ஏற்கனவே எரிந்து முடித்த நெருப்பை திரும்பவும் ஊதி பற்ற வைத்திருக்கிறாரா!? ரம்யா கிருஷ்ணன்
சென்னை: . நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தாமரையின் சிரிப்பை அழகாக இருக்கு..!என்று சொன்ன ரம்யா கிருஷ்ணன்,அவரின் கோபத்தை பார்க்க நினைத்திருப்பார் போல..!?
"அன்னைக்கு நடந்ததற்கு என்ன காரணம்?." என்று பழைய கதையை தோண்டி மீண்டும் பிரியங்காவிற்கும் தாமரைக்கும் விரிசலை உண்டு பண்ணி விட்டார்.
தனக்கு தற்பொழுது கொஞ்சம் ஞானம் வந்துவிட்டதாக சொன்ன தாமரையும் தன் தகுதி பற்றி பிரியங்கா பேசியதை நினைவூட்டியது உணர்ச்சி பொங்க கொட்டிவிட்டார்.

ஓவர் அலப்பரை
பிரியங்கா மீது ஏற்கனவே அனைவர் மீதும் அதிகாரம் செலுத்துகிறார் என்றும், பிரியங்கா விஜய் டிவியின் செட் பிராப்பர்ட்டி என்பதால் ரசிகர்கள் ஆதரவு இருப்பதாக எண்ணிக்கொண்டு சொந்த மைதானத்தில் விளையாடும் எண்ணத்தில் ஓவர் அலப்பரை செய்வதாகவும் அவர் மீது விமர்சனங்கள் இருந்து வந்தது.

சர்ச்சைகளையும், விமர்சனங்களையும்
இந்த நிலையில் கிராமத்தின் நாடக கலைஞர்களின் முகமாக பங்கு பெற்றுள்ள தாமரையைப் பார்த்து உனக்கு இந்த வீட்டிற்கு 'தலைவராகும் தகுதி இல்லை' என்று கூறியது அப்பொழுதே பிரியங்கா மீது பல்வேறு விதமான சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் கிளப்பியது. மீம் கிரியேட்டர்கள் பிரியங்காவை வைத்து மீம்ஸ்களை பறக்க விட்டனர்.

கமல் பஞ்சாயத்து
இதுகுறித்து கமல் முன்னாடி பஞ்சாயத்து வைத்து ஓரளவு கமுக்கமாக பிரச்சனை முடிக்கப்பட்டது. தற்பொழுது கமலுக்காக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரம்யா கிருஷ்ணன், மீண்டும் அந்தப் பிரச்சனையை குறித்து கிளப்பியதும்.. அது குறித்து விளக்கம் கொடுத்த தாமரையின் பேச்சை கேட்டு பிரியங்கா மட்டுமின்றி பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் வாயடைத்துப் போயினர்.தாமரையின் கருத்துக்களுக்கு வரவேற்புகள் குவிந்து வருகின்றன. அனைவரையும் ஒருங்கிணைத்து, பழிவாங்கும் எண்ணம் இல்லாத ஒருவரே தலைவருக்கு தகுதியான நபர், என்று கூறும் பிரியங்கா தான் அவ்வாறு இருக்கிறோமா..!? என்று சுயபரிசோதனை செய்து பார்க்குமாறு நெட்டிசன்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

தலைவர் தகுதி
எல்லாவற்றிற்கும் ஹைலைட்டாக தலைவர் தகுதி குறித்து பிரியங்காவிற்கு தாமரை கொடுத்த பதிலடி தான் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. சாதாரணமாக ஊர் தலைவர் தேர்தலுக்கு போட்டியிடும் நபர் அனைவருக்கும் பிடித்த நபராகவா இருக்கிறார்!!? அனைத்து தகுதியும் வாய்ந்தவராக தான் இருக்கிறாரா!? அவர்தான் தலைவராக வருகிறாரா!? என்று நெற்றிப்பொட்டில் வைத்தாற்போல் தாமரை கேட்ட கேள்விக்கு அப்பொழுது கைத்தட்டல்கள் பறந்தன. தாமரை யதார்த்தமாக கூறியிருந்தாலும் உண்மையைத்தான் கூறியிருக்கிறார்.தகுதி உள்ளவர்தான் தலைவர்கள் ஆகிறார்களா!? எல்லா தகுதியும் உள்ளவர்கள் போட்டியிட்டாலும் அவர்களை எதிர்த்தும் போட்டியிட தான் செய்வார்கள்.என்கிற காலச் சூழ்நிலைக்கு ஏற்ற கருத்தை போகிற போக்கில் சாதாரணமாக சொல்லிவிட்டார்.












Click it and Unblock the Notifications