நான் இறந்து போயிட்டேனா? கணவரோடு சண்டையா? வதந்திக்கு நச்சென விளக்கம் கொடுத்த செந்தில்- ராஜலட்சுமி
சென்னை: சோசியல் மீடியாவின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க சிலர் அதில் வரும் வருமானத்திற்காக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அதுபோலத்தான் மக்கள் இசை கலைஞர்களான செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி தம்பதி பற்றி சில நாட்களாக ஒரு வதந்தி செய்தி பரவி வந்தது. அது குறித்து இருவரும் ஆதங்கத்துடன் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
சோசியல் மீடியாவில் முன்பு போல இல்லங்க. இப்போது எந்த செய்தியை பார்த்தாலும் அதை நம்புறதுக்கே பயமா இருக்கு. இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கா? இல்லையா? என்ற கேள்வி தான் பலருடைய மண்டைக்குள் வரும். சிலர் நம்புற மாதிரியே பொய் செய்திகளையும் பரப்புறாங்க.

சில youtube சேனல்கள் பார்த்தீங்கன்னா தொடர்ந்து சினிமா துறையில் பிரபலமாக இருக்கிறவங்க வீட்டில் இறப்பு என்பது போல செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருப்பார்கள். பேக் செய்தி என்று தெரியாமல் சிலர் அந்த வீடியோவுக்கு கீழே கூட இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல மக்கள் இசை பாடகர்களாக பிரபலமான செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதி குடும்ப விஷயத்தில் ஒரு youtube சேனலில் தவறான செய்தி பரப்பப்பட்டது.
அதில் என்ன சொல்லி இருந்தாங்கன்னா, ராஜலட்சுமி இன்னொரு நபருடன் தவறான தொடர்பில் இருந்ததாகவும் அதனால் செந்தில் கணேஷ் அவரை அடித்து விரட்டிவிட்டார் என்றும் அதனால் மனமுடைந்த ராஜ லக்ஷ்மி தற்கொலை செய்து விட்டார் என்றும் பரப்பப்பட்டிருந்தது. இந்த செய்தியை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தம்பதி இருவருமே பல கோவில் திருவிழா மற்றும் முக்கியமான பல இடங்களிலும் பாடல் பாடி பிரபலம் அடைந்திருக்கிறார்கள்.
செந்தில் கணேஷ் ராஜலட்சுமிக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. அந்த நிகழ்ச்சியில் இவர்களுக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து இப்போது பல சினிமா பாடல்களுக்கும் பின்னணி பாடகர்களாக இருக்கிறார்கள். அதுபோல வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கும் கூட இவர்கள் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இப்ப இவர்களை பற்றி இப்படி ஒரு மோசமான அவதூறு பரப்பப்பட்டிருக்கிறது.
இந்த செய்தியை பார்த்து பதறிப்போன அவருடைய உறவினர்கள் எல்லாம் ராஜலட்சுமிக்கு போன் செய்து நலம் விசாரிக்கிறார்களாம். இப்படி எல்லாம் உங்களைப் பற்றி தப்பு தப்பா போட்டு இருக்காங்க நீங்க போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுங்க என்று சொல்லி இருக்காங்க. ஒரு கட்டம் வரைக்கும் பொறுத்து பார்த்து செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தங்களுக்கு நாளுக்கு நாள் போன் அதிகமாக வந்து கொண்டிருப்பதால் அவர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று இன்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள்.
அதில், நாங்க தான் உங்க மக்களிசை பாடகர்கள் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி. எங்களுக்கு பல ரசிகர்களும் உறவினர்களும் தொடர்ந்து போன் செய்து கொண்டு இருக்காங்க. நீங்க நல்லா இருக்கீங்களா? உயிரோட தான் இருக்கியா என்ற மாதிரி எல்லாரும் கேட்கிறார்கள். அதனால நான் ஒன்னே ஒன்னு தான் சொல்ல போறேன்... நாங்க நல்லா இருக்கிறோம், நான் உயிரோட தான் இருக்கிறேன். எங்க குடும்பத்திற்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்பதுதான் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
மேலும் இவர்கள் தொடர்ந்து பேசும்போது, சோசியல் மீடியாவில் தவறான செய்தி பரப்பி வராங்க. எங்களை பிரபலப்படுத்தியது சோசியல் மீடியாவும் செய்தி சேனல்களும் தான். ஆனால் இப்போ ஒரு சிலர் பணத்துக்காக எங்க குடும்பத்தை பற்றி தவறாக வீடியோ வெளியிட்டு இருக்காங்க. நாங்க இவங்கெல்லாம் இப்படித்தான் என்று இதை விட்டு விலகிப் போனாலும் எங்க குடும்பத்தில் இருக்கிறவங்க இதை பார்த்து ரொம்ப வருத்தப்படுறாங்க.
வயசானவங்க கஷ்டப்படுறாங்க இப்படி அடுத்தவங்கள பத்தி தப்பு தப்பா பேசி வர வருமானம் உங்களுக்கு உடம்பில் ஒட்டுமா? இப்படி ஒரு பணம் உங்களுக்கு தேவையா? இன்னொரு முறை இது போல நடந்தால் நாங்கள் கண்டிப்பாக சீரியஸா ஆக்ஷன் எடுப்போம் என்று இருவரும் பேசியிருக்காங்க. இவர்கள் அந்த வீடியோவில் சிரித்தபடியே பேசிக் கொண்டிருந்தாலும் மனதளவில் அதிகமாக வருத்தப்பட்டு இருப்பார்கள்.
இவர்களுடைய பிள்ளைகள் ஸ்கூலுக்கு போகும் போது அவருடன் கூட படிக்கிற குழந்தைகளோ.. அவர்களின் பெற்றோரோ இது பற்றி கேட்கும் போது அந்த குழந்தைகளின் மனநிலை எவ்வளவு வருத்தப்பட்டு இருக்கும்? நமக்கு வருமானம் வருகிறது என்பதற்காக அடுத்தவர்களின் குடும்பத்தை பற்றி கேவலப்படுத்தனுமா? என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications