பூக்கள் கூட்டத்திற்குள் சரண்யா பொன்வண்ணன் இளையமகளின் எங்கேஜ்மென்ட்! மாப்பிள்ளை இவ்ளோ பெரிய இடமாமே!
சென்னை: நடிகை சரண்யா இயக்குனராகவும் நடிகராகவும் பிரபலமடைந்த பொன்வண்ணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இரண்டாவது மகளுக்கு சில நாட்களுக்கு முன்பு காலமாக எங்கேஜ்மென்ட் நடைபெற்றிருக்கிறது. அப்போது எடுத்த வீடியோக்களும் புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சரண்யா பொன்வண்ணனின் இரண்டாவது மருமகன் யார் என்ற தகவலும் இணையத்தில் பரவி வருகிறது.
நடிகை சரண்யா பொன்வண்ணன் 80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகம் ஆகி இப்போது பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார். கலகலப்பான படமாக இருந்தாலும் சரி செண்டிமெண்ட் ஆன படமாக இருந்தாலும் சரி என்னுடைய கேரக்டர் அதில் கெத்தாக இருக்கும் என்று சரண்யா நிரூபித்துக் கொண்டிருக்கிறார். சினிமா துறையில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்று புதிதல்ல ஆனால் ஒரு சில தம்பதிகள் மட்டும் தான் மனம் ஒத்த தம்பதிகளாக திருமண பயணத்தில் மகிழ்ச்சியாக பயணித்து வருகிறார்கள். அதில் சரண்யா மற்றும் பொன்வண்ணன் தம்பதியும் உண்டு.

இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு சில வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இப்போது இரண்டாவது மகள் சாந்தினிக்கு நீலகிரி மாவட்டம் குன்னூரில் பிரம்மாண்டமாக செட் போட்டு எங்கேஜ்மென்ட் நடைபெற்றிருக்கிறது. அதிலும் இவர்களுடைய எங்கேஜ்மென்ட் வித்யாசமான முறையில் நடந்தது.
எங்கேஜ்மென்ட் நடந்த இடம் பெரிய மண்டபம் போல இல்லாமல் ஒரு ஓபன் கார்டனில் கண்ணாடி போன்ற செட்டு போட்டு, அதில் முழுக்க முழுக்க பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே மூத்த மகள் கல்யாணத்திலும் இதுபோல வைத்திருந்தாலும் அது சென்னையில் நடைபெற்றது. இப்போது குன்னூரிலும் மிகப்பிரமாண்டமாக இளைய மகளின் எங்கேஜ்மெண்டை சரண்யா செய்திருக்கிறார். என்னுடைய மகள் எங்கேஜ்மெண்டில் முழுக்க பூக்கள் இருக்க வேண்டும் என்று சரண்யா தான் ஆசைப்பட்டாராம்.
சினிமா துறையில் சரண்யா பல வருடங்களாக தொடர்ந்து வந்தாலும் தன்னுடைய இரண்டு மகள்களும் அவர்கள் ஆசைப்பட்டபடியே டாக்டர் படிக்க வைத்திருந்தார். இது கூட சில மாதங்களுக்கும் முன்பு பெரிதாக பேசப்பட்டது. சரண்யாவின் மூத்த மகள் எம்டி பட்டப்படிப்பை முடித்து பட்டம் வாங்கிய புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் பேசப்பட்டது.
இப்போது சரண்யாவின் இளைய மகளுக்கு அவர் ஆசைப்பட்ட மாதிரியே டாக்டர் மாப்பிள்ளை கணவராக வரப் போகிறாராம். சரண்யாவின் இளைய மகள் சாந்தினியின் வருங்கால கணவர் பெயர் டான் பிலிப். இவர் நீலகிரியை சார்ந்தவராம். அதனால் தான் இவர்களுடைய எங்கேஜ்மென்ட் கூட அங்கேயே நடத்தப்பட்டதாம். சரண்யா தரப்பிலிருந்து உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் மட்டும் இந்த பங்க்ஷனில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். மாப்பிள்ளை குடும்பத்தினர் தான் அதிகமாக கலந்து கொண்டார்களாம்.
தன்னுடைய மகளின் கல்யாணத்தையும் குன்னூரில் நடத்தி சென்னையில் ரிசப்ஷன் நடத்தப் போவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதேபோல சரண்யாவின் வருங்கால மருமகன் தான் தான் பிலிப் குடும்பம் நீலகிரியில் பெரிய அளவில் செல்வாக்கு உள்ள குடும்பம் என்று கூறப்படுகிறது. சரண்யா எப்படி தன்னுடைய தொழிலான நடிப்புத் துறையிலேயே கணவரை தேர்ந்தெடுத்தாரோ அதேபோல இப்போது சரண்யாவின் மகள் அவரைப் போலவே டாக்டர் மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.
சரண்யாவின் இளைய மகளுக்கு இப்போது இணையத்தில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். மகள் எங்கேஜ்மெண்டில் சரண்யா மற்றும் பொன்வண்ணன் மிகவும் ஜாலியாகவும், சந்தோஷமாகவும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications