Siragadikka Aasai: காணாமல் போன அண்ணாமலை எங்க போயிருக்கிறார் பாருங்க! சம்பவம் பெருசு தான் போல!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சுந்தர்ராஜன் பற்றிய செய்திதான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அவர் அந்த சீரியலில் திடீரென வீட்டை விட்டு காணாமல் போயிருக்கிறார் ஆனால் இப்போது அவர் எங்கே போயிருக்கிறார் என்று ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டனர்.
சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பார்க்காத கதைக்களம் வந்திருக்கிறது. மனோஜ் இதுவரைக்கும் பிசினஸில் கொடிகட்டி பறந்து வந்தார் ஆனால் இப்போது அவருக்கு அடுத்தடுத்த ஏமாற்றமும், நஷ்டங்களும் தான் கிடைத்திருக்கிறது தனக்கு ஒரு பெரிய ஆர்டர் வந்ததும் உடனே கடனை வாங்கி தன்னுடைய ஆபீஸை பிரமாண்டமாக மாற்றி இருந்தார். தனக்காக ஒரு பிஏ கூட வைத்திருந்தார். இதனால் 30 லட்சம் கடன் வந்துவிட்டது.

ஆனால் மனோஜ் ஷோரூமுவுக்கு ஆர்டர் கொடுத்த பில்டருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய் கோமாவிற்கு சென்று விட்டார். இதனால் அந்த ஆபீஸில் இருந்த மேனேஜர் தான் இப்போது கம்பெனியை கவனித்து வருகிறார். ஆனால் அந்த மேனேஜரை மனோஜ் ஏற்கனவே அசிங்கப்படுத்தி இருந்தார். இதனால் அந்த மேனேஜர் மனோஜ் உடைய ஆர்டரை கேன்சல் செய்து விட்டார்.
இப்போது மனோஜ் பெரிய கடனில் இருக்க, அதனால் சொத்தை பிரிக்க சொல்லி கேட்டிருக்கிறார். வேறு வழி இல்லாமல் அண்ணாமலையும் சொத்தை பிரிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால் முத்து மற்றும் ரவி இருவரும் இந்த சொத்தை பிரிக்கக் கூடாது என்று சொல்லி இருக்கின்றனர். இதனால் வீட்டில் சண்டை ஏற்பட, ஒரு லெட்டரை எழுதி வைத்துவிட்டு அண்ணாமலை காணாமல் போயிருக்கிறார்.
அந்த லெட்டரில் என்னை தேடாதீர்கள், எப்போது எனக்கு வரவேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது வருவேன் என்று சொல்லி இருக்கிறார். இதனால் முத்து அதிர்ச்சியாகி அப்பாவை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் அப்பா மீது பாசத்தோடு இருந்த முத்து இப்போது அப்பா காணவில்லை என்பதால் கோபத்தில் இருக்கிறார்.
கதை இப்படி போய்க் கொண்டிருக்கும் போது இந்த சீரியலில் அண்ணாமலை கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சுந்தர்ராஜன் இன்று எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்ஸை நேரில் சந்தித்து இருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் உங்க பையன் முத்து உங்களை தேடி திரிகிறான், நீங்க இங்க வந்து இருக்கீங்களே என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
சிறகடிக்க ஆசை: சொத்துக்காக மனோஜ் செய்த காரியம்! வீட்டை விட்டு போன அண்ணாமலை! சிக்கும் ரோகிணி
இன்னும் ஒரு சிலர் நீங்க இபிஎஸ் கட்சியில் சேருவதற்காகத்தான் அந்த விஜயா வீட்டை விட்டு வெளியே வந்தீங்களா? என்றும் கூட கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இது ஜாலியான கேள்விகளாக இருந்தாலும் இவரை இந்த சீரியலோடு அந்த அளவிற்கு மக்கள் பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
-
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications