சிறகடிக்க ஆசை: பார்வதிக்கு மகனான முத்து, கதறி அழுத விஜயா.. அண்ணாமலை கேட்ட கேள்வி! செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் 25ஆம் தேதிக்கான எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத கதை வந்தது. அதாவது இதுவரைக்கும் விஜயா செய்த தப்புக்கு எல்லாம் துணையாக இருந்த பார்வதிக்கு இப்போது விஜயா துரோகம் செய்து இருக்கிறார். இதனால் விஜயாவை பார்வதி வீட்டை விட்டு துரத்தி இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
விஜயாவுக்கும் பார்வதிக்கும் இடையிலான நட்பு இதுவரை மிகவும் நெருக்கமானதாகவே இருந்தது வந்தது. பார்வதியின் வீட்டிலேயே விஜயா யோகா கிளாஸ் எடுத்து வர, விஜயா செய்த வில்லங்கமான வேலைக்கு எல்லாம் பார்வதி துணையாக இருந்தார் ஆனால் முத்து மற்றும் மீனா விஷயத்தில் மட்டும் பார்வதி விஜயாவுக்கு அட்வைஸ் செய்து கொண்டு இருந்தார்.

இந்த நிலையில்தான் பார்வதிக்கும் சிவனுக்கும் இடையே உருவாகும் நட்பு விஜயாவுக்கு பிடிக்காமல் போகிறது. சிவனுடன் சேர்ந்து யூடியூப் சேனல் நடத்துவது, அடிக்கடி பேசுவது போன்ற விஷயங்கள் விஜயாவின் மனதில் தேவையற்ற சந்தேகத்தையும், பொறாமையையும் உருவாக்குகிறது. இதனால், பார்வதியை சிவனிடமிருந்து பிரிக்க வேண்டும் என்று சிந்தாமணியோடு சேர்ந்து விஜயா தவறான முடிவு எடுக்கிறார்
அந்த முடிவின் உச்சமாக, வெளிநாட்டில் இருக்கும் சித்தார்த்துக்கு போன் செய்து, பார்வதி - சிவன் உறவை பற்றி மிகைப்படுத்தியும், தவறாகவும் சொல்லிவிடுகிறார். இதை உண்மை என நம்பிய சித்தார்த், எந்த விளக்கமும் கேட்காமல் திடீரென இந்தியா வந்து, நேரடியாக பார்வதி வீட்டிலேயே சண்டை போட ஆரம்பிக்கிறார்.
சித்தார்த் பேசும் வார்த்தைகள் மிகவும் கடுமையாகவும், அசிங்கப்படுத்துவதும் போல இருப்பதால் அங்கு இருக்கும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். குறிப்பாக சிவனை பற்றி அவர் சொல்லும் குற்றச்சாட்டுகள் பார்வதியை உச்சக்கட்ட கோபத்திற்கு கொண்டு செல்கிறது. சிவனை மரியாதையுடன் பேச சொல்லியும் கேட்காமல் சித்தார்த் தொடர்ந்து பேசும் போது, பார்வதி அவனை அறைந்து விடுகிறார்
அப்போது என்ன பற்றி இப்படி தப்பாக யார் சொன்னது?" என பார்வதி கேட்க, "உன் பல வருட தோழியான விஜயா ஆண்டிதான் சொன்னாங்க" என்று சித்தார்த் சொன்னதும் பார்வதி மட்டுமல்லாமல் மீனாவும் முத்துவும் அதிர்ச்சி அடைகின்றனர். இதைக் கேட்டதும் மீனா, முத்து உள்ளிட்ட அனைவரும் விஜயாவை கேள்வி கேட்க, அதற்கு விஜயா தான் செய்தது தப்பு இல்லை என்பது போல திமிராக பேசிக் கொண்டிருக்கிறார்.
கடைசியாக, விஜயாவின் செயலை மன்னிக்க முடியாத பார்வதி, "இனிமே நீ எனக்கு பிரண்டே இல்ல என்ன பத்தி புரிஞ்சுக்காத நீ எனக்கு தேவையில்லை என் வீட்டை விட்டு வெளியே போ என்று துரத்தி விடுகிறார் அதோடு யோகா கிளாஸும் இனி இங்க வைக்க கூடாது என்று சொன்னதும் விஜயா கண்ணீர் விட்டு அழுகிறார்.
அடுத்ததாக வீட்டுக்கு வந்த விஜயா, தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார், அதைப் பார்த்து அண்ணாமலை என்ன ஆச்சு என்று கேட்கிறார் அப்போது முத்து, மீனா வீட்டுக்கு வந்து உண்மையை சொல்லும் நிலையில், அடுத்த எபிசோடில் விஜயாவுக்கு குடும்பத்தில் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி இன்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications