Siragadikka Aasai: சீரியல் நடிகை தற்கொலை! இறுதி சடங்கில் பார்த்த காட்சி! எமோஷனலாக பேசிய சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வந்த நடிகை ராஜேஸ்வரி நேற்று காலை தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் பழனியப்பன், ராஜேஸ்வரி இறப்பு பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார்.
சீரியல் நடிகை ராஜேஸ்வரி சிறகடிக்க ஆசை சீரியலில் மட்டுமல்லாமல் பாக்கியலட்சுமி சீரியலிலும் பாக்கியாவின் ஹோட்டலில் வேலை செய்யும் பெண்ணாக நடித்து இருந்தார். ராஜிக்கு சிறகடிக்க ஆசை சீரியலுக்கு பிறகு அவருக்கு தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நேரத்தில் தான் இவர் தவறான முடிவு எடுத்திருக்கிறார்.

இதுகுறித்து சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் பழனியப்பன் வெளியிட்ட வீடியோவில் பேசும் போது, நேற்று இறந்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ராஜேஸ்வரி என்னுடைய நண்பர். அவங்க ஏற்கனவே என்கூட சில வெப் சீரிஸிலும் நடிச்சிருக்காங்க, சீரியலிலும் படித்திருக்கிறோம். ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட நிறைய ரீல்ஸ் எடுத்து இருக்கிறோம். அவர் இப்போ எடுத்திருக்கிற முடிவு ரொம்ப கஷ்டப்படுத்துது.
தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசி தீர்த்து இருக்கலாம். அல்லது யாரிடமாவது மனது விட்டு பேசி இருக்கலாம். ஏன் இப்படி பண்ணுங்க என்று தெரியல. சிறகடிக்க ஆசை சீரியலுக்குப் பிறகு ராஜிக்கு நிறைய வாய்ப்பு வந்துட்டு இருந்து. இந்த நேரத்தில் இவர் இப்படி தற்கொலை பண்ணி இருக்கனுமா என்று வருத்தமாய் இருக்கு.
நேற்று அவருடைய இறுதி சடங்குக்கு போயிருந்தேன். அங்கு அவருடைய குடும்பத்தை பார்க்கும் போதும் வருத்தமாய் இருக்கு. அவருக்கு காலேஜ் முடித்த மகன் இருக்கிறான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொண்ணு இருக்கிறது. அவர்களை எல்லாம் விட்டுட்டு போகணுமா? 39 வயசு எல்லாம் ஒரு வயசா? இந்த வயசுலயே இவங்க இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாங்களே! இவங்க இன்னும் நிறைய நடிச்சு சாதித்து இருக்கணும் என்று உருக்கமாக பழனியப்பன் பேசி இருந்தார்.
மேலும் அவர் பேசும் போது, நான் எல்லாருக்கும் சொல்லுற விஷயம் ஒன்று தான். அது நடிகர் நடிகைகள்னு இல்ல, எல்லாருக்கும் குடும்ப பிரச்சினைகள் இருக்கு. வேலை பாக்குற இடத்துல பிரச்சனை இருக்கு. அதற்கெல்லாம் தற்கொலை தீர்வாகாது. இந்த உலகத்தில் பிரச்சனை இல்லாத ஆட்களே இல்லை. அதற்கு உட்கார்ந்து பேசி தீர்க்க வேண்டும். உயிரை எடுத்துக்குற சக்தி கடவுளுக்கு மட்டும் தான் இருக்கு, அதை யாரும் இப்படி பண்ணாதீங்க என்று வருத்தத்தோடு பேசி இருக்கிறார். அதுபோல பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த கம்பம் மீனாவும் ராஜுடைய இழப்பு குறித்த வருத்தத்தை பகிர்ந்து இருக்கிறார்.
-
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications