சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பிளான் கேட்டு அதிர்ச்சியில் விஜயா.. இனியாவது திருந்துவாரா? மனோஜ்க்கு அசிங்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial March 17 Episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 17ஆம் தேதிக்கான எபிசோடில், சிந்தாமணி பற்றிய உண்மைகளை மீனா விஜயாவிடம் சொல்லி இருக்கிறார் ஆனால் வழக்கம் போல சிந்தாமணியின் சூழ்ச்சியில் விஜயா ஏமாந்து போயிருக்கிறார். கடைசியில் மனோஜ் செய்த தப்பால் அவருக்கு பிரச்சனை வந்திருக்கிறது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில், நீத்து தனது ரெஸ்டாரண்ட் பிசினஸை விட்டுவிட்டு புதிதாக ஒரு பூக்கடை திறந்து, அதற்கு ரவியின் பெயரை வைத்திருப்பது குடும்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், அந்த பூக்கடைக்கு சிந்தாமணி தான் பூ சப்ளை செய்து வருகிறார் என்ற உண்மையை மீனா கண்டுபிடிக்கிறார். இதைத் தொடர்ந்து, இந்த விஷயத்தை விஜயாவிடம் சொல்ல வேண்டும் என்று மீனா, ஸ்ருதியிடம் சொல்கிறார். இதனால் ஸ்ருதியும் விஜயாவிடம் பேச கிளம்பிச் செல்கிறார்.
ஸ்ருதி சொன்ன விஷயம்
(Siragadikka Aasai today episode )விஜயாவை சந்தித்த ஸ்ருதி, நீத்து ரவியின் பெயரில் பூக்கடை திறந்திருப்பதை நேரடியாகச் சொல்கிறார். அதற்கு விஜயா, "ஊரில் ரவி என்ற பெயர் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்" என்று சமாளிக்க முயற்சிக்கிறார். ஆனால் ஸ்ருதி அதற்கு பதிலடி கொடுத்து, "எத்தனை பேர் இருந்தாலும் அவள் இந்த ரவியைத்தான் குறிப்பிட்டு பெயர் வைத்திருக்கிறார்" என்று சொல்கிறார்.
மேலும், உங்க ஃப்ரெண்ட் சிந்தாமணியிடம் பேசிச், நீத்துவிற்கு பூ சப்ளை செய்வதை நிறுத்த சொல்லுங்கள் என்று சொல்கிறார். இதற்கு விஜயா, "நான் சிந்தாமணியிடம் பேசுகிறேன்" என்று அங்கிருந்து கிளம்புகிறார்.
மனோஜ் செய்த செயல்
மறுபுறம், மனோஜ் தனது ஷோரூமில் இருக்கும் போது, கிரிஷ் வந்து "டாடி, நான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கியிருக்கேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார். இதைக் கேட்ட மனோஜ் கடுப்பாகி, "யாருடா உனக்கு டாடி? வெளியே போ" என்று அவரை தள்ளிவிடுகிறார். இதை அங்கு இருந்த கஸ்டமர்கள் பார்த்து மனோஜை திட்டுகின்றனர், "இவ்வளவு கொடுமையானவரின் கடையில் பொருள் வாங்க முடியாது" என்று கூறி அங்கிருந்து வெளியேறுகிறார்கள். அதன்பின், ரோகிணி வந்து கிரிஷை கூப்பிட்டு போகிறார்.
சிந்தாமணியின் நாடகம்
இதையடுத்து, ஸ்ருதியின் பேச்சை மனதில் வைத்துக்கொண்டு விஜயா, பார்வதி வீட்டிற்கு போய் சிந்தாமணியிடம் பேசுகிறார். "நீங்கள் இப்படி செய்வீங்கனு நினைக்கல" என்று ஆரம்பிக்கிறார். இதைக் கேட்ட சிந்தாமணி, வேறு விஷயம் தெரிய வந்துவிட்டதோ என்று பயப்படுகிறார். ஆனால் விஜயா, நீத்து பூக்கடை விஷயத்தைக் கூறி, "ஏன் அவளுக்கு பூ சப்ளை செய்கிறீர்கள்?" என்று கேட்கிறார்.
அதற்கு சிந்தாமணி, "நான் ஒரு திட்டத்தோடு தான் இதை செய்கிறேன். அவளுக்கு நான் பூ கொடுக்கவில்லை என்றால் வேறு இடத்தில் வாங்கிவிடுவாள். ஆனால் நான் கொடுத்தால், அவள் என்ன திட்டம் போடுகிறாள் என்பது எனக்கு தெரியும். இது எல்லாம் உங்களுக்காகத்தான்" என்று நாடகம் போடுகிறார். இதை கேட்ட விஜயா, அவர் சொன்னதை உண்மை என்று நம்பி வீட்டிற்கு வருகிறார்.
ஏமாந்த விஜயா
வீட்டிற்கு வந்த விஜயா, சிந்தாமணி சொன்னதை குடும்பத்தினரிடம் சொல்கிறார். அதே நேரத்தில் மனோஜும் வீட்டிற்கு வந்து, ஷோரூமில் நடந்த சம்பவத்தைப் பற்றி சொல்லி வருத்தப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications