Siragadikka Aasai : விஜயா கதையை முடிக்க ரோகிணி பிளான்.. முத்துக்கு தெரிந்த உண்மை! சிறகடிக்க ஆசை அப்டேட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் வீட்டை விட்டு காணாமல் போன அண்ணாமலை பற்றிய ரகசியம் முத்துக்கு தெரிய வந்திருக்கிறது. அதே நேரத்தில் தனக்கு தொல்லையாக இருக்கும் விஜயா விஷயத்தில் ரோகிணி முக்கிய முடிவெடுத்து இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் சொத்தை பிரிப்பதற்கு முத்து சம்மதிக்கவில்லை என்பதால் அண்ணாமலை வீட்டை விட்டு வெளியே போயிருக்கிறார். இதனால் அண்ணாமலையை மொத்த குடும்பத்தினரும் தேடிக் கொண்டிருக்கின்றார். அங்கு மீனாவை மட்டும் உள்ளே அனுப்பிவிட்டு முத்து வெளியேவே காத்திருக்கிறார்.

நான் உள்ளே வந்தால் பரசு மாமா எதையும் சொல்ல மாட்டாங்க, அதனால் நான் வெளியே இருந்து அப்பா எங்க இருக்கிறார் என்று கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதுபோல மீனாவும் உள்ளே சென்று பரசுவிடம் அண்ணாமலை பற்றி விசாரிக்க அதற்கு அவர் எனக்கு தெரியாது என்று சொல்கிறார். ஆனால் வீட்டில் இருந்து சாப்பாடு வெளியே கொண்டு போவதற்கு ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்.
இதனால் மீனாவிற்கு சந்தேகம் வருகிறது. அந்த நேரத்தில் பரசுவுக்கு ஒரு போன் வர அவர் அவசரமாக ரூமுக்குள் போய்விடுகிறார். அப்போது மீனா வீட்டிற்கு வந்த விஷயத்தை பற்றி பரசு அண்ணாமலையிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று மீனாவுக்கு முத்து போன் பண்ணி விசாரிக்கிறார். அப்போது பரசு நடவடிக்கைகள் சரியில்லை என்று மீனாவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
பிறகு பரசுவின் மகளிடமும் மீனா துருவி துருவி விசாரிக்க, அவரும் எஸ்கேப் ஆகி விடுகிறார். பிறகு பரசு மீனாவிடம் ஏமாற்றிவிட்டு சாப்பாட்டை எடுத்துக் கொண்டு ஆட்டோவில் கிளம்ப முத்து அவரை பாலோ செய்து போகிறார்.
ஆனால் பரசுவிடம் அண்ணாமலை போன் செய்து உன்னை யாரும் பாலோ பண்ணுறாங்களா என்று கேட்க, அதற்கு பரசு ஆமா, யாரோ ஒருத்தர் ஹெல்மெட் போட்டுட்டு என் பின்னாடியே வந்துட்டு இருக்கிறார் என்று சொல்ல, அது முத்து தான்.. நீ இப்போ என்னை வந்து பார்க்க வராதே என்று அண்ணாமலை சொல்கிறார்.
உடனே பரசு தான் கொண்டு வந்த சாப்பாடை ஆட்டோக்காரரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து இறங்க, முத்து அவரிடம் வந்து பேச வர.. உடனே பரசு அண்ணாமலையை பற்றி விசாரிக்கிறார். அதற்கு முத்து நீங்க அப்பாவோட நல்ல நண்பர்கள் தெரியும் ஆனா அதற்காக இப்போ அவர் வீட்டை விட்டு போனதற்காக சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க.. சரி அது அப்படியே இருக்கட்டும் ஆனால் அப்பா வீட்டுக்கு திரும்பி வரும் வரைக்கும் நான் சாப்பிட மாட்டேன்.
எப்பவும் நான் குடிக்கிற சாப்பாடாதான் இப்போ குடிக்க போறேன் என்று சொல்லிவிட்டு போக பரசு அதிர்ச்சியாகி நிற்கிறார். மறுபக்கத்தில் ரோகிணி விஜயா தன்னை திட்டியதை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார். அதோடு விஜயா கோபத்தில் இருந்து தப்பிக்க என்ன பண்ணலாம் என்று பிளான் போடுகிறார். அப்போது ரோகிடியின் தோழி நீ விஜயாவுக்கு மயக்க மாத்திரை கொடுத்திரு என்று சொல்ல அதைக் கேட்டு ரோகிணியும் சரி என்று மாத்திரையை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்.
அந்த நேரத்தில் விஜயா அழுது கொண்டிருக்கிறார். அப்போது வரும் ரவியிடம் உங்க அப்பாவை கண்டு பிடிச்சிட்டியா? அவர் எங்க இருக்கிறார் என்று கேட்க, நானும் எல்லா இடமும் தேடிட்டேன். ஆனா அவர் எங்க இருக்காருன்னு தெரியல, முத்துவும் விசாரிச்சிட்டு இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருக்க அப்போது விஜயாவின் கோபம் ரோகிணி பக்கம் திரும்புகிறது.
இவளால் தான் இவ்வளவு பிரச்சனை.. என்று விஜயா திட்டி கொண்டு இருக்கிறார். இனி தூக்க மாத்திரையை வைத்து ரோகிணி போடும் பிளான் நடக்குமா? இல்லையா? என்பது நாளைக்கு தெரிய வரும்.
-
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?











Click it and Unblock the Notifications