அதை இங்க எதிர்பார்க்காதீங்க... வேற மாதிரி அழகில் மிரட்டும் ரித்திகா
சென்னை: பாவாடை தாவணியில் கலக்கும் ரித்திகாவை பார்த்து அசந்துபோன ரசிகர்களால் இன்ஸ்டாகிராமே ஆட்டம் கண்டு விட்டது.
அடடா என்று பார்ப்பவர்கள் எல்லாம் அசந்து போகிற மாதிரி அழகால் அனைவரையும் கட்டிப் போட்டு விட்டாரே.
மாடர்ன் உடையில் எத்தனைபேர் போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருந்தாலும் ரித்திகாவின் இந்த போட்டோவுக்கு ஈடு ஆகுமா என்று ரசிகர்கள் ஆரவாரம் விட்டு வருகின்றனர்.

கலக்கும் குயின்
என்னடா இது!!! விநாயகர் சதுர்த்தி அதுவுமா இன்ஸ்டாகிராமர்களெல்லாம் திருந்தி விட்டார்களா!!!என்று நினைக்கத்தோன்றும் வண்ணம் இருக்கிறது ரித்திகா போட்ட போஸ்ட்க்கு ரெஸ்பான்ஸை பார்க்கும்பொழுது. ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நெகட்டிவ் கமெண்ட் கூட இல்லாத போஸ்ட் ரித்திகா போஸ்டரா தான் இருக்கும் என்று சொல்லத் தோன்றுகிறது. ரித்திகா போஸ்ட்டை பார்த்ததும் நம் நெட்டிசன்கள் சாத்வீகமாக மாறிவிட்டனர் போல..!!!

ஆப் சாரியில் அசத்தல்
பச்ச தமிழ் பெண்ணான ரித்திகா ஆப் சாரியில் போட்ட போட்டோ சும்மா லைக்குகளை அள்ளு அள்ளு என்று அள்ளி வருகிறது. டீன் ஏஜ் பெண்களுக்கு இருக்க வேண்டிய அத்தனை அழகான குவாலிட்டிகளும் பக்காவாக இருக்கும் ரித்திகாவிற்கு, அவரது அழகான புன்னகையுடன் கூடிய காந்தக் கண்கள் தான் பிளஸ். பக்கா ஹீரோயின் மெட்டீரியலான ரித்திகா வெள்ளித்திரை பக்கம் வந்தால் கண்டிப்பாக சினேகா விட்டுச்சென்ற காலியிடத்தை ரீப்ளேஸ் செய்துவிடுவார். அந்த அளவிற்கு அத்தனை பொருத்தமும் அம்சமாக பொருந்துகிறது அவருக்கு.

ராஜா ராணியில் அறிமுகம்
விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிய ராஜா ராணி சீரியலில் வைஷாலி நடித்து வந்த 'வினோதினி'கேரக்டரில் பாதியில் நடிப்பதற்காக வந்தவர்தான் ரித்திகா. அத் தொடரின் மூலம் தன் முகத்தை தமிழ் மக்களுக்கு காட்டிய ரித்திகா, அதைத்தொடர்ந்து விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் 8, மற்றும் நம்மவர் கமல்,போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு தன் முகத்தை மீண்டும் மீண்டும் காட்டி தனக்கென்று ஒரு ஃபேஸ் வேல்யூவை உருவாக்கிக் கொண்டார். ஏற்கனவே பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி கொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒயில்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த ரித்திகா அதன் மூலம் தன்னை ஒரு படி மேலே ரீச் செய்துகொண்டார்.

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை
விஜய்டிவி பொதுவாக ஒரு நிகழ்ச்சியை டிஆர்பி ஏற்றுவதற்காக கண்ணீர்,காதல், காமெடி,ஆகிய மூன்று ஊசிகளை தன்வசம் வைத்திருப்பார்கள். அவ்வப்போது இவற்றில் ஏதேனும் ஒன்றை போட்டு டிஆர்பி குறையாமல் பார்த்துக் கொள்வார்கள். அப்படித்தான் ரித்திகா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கொஞ்சம் விறுவிறுப்பு ஏற்ற,'ரித்திகாவிற்கு காதல்'என்கிற கான்செப்ட்டை வச்சி, கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக,கலக்கப்போவது யாரு பாலாவுடன் ரித்திகாவிற்கு காதல் என்று கொஞ்சம் புகைச்சலை உண்டு பண்ணினார்கள்.ஆனால் கொஞ்சம் சுதாகரித்துக் கொண்ட ரித்திகா கொஞ்சம் கோபத்துடன், வெளிப்படையாகவே நாங்கள் எல்லாம் ஒரே இடத்தில் வேலை பார்க்கிறோம்,ஒரே ஃபீல்டில் இருக்கிறோம் அவ்வளவுதான். எங்களுக்குள்ள வேற எதுவும் இல்லை என்று சொல்லி எஸ்கேப் ஆகி அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இருந்தாலும் நம்ம நெட்டிசன்கள் 'நெருப்பில்லாமல் புகையாது'என்று அதை விடுவதாக தெரியவில்லை.

ஹோம்லி பேஸ் செட் ஆகிவிட்டது
'ஹாட்' போட்டோக்கு மட்டும் இல்ல, பார்க்கிற மாதிரி 'க்யூட்' போட்டோ போட்டாலும் நம்ம ரசிகர்கள் அத தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்ககிறதை ரித்திகாவின் போஸ்ட்டை பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஹோம்லி ஃபேஸ் இருக்கும் ரித்திகா இதை இப்படியே தொடர்ந்து(continue)பண்ணா நல்லா தான் இருக்கும்.
விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் 'சாக்லேட்' என்ற தொடரில் லீடு ரோலில் நடிக்கும் ரித்திகா, அந்தத் தொடரின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்று தன் வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி மேலும் முன்னேற இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் ரசிகர்களுடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்.












Click it and Unblock the Notifications