கர்ப்பமாக இருக்கும் சன் டிவி சீரியல் நடிகை.. விஜய் டிவியில் நடிக்கும் கணவருக்காக உருக்கமான பதிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியலின் மூலமாக பலருக்கும் பரிச்சயமான திவ்யா தற்போது தன்னுடைய கணவருக்காக வெளியிட்ட பதிவு பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
தற்போது திவ்யா உதயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் நடித்து வருகிறார்.
செவ்வந்தி சீரியல் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் ரீமேக் தானாம்.

மகராசியில் பாரதி
சின்னத்திரை நடிகை ஆன திவ்யா ஸ்ரீதர் சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் தான். இந்த சீரியலிலும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த சீரியலில் இவர் பாரதி கேரக்டரில் நடித்திருப்பார். இவருடைய சொந்த ஊர் பெங்களூர் தானாம். ஸ்கூல் காலேஜ் எல்லாமே சொந்த ஊரில் படித்த இவர் மாடலிங்கில் அதிக ஆர்வமாக இருந்திருக்கிறார். அதன் காரணமாகவே காலேஜ் முடித்ததும் இவர் மாடலிங் பக்கம் திரும்பி இருக்கிறார். மாடலிங் பண்ணி கொண்டு இருக்கும்போது இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதல் முதலில் இவர் கன்னட திரைப்படங்களில் தான் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

கன்னட நடிகை
திவ்யா தொடர்ந்து கன்னட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு அங்கே வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் இவர் அடுத்த கட்ட நடவடிக்கையாக சீரியல் பக்கம் வந்த வாய்ப்புக்கு ஓகே சொல்லி இருக்கிறார். சீரியலில் இவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தாலும் முதல் முதலாக ஆகாச தீபா எனும் சீரியலில் தீபா எனும் கேரக்டரில் நடித்திருக்கிறார். முதல் சீரியலில் கதாநாயகியாக நடித்ததும் கன்னட ரசிகர்களுக்கு இவர் ஃபேவரைட் ஆகிவிட்டாராம்.

சீரியல் முதல் காதல் வரை
கன்னட சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது இரண்டாவது சீசனாக இருந்தாலும் இந்த சீசனில் இவர் மகாலட்சுமி என்னும் கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆனால் திடீரென்று இந்த சீரியலில் இருந்து இவர் விலகி இருக்கிறார். சீரியலில் இருந்து விலகி இருந்தாலும் இந்த சீரியலில் இவரோடு நடித்திருந்த அர்ணவுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டு இருக்கிறது. தங்களுடைய காதல் மூலமாக தங்களுடைய நடிப்பு எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாது என்பதில் கருத்தாக இருந்த இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை மறைத்து வைத்திருந்தார்களாம்.

மிளிரும் காதல்
அதற்குப் பிறகு திவ்யா தமிழ் கன்னடம் என பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தற்போது செவ்வந்தி எனும் சீரியலில் நடித்து வருகிறார். அதுபோல அர்ணவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலின் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் எளிமையாக திருமணத்தை செய்து முடித்திருக்கின்றனர். தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக ரசிகர்களுடன் பகிர்ந்து இருந்தார். அதற்குப் பிறகு தன்னுடைய காதல் கணவர் மீது தனக்கு இருக்கும் அன்பை அடிக்கடி போட்டோக்கள் வெளியிட்டு தெரிவித்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் திவ்யா தான் வெளியிட்ட போட்டோவுக்கு, "என் கடைசி நாள் வரை, நான் உன்னை நேசிப்பேன்" என்று கூறியிருக்கிறார். ரசிகர்கள் பலர் ஹார்ட்டின் பறக்க விட்டு எப்போதும் இது போலவே இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications