சின்னத்திரையின் க்யூட் காதலர்களான ரேஷ்மா மற்றும் மதன் திருமணம்...வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: காதலர்களாக இருந்து கணவன் மனைவியாக மாறி இருக்கும் சின்னத்திரை தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சின்னத்திரையில் அடுத்தடுத்த திருமணங்கள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.
கொட்டும் மழையிலும் மணக்கோலத்தில் இருக்கும் புது ஜோடிகளின் போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஜீ தமிழில் அறிமுகம்
ஜீ தமிழில் 'பூவே பூச்சூடவா' சீரியலில் மூலமாக சீரியலில் அறிமுகமான ரேஷ்மா முரளிதரன் அந்த சேனலில் ஒரு நடன போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பிறகுதான் அவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் சீரியலில் ஹீரோயினாக அவர் டான்ஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போதே மாறிவிட்டார். இது அவருடைய ரசிகர்களுக்கு செம சந்தோஷத்தை கொடுத்திருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு படியே இவரும் சீரியலில் தனது நடிப்பை திறமையாக வெளிக்காட்டி வந்தார்.

வைரலான காதல்
முதல் சீரியலில் இவருடன் கதாநாயகனின் தம்பியாக நடித்த மதனும் இவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் சமூகவலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து இருவரும் தங்களது காதலை ஒப்புக் கொண்டுவிட்டனர். விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தனர். மதன் ஜீ தமிழில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

அபி டெய்லர் ஜோடி
மதன் மற்றும் ரேஷ்மா இவர்கள் இருவரும் தற்போது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் சீரியலில் ஜோடியாக நடித்து வருகின்றனர். இவர்களின் திருமணம் அந்த சீரியலில் சமீபத்தில் தான் நடைபெற்றது. அதற்குப் பிறகு அவரிடம் ரசிகர்கள் அதிகமாக எப்போது திருமணம் என்று கேட்டு வருகின்றனர். சமீபத்தில் ஷபானா மற்றும் ஆரியன் திருமணம் நடைபெற்றது. இது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த நிலையில் இவர் தன்னுடைய திருமண தேதியை அனைவருக்கும் கூறியிருந்தார்.

வாழ்த்தும் ரசிகர்கள்
இன்று ரேஷ்மா மற்றும் மதன் திருமணம் பெற்றோர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் விமர்சனமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பட்டு சேலையில் ஜொலிக்கும் தேவதையாக ரேஷ்மாவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் அந்த தேவதையே நேரில் வந்து விட்டதோ என்று பலர் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தங்களுடைய அன்பை வாழ்த்துக்கள் ஆக கூறிவருகிறார்கள்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications