Siragadikka Aasai Promo: சொத்துக்காக சண்டை போட்ட மனோஜ், முத்து! வீட்டை விட்டு போன அண்ணாமலை, மனம்மாறும் விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் 29ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அண்ணாமலை வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மைகள் வீட்டிற்கு தெரிய வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் தான் அடுத்தடுத்த திருப்பம் வந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் மனோஜின் பிசினஸில் லட்சக்கணக்கில் லாபம் வந்து கொண்டிருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் எதிர்பார்க்காத வகையில் திடீரென கதையை மாற்றிவிட்டனர்.

அதாவது மனோஜ் ஷோரூமில் ஆர்டர் கொடுத்த பில்டர்க்கு உடல்நிலை சரியில்லாமல் கோமாவிற்கு போய்விட்டதாகவும், அதனால் அவருடைய மேனேஜரே இப்போது நிர்வாகத்தை கவனித்து வருவதாகவும் சொல்லி இருக்கின்றனர். ஏற்கனவே அந்த மேனேஜரை மனோஜ் அவமானப்படுத்தி இருந்தார். அதனால் அவர் மனோஜ் ஆர்டரை கேன்சல் செய்துவிட்டார். இதனால் மனோஜ்க்கு 30 லட்சம் கடன் வந்திருக்கிறது.
மனோஜ்க்கு கடன் கொடுத்த நபர் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்திருக்கிறார். மனோஜ் கடனுக்கு யாரையாவது பொறுப்பேற்று கையெழுத்து போட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். தன்னுடைய மகனுக்காக அண்ணாமலை கையெழுத்து போட்டு கொடுத்து இருக்கிறார். இப்படியான நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அண்ணாமலை தன்னுடைய சொத்தை பிரிப்பதற்காக ஆட்களை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார்.
அப்போது முத்து நீ இருக்கிற வரைக்கும் இந்த சொத்தை விற்கவோ, பிரிக்கவோ விடமாட்டேன் என்று சொல்லுகிறார். அதற்கு மனோஜ் அப்பாவே சொத்தை பிரிக்கலாம்னு முடிவு பண்ணிட்டாரு நீ எதுக்காக கேட்கிற என்று சண்டை போடுகிறார். அதோடு சொத்தை பிரித்து தரவில்லை என்றால் கேஸ் போட்டா எல்லாரும் கோர்ட்க்கு வரணும் என்று சொன்னதும் முத்து மனோஜை அடிக்க போகிறார். இதையெல்லாம் பார்த்து அண்ணாமலை ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
அடுத்த நாள் காலையில் அண்ணாமலையை வீடு முழுக்க தேடிப் பார்க்க, அவரை காணவில்லை. இதனால் அப்பா வீட்டை விட்டு போனதற்கு காரணம் மனோஜ் தான் என்று முத்து கோபப்பட்டு அடிக்க போகிறார். அப்போது விஜயா நீ எப்படியாவது என் புருஷனை தேடி கண்டுபிடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்துரு, எனக்கு என் புருஷன் வந்து ஆகணும் என்று முத்துவிடம் சொல்லி இருக்கிறார்.
இதுவரைக்கும் முத்துவை அசிங்கப்படுத்தி வந்த விஜயா இப்போது அவரிடமே உதவி கேட்டிருக்கிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்று அடுத்த வாரம் பார்ப்போம். எது எப்படியோ இன்னும் சில வாரங்களுக்கு ரோகிணிக்கு தொல்லை இல்லை.
-
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications