ஒரே ஸ்டெப்.. மொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த சிவாங்கி
சென்னை: ஒரே ஸ்டெப்பில் மொத்த ட்ரிப்பையும் கவர் செய்து சிவாங்கி போட்ட ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் அசந்து போயுள்ளனர்.
Recommended Video
க்யூட்டான சிவாங்கிக்கு ரசிகர்களின் வெயிட்டான வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.
சமூக வலைத்தளத்தில் இவருடைய வேற லெவல் டான்ஸ் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ஒரே டான்ஸ் ஸ்டெப்
ஒரே டேன்ஸ் ஸ்டெப்புல..!! வேற வேற லொகேஷன்ல.. தெறிக்க விட்டு... மொத்த ட்ரிப்பையும்.... கவர் பண்ற மாதிரி... சிவாங்கி போட்டு இருக்க வீடியோவிற்கு, சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ்..!! கிடைத்து வருகிறது.ஆஹா..!! என்ன ஒரு கிரியேட்டிவிட்டி..!!? என்று சிவாங்கியின் ரசிகர்கள், கமெண்ட் பாக்ஸ்களில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் சிதற...விட்டு வருகின்றனர்.

குக் வித் கோமாளியில் அசத்தல்
கேரளத்து வரவான சிவாங்கி விஜய் டிவியின் பிரபலமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளராக சின்னத்திரையில் அறிமுகமாகி சிறப்பாக பாடியிருந்தாலும், தான் பாடும் திறமையால் கூட அவர் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலமே இவர் மிகவும் பிரபலமாகவும், பெரும்பாலானோரால் விரும்ப படத்தக்க செலிபிரிட்டியாகவும் மாறினார். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் அஸ்வின் -சிவாங்கி- புகழ்,கூட்டணியில் இவர்கள் செய்த குறும்பு தனமும், கலாட்டா களும், குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் வெற்றியை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.

திரைப்படங்களிலும் கலக்கல்
சிவாங்கி ஆட்டிட்யூட்டை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் அவரைத் தங்கள் வீட்டுப் பெண்ணாக நினைத்து அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர். ரீசன்ட் ஆக சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவர் நடித்து வெளிவர இருக்கும் 'டான்' பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸின்போது கூட, சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு டாப்பு கொடுக்கும் அளவிற்கு சிவாங்கியை வரவேற்றும் வாழ்த்து தெரிவித்தும் கமெண்ட்டுகள் இணையத்தில் வலம் வந்தன. இவரும் ரியாலிட்டி ஷோ, சினிமா, பின்னணி பாடகி,ஆல்பம் சூட்டிங், என்று பிஸியாகவே தற்பொழுது இருந்து வருகிறார்.

வைரலாகும் டான்ஸ் வீடியோ
ஒரு ரிலாக்ஸ்காக துபாய் சென்ற இவர், அதைவைத்து போட்டுள்ள வீடியோ தான் செம க்யூட்டாக வைரலாகி கொண்டிருக்கிறது. வீட்டிலிருந்து பெட்டி படுக்கையுடன் கிளம்பிய சிவாங்கி, அந்த நேரம் தொடங்கி ஏர்போட் முதல் துபாயின் தான் சுற்றிய அனைத்து இடங்களிலும், வேறு..வேறு.. காஸ்ட்யூமில்.. ஒரே மாதிரியான டான்ஸ் ஸ்டெப் வைத்து டைமிங் மிஸ் ஆகாமல் குட்டி வீடியோவாக இவர் போஸ்ட் செய்துள்ளது பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், அழகாகவும், இருப்பதாகவும் செம கிரியேட்டிவிட்டி சென்ஸ், என்றும் சிவாங்கியை அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.அவரது ரசிகர்களிடம் எல்லாம் டெக்னாலஜி..பா என்று யாராவது எடுத்து சொன்னால் சரி தான்..!!!
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications