சிறகடிக்க ஆசை: விஜயாவை வெளுத்து வாங்கிய நீத்து.. மீனாக்கு தெரிந்த உண்மை.. மனோஜுக்கு சிக்கல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial today episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 பிப்ரவரி 23ஆம் தேதிக்கான எபிசோடில், நீதீதுவை மனோஜ்க்கு கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி செய்த விஜயாக்கு நீத்து சரியான பதிலடி கொடுத்து அனுப்பி இருக்கிறார். அதே நேரத்தில் ஒரு முக்கியமான விஷயம் மீனாக்கு தெரிய வந்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு இல்லை என்று தெரிந்ததுமே அவரை விவாகரத்து செய்துவிட்டு மனோஜ்க்கு பணக்கார வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்பதுதான் விஜயாவின் பிளானாக இருந்தது. அதற்காக ரவியை காதலிக்கும் நீத்துவிடமே கல்யாண பேசுவதற்காக விஜயா சிந்தாமணி உடன் சென்றிருந்தார்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் (Siragadikka Aasai serial Feb 23 Episode) ஆரம்பத்தில் நீத்துவிடம் விஜயா என்னுடைய பையன் நிறைய படித்திருக்கிறான், அவனுக்கு நிறைய அறிவு இருக்கு என்று பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு நீத்து ஆமா எனக்கு ரவி சொல்லி இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு என்னுடைய மகன் மனோஜ் குடிக்கவே மாட்டான் என்று சொல்ல, அதற்கு அவர் பீர் குடிப்பார் என்று ரவி சொல்லி இருக்கிறார் என்று நீத்து சொன்னதும் இந்த ரவி எல்லா விஷயத்தையும் இந்த பொண்ணு கிட்ட சொல்லி இருக்கிறான் போல என்று விஜயா மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
நீத்து பதிலடி
பிறகு ஒரு வழியாக நான் மனோஜ்க்கு தான் உன்ன பொண்ணு கேட்க வந்தேன் என்று சொன்னதும், அதற்கு நீத்து, மனோஜை போலவே ரவிக்கும் ஸ்ருதியை விவாகரத்து செய்து விடுங்க நான் ரவியை கல்யாணம் பண்ணிக்கிறேன்.. நான் ரவியை காதலிச்சுட்டு எப்படி அவங்க அண்ணனை கல்யாணம் பண்ண முடியும் என்று பதிலடி கொடுக்கிறார். இதைக் கேட்டதும் விஜயா கோபமாகி அங்கிருந்து கிளம்புகிறார்.
சிக்கும் மனோஜ்
பிறகு ஒரு குறி சொல்கிற அம்மா மனோஜ் ஷோரூமுக்கு வந்து உங்க முகத்தை பார்க்கும்போது நீங்க ஒரு ஓனர் என்ற கலை தெரிகிறது. நீங்க ஒரு முதலாளியா இருக்க தகுதியானவரு, உங்களுடைய மனைவியை இப்பதான் நீங்க பிரிஞ்சு இருக்கீங்க. அவங்கள விவாகரத்து செய்ற முயற்சியில் இருக்கிறீங்க என்று எல்லா விஷயத்தையும் சொன்னதும் மனோஜ் எனக்கு இனி கல்யாணம் நடக்குமா? பொண்ணு எந்த திசையில் இருந்து வரும் என்று குறி கேட்கிறார். அதற்கு அந்த பெண் நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவீங்க ஆனால் அது உங்களுடைய மனைவியைத்தான் நீங்கள் மீண்டும் கல்யாணம் பண்ணிக்குவிங்க என்று சொன்னதும் மனோஜ் அதிர்ச்சியில் இருக்கிறார்.

மீனாக்கு சந்தேகம்
அடுத்ததாக சத்யா தன்னுடைய ஓனர் பொண்ணு ஆர்டர் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்காங்க என்று மீனாவை வரவைக்கிறார். மீனாவிடம் சிந்தாமணியின் மகள் என்னுடைய ஸ்கூலில் ஒரு பங்க்ஷன் இருக்கிறது அங்க டெக்கரேஷன் செய்ய வேண்டும் என்று என்று தன்னுடைய ஐடியாக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரே ஒரு ரிட்டன் கிப்ட் மட்டும் ரொம்ப ஸ்பெஷலா வேண்டும் அதை என்னை அவங்க மறக்கக்கூடாது அந்த அளவிற்கு ரொம்ப நாளைக்கு நிலைத்து இருக்கணும் என்று சொன்னதும் மீனாவிற்கு சந்தேகம் வருகிறது.
பிறகு அந்தப் பொண்ணு சத்யாவை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்க அதையெல்லாம் வைத்து மீனா இவங்களுக்குள் வேற ஏதோ இருக்கு என்று சந்தேகப்படுகிறார். பிறகு மீனா அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் சிந்தாமணி இதை பார்த்து விடுகிறார். தன்னுடைய மகளிடம் வந்து எதற்காக நீ அவகிட்ட பேசிட்டு இருக்க என்று கேட்க, அதற்கு சிந்தாமணியின் மகள் என்னுடைய ஸ்கூலில் ஒரு பங்க்ஷன் இருக்கு அதற்காக அவங்களுக்கு ஆர்டர் கொடுத்தேன் என்று சொல்கிறார்.
மீண்டும் வரும் பாக்கியலட்சுமி சீரியல்.. இந்த முறை ஆட்டமே வேற மாதிரி இருக்கு.. ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
உடனே கோபமான சிந்தாமணி, நானே ஊருக்கெல்லாம் அலங்காரம் செஞ்சுட்டு இருக்குறேன். நீ அவளுக்கு ஆர்டர் கொடுத்து இருக்கியா என்று கேட்க அதற்கு சிந்தாமணியின் மகள் நீங்க ஓல்ட் பேஷனா இருக்கீங்க அவங்க ட்ரெண்டிங்கில் இருக்காங்க அதனால அவங்க கிட்ட தான் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விடுகிறார். பிறகு சிந்தாமணி, நான் உன்னை வீட்டை விட்டு வெளியே துரத்தணும்னு பிளான் போட்டா நீ என் பொண்ணையே உன் பக்கம் இழுக்குறியா என்று வில்லத்தனமாக யோசித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications