சிறகடிக்க ஆசை: நான்தான் கல்யாணி, ஒத்துக்கொண்ட ரோகிணி.. விஜயா கொடுத்த அதிர்ச்சி, மனோஜ் நிலைமை?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 8ஆம் தேதி எபிசோடில் கிரிஷ் உடைய அம்மா கல்யாணி நான் தான் என்று ரோகிணியே ஒத்துக் கொண்டார். முத்து போட்ட பிளான் பலித்ததா இல்லையா என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தான் கிருஷ் உடைய அம்மா என்ற உண்மையை முத்து கண்டுபிடித்திருக்கிறார். ஆனால் இதை நாம வீட்டில் போய் சொன்னால் ரோகிணி கதையை மாற்றி விடுவாள், அவளுடைய வாயிலிருந்து உண்மையை கொண்டு வர வேண்டும் என்று முத்து பிளான் போட்டு வீட்டிற்கு வந்து இருக்கிறார்.

அப்போது மனோஜ் வந்து முத்துவிடம் கிரிஷை ஒரு தம்பதி வெளிநாட்டுக்கு தத்து கேக்குறாங்க, அவங்களுக்கு தத்துக் கொடுத்தா அந்த பையன் அங்க போய் ரொம்ப சந்தோஷமா இருப்பான். இதுக்கு நானும், ரோகிணியும் சம்மதிச்சுட்டோம் என்று சொல்ல, முத்து அப்படியா அப்போ எனக்கும் சம்பந்தம் தான், அந்த பையன் அங்க போய் சந்தோஷமா இருக்கட்டும் என்று சொல்கிறார்.
இதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். விஜயாவும் மனோஜும் இப்பதான் இவன் சரியா பேசி இருக்கிறான், இதுக்கு முன்புதான் தேவையில்லாம பேசிட்டு இருப்பான் என்று சொல்கின்றனர். அப்போது மீனா நீங்க உண்மை தெரியாமல் சம்மதம் சொல்லுறீங்க கிரிஷை தத்து கொடுத்தா 25 லட்சம் பணம் கிடைக்குமாம்...
உங்க அண்ணன் அவனை விக்கறதுக்காக பிளான் போட்டு இருக்காரு என்று சொல்ல, அதற்கு முத்து ஒரு கண்டிஷன் போடுகிறார். அதாவது கிரிஷை தத்து கொடுக்க வேண்டும் என்றால் கிரிஷ் உடைய அம்மாவின் பெர்மிஷன் வேண்டும் என்று கேட்டு சொல்கிறார். அதற்கு எல்லோரும் சேர்ந்து அவனோட அம்மா தான் செத்துப் போயிட்டாளே என்று சொல்ல, அதற்கு முத்து இல்ல அவனோட அம்மா உயிரோட தான் இருக்குற என்று குண்டை தூக்கி போடுகிறார்.
அதை கேட்டு ரோகிணி அதிர்ச்சி ஆகிறார். பிறகு கிரிஷ் அம்மா ரொம்ப மோசமானவள், இந்த ஊர்ல தான் இருக்கிறா.. அவளை மாதிரி ஒரு மோசமான பொண்ணே கிடையாது, ரொம்ப கேவலமானவள் என்று தரக்குறைவாக பேசிக்கொண்டே இருக்க, அதுக்கு ரோகிணி கோபமாகி ஒரு பொண்ணை பத்தி மோசமா பேசுறீங்க... அந்த பொண்ணை பத்தி உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்கிறார்.
அதற்கு முத்து எனக்கு எல்லாமே தெரியும். அந்த பொண்ணு மோசமானவள் நானே பார்த்தேன் என்று மீண்டும் சொல்கிறார். அப்போது அண்ணாமலை நீ இப்படி ஒரு பொண்ணை பத்தி மோசமா பேச மாட்டியே? அப்படி என்றால் அந்த பொண்ணு அவ்வளவு மோசமாக நடந்து கொண்டாளா? என்று கேட்கிறார். அதற்கு முத்து மீண்டும் மீண்டும் கிரிஷ் அம்மா கல்யாணி மோசமானவள் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
அதனால் ரோகிணி முத்துவிடம் சண்டை போடுகிறார். அதை பார்த்து எல்லோருக்கும் சந்தேகம் வருகிறது. ரோகிணி அந்த பொண்ணு அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது என்று சொல்ல, அதற்கு முத்து அவளை பற்றி உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க அந்த கிரிஷோட அம்மாவே நான் தான் என்று ரோகினி சொன்னதை கேட்டு எல்லோரும் ஷாக் ஆகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்: வீட்டுக்கு வந்த கோமதியிடம் அம்மா சொன்ன விஷயம்! கதறி அழுத குடும்பம்! பாண்டியன் எடுத்த முடிவு
விஜயா இதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அப்போது முத்து இவ வாயில் இருந்து உண்மையை வர வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் இப்படி செய்தேன் என்று சொல்லி, இவ பெயர் ரோகிணி இல்ல... கல்யாணி. இவளோட முதல் புருஷன் கல்யாணமாகி 7 மாசத்துல இறந்துட்டான். அவங்களுக்கு பிறந்தவன்தான் கிரிஷ். அவன் பாட்டி வேற யாரும் இல்ல ரோகினியோட அம்மா தான் என எல்லா உண்மைகளையும் சொல்கிறார். இதைக் கேட்டு விஜயா அதிர்ச்சியாகி நின்று கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications