பெற்றோர் ஆசியுடன் தான் ஷபானாவின் திருமணம் நடைபெற்றதா??ஆதாரத்தை வெளியிட்ட ரசிகர்கள்
சென்னை: ஷபானாவின் திடீர் திருமணம் ரசிகர்களின் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஷபானா மதம் மாறி திருமணம் செய்து கொள்வதால் வீட்டில் பெற்றோர் சம்மதிக்கவில்லை என்று பல்வேறு புரளிகள் பரவிய வண்ணம் இருந்தது.
ஷபானா திருமணம் முடிந்து ஒரு சில நாட்களுக்கு பிறகு அவருடைய ரசிகர்கள் ஷபானாவின் அம்மாவின் சம்மதத்தோடு தான் அவருக்கு திருமணம் முடிந்து இருக்கிறது என்று ஆதாரத்தை வெளியிட்டு வருகின்றனர்.

இன்ப அதிர்ச்சி கொடுத்த திருமணம்
சின்னத்திரையில் முதல் சீரியலில் ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு வெள்ளித்திரை கதாநாயகிகளுக்கு இணையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷபானா, ஒரு சில நாட்களுக்கு முன்பு திருமணம் முடித்து இருக்கிறார். இவருடைய திருமணம் எப்போது என்று பல ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் இவர் கடைசி நேரத்தில் தெரியப்படுத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

கொட்டும் மழையில் திருமணம்
சென்னையில் தற்போது கன மழை பொழிந்து கொண்டு இருப்பதால் இந்த கொட்டும் மழையிலும் தன்னுடைய திருமணத்தை எளிமையாக இவர் நடத்துவதற்கு என்ன அவசரம் என்று ரசிகர்கள் அதிகமானோர் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் இவரைப் பற்றியும் இவரது திருமணத்தைப் பற்றியும் பல்வேறு வதந்திகள் கிளம்பிக் கொண்டிருந்தது.

ஷபானாவின் வைரல் வீடியோ
ஜீ தமிழின் செல்ல மருமகளாக இருக்கும் இவர் சென்னையின் மருமகளாக தான் வாழப் போவதாகவும், இதுவரைக்கும் இவர் சென்னையில் வேலைக்காக வந்து இந்த வேலை முடிந்ததும் சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர் திடீரென்று இங்கேயே செட்டில் ஆவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு திருமணம் என்பதே பல ரசிகர்களுக்கு தெரிய வந்தது.

ரசிகர்களின் குமுறல்
இவருடைய திருமணம் எளிமையான முறையில் நடந்ததாலும் இவர் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருப்பதாலும், இந்து பையனான ஆரியணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், அவரது வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் இல்லை அதனால்தான் திருமணம் எளிமையாகவும், விரைவாகவும் நடைபெற்றது என்றும் திருமணத்திற்கு ஷபானாவின் பெற்றோர் யாரும் வரவில்லை என்றும் பலர் வதந்திகளை கிளப்பி வந்தனர். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஷபானாவின் திருமணத்தில் அவருடைய தாய் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. வெள்ளை கலர் புடவையில் முன் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications