சிறகடிக்க ஆசை: ரோகிணி விஷயத்தில் முத்துக்கு கிடைத்த ஆதாரம்.. அண்ணாமலை எழுப்பிய சந்தேகம்.. தவிக்கும் மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் 24ஆம் தேதிக்கான எபிசோடில், கிரிஷை முத்து கண்டுபிடித்து இருக்கிறார். அதே நேரத்தில் அண்ணாமலைக்கு ரோகிணி விஷயத்தில் பெரிய சந்தேகம் வந்திருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், அண்ணாமலை மற்றும் விஜயா வீட்டில் இருக்கின்றனர். அப்போது கிச்சனில் இருக்கும் ரோகிணி தன்னுடைய மகனை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். அவருக்கு மீனா சமாதானம் செய்து கொண்டிருக்கிறார். எப்படியாவது முத்து கிரிஷை கண்டுபிடிச்சிடுவாரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்து கிரிஷை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்.

யாரு இந்த பையனை கடத்துனது என்று அண்ணாமலை கேட்க, அதற்கு பணத்துக்காக தான் அந்த ரவுடிங்க இவனை கடத்திருக்காங்க, நான் அங்கிருந்த ஒருவனுடைய முகத்தைப் பார்க்க முயற்சி செஞ்சேன். ஆனா தப்பிசசு ஓடி போயிட்டான் என்று முத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு அந்த ரவுடிகளுக்கு எப்படி மனோஜ் நம்பர் கிடைச்சு என்று முத்துவுக்கு சந்தேகம், வர அதே சந்தேகம் தனக்கும் இருப்பதாக அண்ணாமலையும் சொல்கிறார்.
அதற்கு மனோஜ் நான் தானே அந்த பையனை டெய்லி கொண்டு விட்டுட்டு வரேன். அதனால அந்த பையன் என்னோட பையனு நினைச்சிருப்பாங்களாக இருக்கும். நான் பெரிய பணக்காரன்ங்குறது அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு ரவி மற்றும் முத்து இருவருமே இந்த பையனை கடத்துறவங்க கண்டிப்பா பேக்ரவுண்ட் செக் பண்ணி இருப்பாங்க, அப்போ நீ அந்த பையனோட அப்பா இல்லை என்கிற உண்மை தெரிஞ்சிருக்கும்.
ஆனால் அந்த கடத்தினவங்க கிட்ட உன் நம்பர் எப்படி கிடைச்சது என்று துருவி துருவி கேட்டுக் கொண்டிருக்க, மீனா மற்றும் ரோகிணி இருவரும் இந்த பிரச்சனையை இத்துடன் விடுவோம் என்று சொல்கின்றனர். ஆனால் அண்ணாமலை இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்று கண்டுபிடி என்று முத்துவிடம் சொல்கிறார். மறுபக்கத்தில் சீதா வீட்டிற்கு சத்யா வருகிறார்.
அங்கு அருணும் வீட்டில் இருக்க, எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் அருணுடைய உயர் அதிகாரிகள் வருகின்றனர். அவர்களை பார்த்ததும் அருண் பயந்து போகிறார். அப்போது உன்னை பாராட்ட தான் வந்தோம் நீ அந்த சிறுவனை கடத்தியவர்களை கண்டுபிடிச்சதுக்காக உனக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்கு என்று சொல்ல, மொத்த குடும்பத்தினரும் சந்தோஷப்படுகின்றனர்.
அதைத்தொடர்ந்து பார்வதி வீட்டில் சிந்தாமணி மற்றும் விஜயா இருக்கின்றனர் அப்போது அங்கு பூ கொடுப்பதற்காக மீனாவும் வருகின்றார். அந்த நேரத்தில் பார்வதியுடைய மகன் வருகிறார். வந்ததும் பார்வதியை அவருடன் கதை சொல்பவருடன் சேர்த்து வைத்து அசிங்கப்படுத்தி பேசுகின்றனர். இதனால் பார்வதி அழுது கொண்டிருக்கின்றார். அப்போது நிலைமை சரியில்லை என்பதை பார்த்த மீனா முத்துவுக்கு போன் செய்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்?












Click it and Unblock the Notifications