்தில் அபிஷேக் ரீ-என்ட்ரியை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறாராம் ராஜு.
மீண்டும் வந்த முதல் நாளே முதல் ப்ரமோவில் இடம்பிடித்துவிட்டார் அபிஷேக் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ப்ரமோவில் வந்த அபிஷேக்
இன்றைய ப்ரமோ வருவதற்கு அதிக நேரம் ஆகிவிட்டதால் ப்ரமோவில் அப்படி என்னதான் இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் முதலில் ப்ரமோவில் வழக்கம்போல ரீ என்ட்ரி கொடுத்த அபிஷேக் கொடுத்துவிட்டார். இனி கண்டெண்ட்க்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே முதல் நாளே தன்னுடைய பர்பாமன்ஸை காட்ட ஆரம்பித்து விட்டார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மிரண்டு போன ரசிகர்கள்
அபிஷேக்கின் ரீ- என்ட்ரி ரசிகர்களுக்கு மட்டுமலலாமல் சக போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அதனால்தான் முகத்துக்கு நேராக அபிஷேக்கிடம் ராஜூ தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அபிஷேக் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த நாள் வரைக்கும பிரியங்கா அபிஷேக் இடம்தான் நெருக்கமாகவும், பாசமாகவும் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று சக போட்டியாளர்கள் குற்றம்சாட்டி கொண்டிருந்தனர். இந்த நிலையில் அபிஷேக் வெளியேறியது சக போட்டியாளரகளுக்கு கொஞ்சம் ஆறுதல் கொடுக்கும் விதமாக இருந்திருக்கும் போல. தற்போது அபிஷேக்கின் என்ட்ரியை பார்த்ததும் மிரண்டு போயிருக்கிறார்கள்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
அபிஷேக் இந்த நிகழ்ச்சியில் இருந்த வரைக்கும் அவர் எப்போது வெளியே செல்வார் என்று பல ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் வெளியே சென்ற பிறகு நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் இல்லை என்று பலர் கருத்து தெரிவித்து கொண்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் அபிஷேக் வெளியே சென்ற பிறகுதான் ப்ரியங்கா தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார் என்று கூறிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் ராஜு, பிரியங்காவிடம் தற்போது நன்றாக பழக தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் அபிஷேக் வந்ததும் இனி எப்படி இருக்கப் போகிறார்களோ என ரசிகர்கள் கூறிவந்தனர்.

அபிஷேக்கை கலாய்த்த ராஜு
ரசிகர்களின் மனக்கருத்து ராஜுவுக்கும் தெரிந்து விட்டது போல. அதையேதான் ராஜுவும் இன்றைய ப்ரமோவில் கூறியிருக்கிறார். நான் இப்போது தான் உன்னுடைய ப்ரண்ட் உடன் க்ளோஸ் ஆக தொடங்கினேன் அதுக்குள்ள வந்துட்டியா?? என்கிற பாணியில் பேசிக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்ததும் அருகில் இருந்த நிரூப் இனி பிரியங்காவிடம் இருந்து விலகியே இரு என்று உனக்கு வார்ன்ங் கூறுகிறார் என்று திரி ஏத்தி கொண்டிருக்கிறார். அதைப் பார்த்ததும் அபிஷேக் இனி அப்படி இருக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்ததும் நெட்டிசன்கள் வழக்கம்போல கலாய்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications