Siragadikka Aasai Promo: முத்து கண்டுபிடித்த உண்மை! விஜயாவை அசிங்கப்படுத்தி துரத்தும் பார்வதி! பாவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை டிசம்பர் 25 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் விஜயா போட்ட நாடகத்தை முத்து கண்டுபிடித்திருக்கிறார். இதனால் கோபமான பார்வதி, விஜயா வீட்டை விட்டு துரத்தி இருக்கிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம் ரோகிணி பற்றிய உண்மை மீனாவிற்கு மட்டும் தெரிந்திருக்கிறது. ஆனால் மீனா, ரோகிணியிடம் பற்றிய உண்மைகளை வீட்டில் சொல்லிவிடு என்று சொல்லி மிரட்டி கொண்டே இருக்கிறார். ரோகிணிக்கு ஏற்கனவே கல்யாணம் முடிந்து, கிரிஷ் அவருடைய நிஜ மகன்தான் இந்த என்ற விஷயத்தை மீனா தெரிந்து கொண்டதிலிருந்து குடும்பத்தினரிடம் உண்மையை சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தான் ரோகிணியின் பிஏ தினேஷ் கிரிஷை கடத்தி வைத்து 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டி இருந்தார். இதனால் கடைசி நேரத்தில் ரோகிணி பற்றிய உண்மைகளை முத்துவிடம் சொல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை வழக்கம் போல. தினேஷ் தப்பி ஓடிவிட்டார் இந்த உண்மையை பற்றி தெரியாமல் முத்து தான் குழப்பத்தில் இருக்கிறார்.
ஆனாலும் கிரிஷை கடத்திய ரவுடிக்கு எப்படி மனோஜ் உடைய நம்பர் கிடைத்தது? என்ற குழப்பம் முத்து மற்றும் அண்ணாமலைக்கு வந்திருக்கிறது. இதனால் இதை நோக்கி இனி முத்துவின் பயணம் இருக்கும். ஆனால் ஒரு வருடத்திற்கு மேலாக இப்படித்தான் முத்து ரோகினி விஷயத்தில் சந்தேகம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர அவரைப் பற்றிய கடந்த காலத்தை பற்றி கண்டுபிடிக்க முடியவில்லை.
ரோகினி பற்றிய உண்மை எப்போ தான் தெரியும் என்ற கேள்வி மீண்டும் எழுந்து வருகிறது. சூழல் எப்படி இருக்க இப்போது தனக்கு இதுவரைக்கும் உதவியாக இருந்த பார்வதியையே விஜயா அசிங்கப்படுத்தி இருக்கிறார். பார்வதி அவருடன் கதை சொல்லும் நபருடன் பேசுவதை பார்த்து பொறாமையில் பொறுத்துக் கொள்ள முடியாத விஜயா பார்வதியின் மகன்களுக்கு போன் செய்து பார்வதியை பற்றி தவறாக பேசி இருக்கிறார்.
இதனால் பார்வதியின் மகன் ஊருக்கு வந்து பார்வதியை அசிங்கப்படுத்தி பேசுகிறார். அதோடு அந்த யூடியூபரையும் இந்த வீட்டு பக்கம் வரக்கூடாது என்று திட்டி அனுப்பி இருக்கிறார். இதனால் பார்வதி அசிங்கப்பட்டு அழுது கொண்டிருக்கிறார். அப்போது முத்துவும் மீனாவும் அங்கு இருக்கிறார்கள். இந்த நிலையில் பார்வதியின் மகனிடம் இதுபோன்று தவறாக சொன்னது விஜயா தான் என்று முத்து கண்டுபிடிக்கிறார்.
இப்படியான நிலையில் நாளைக்கான ப்ரோமோவில் பார்வதி, இதுவரைக்கும் நான் நீ செஞ்ச தப்புகளுக்கு எல்லாம் துணையாய் இருந்தேன். அதுதான் நான் செஞ்ச பெரிய தப்பு. உன்னை போய் என்னுடைய பிரண்டா வச்சுக்கிட்டது நான் எவ்வளவு பெரிய முட்டாள்தனமான முடிவு என்று இப்பதான் தெரிகிறது. இனிமே இந்த வீட்டு பக்கம் நீ வராத என் முகத்தில் முழிக்காத, இனி என் வீட்டில் வைத்து நீ கிளாஸ் நடத்தக்கூடாது என்று துரத்துகிறார்.
இதனால் விஜயா வாய் பேச முடியாமல் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார். இப்பவாவது உண்மையான பிரண்ட்ஷிப் என்றால் என்ன என்று விஜயா புரிந்து கொள்கிறாரா? என்று பார்ப்போம். ஆனால் இந்த சீரியலில் கெட்டதே செய்கிற விஜயாவுக்கும் ரோகினிக்கும் மட்டும் நல்ல தோழிகள் கிடைச்சிருக்கிறாங்க. அதனாலதான் இவங்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அவங்க காப்பாற்றி விட்டுட்டு இருக்காங்க.
-
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications