Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றி உளறிய மனோஜ்! கிரிஷை வீட்டை விட்டு துரத்தும் விஜயா.. முத்து எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் பதினொன்றாம் தேதிக்கான எபிசோடில் கிரிஷை மீண்டும் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று விஜயா ப்ளான் போட்டு இருக்கிறார். ஆனால் முத்துவும், மீனாவும் அதை தடுத்து இருக்கின்றனர். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், கிரிஷை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்காக விஜயா பார்வதியிடம் சொல்லி கிரிஷை தத்தெடுக்க சொல்கிறார். உடனே பார்வதியும் அவருடன் கதை சொல்லும் சந்தோஷும் வீட்டிற்கு வருகின்றனர். வந்து தங்களுடைய விருப்பத்தை சொல்கிறார்கள். அப்போது விஜயா தான் ஐடியா கொடுத்தார் என்ற உண்மையும் தெரிய வருகிறது. உடனே மனோஜ் கிரிஷ் வீட்டை விட்டு வெளியே போறது தான் சரி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

விஜயாவும் மனோஜும் பேசுவதை பார்த்து கோபமான முத்துவும் மீனாவும் கிரிஷ் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர். அப்போது உணர்ச்சி வசப்பட்ட மீனா கிரிஷ் இந்த வீட்டு பையன் அவன் எங்கே தான் இருப்பான் என்று சொல்லுகிறார். இதை கேட்டு ரோகினி அதிர்ச்சி அடைகிறார். பிறகு அவன் இந்த வீட்டு பையன் மாதிரி தான் அவன் எல்லாரிடமும் பழகுறான் அதனால அவன் இங்கேயே இருக்கட்டும் என்று சமாளிக்கிறார்.

பிறகு கிரிஷிடம் பார்வதி வீட்டுக்கு போக சம்பந்தமா? என்று கேட்க, அதற்கு கிரிஷ் நான் போக மாட்டேன், இங்கே தான் இருப்பேன் என்று சொல்கிறார். உடனே அண்ணாமலை அந்த சின்ன பையனுக்கு விருப்பம் இல்லாம இங்கிருந்து அனுப்ப முடியாது அவன் இங்கேயே இருக்கட்டும் என்று சொல்கிறார். அதற்கு மீனா இந்த பையனுக்கு பாட்டி இருக்காங்க அவங்க கிட்ட அனுமதி வாங்காமல் நாம யாருக்கும் தத்துக் கொடுக்க முடியாது என்று சொன்னதும் அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார்.

பிறகு பார்வதியும் அந்த சின்ன பையனுக்கு விருப்பம் இல்லாமல் நம்ம கூட வந்தா நல்லா இருக்காது விஜயா சொன்னதுக்காக தான் நானும் ஆசைப்பட்டு வந்தேன் என்று சொல்கிறார்.

பிறகு அவர்கள் போனதும் முத்து மீனாவை ஒரு இடத்திற்கு வருமாறு அழைத்துக் கொண்டு போகிறார். மீனா என்ன என்று விசாரிக்க அது சப்ரைஸ் என்று உண்மையை சொல்லாமல் முத்து ஒரு ஆதரவற்ற குழந்தைகள் மையத்திற்கு கூட்டிட்டு போகிறார். அங்கு போனதும் மீனா கிரிஷை இங்க கொண்டு வர்றதுக்காக வந்திருக்கீங்களா என்று கோபப்பட, அதற்கு முத்து கிரிஷை சட்டபூர்வமாக தத்தெடுக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இதற்கு மீனா எனக்கு விருப்பமில்லை கிரிஷை தத்தெடுக்க முடியாது என்று சொல்கிறார். உடனே கோபமான முத்து அதற்கான காரணத்தை சொல்லு என்று கேட்க, காரணம் இருக்கு ஆனால் நான் நேரம் வரும்போது சொல்கிறேன் என்று மீனா சொல்கிறார். இதனால் முத்து கடும் டென்ஷன் ஆகிறார். கடைசியாக மனோஜ் தன்னுடைய ஆஃபீஸில் வேலை பார்க்கும் ஜீவாவிடம் சொல்லி கிரிஷை வேறு இடத்திற்கு அனுப்பி வைக்க திட்டம் போடுகிறார். இந்த உண்மை ரோகிணிக்கு தெரிகிறது. இதனால் அவர் கோபப்படுகிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+