எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகல்!? காரணத்தை விளக்கிய நடிகர்.. அட இதுதான் உண்மையாம்!
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நாச்சியப்பனாக நடிக்கும் சௌமியன் அந்த சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதற்கான விளக்கத்தை அவர் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
இதனால்தான் இப்படி ஒரு செய்தி வெளியே வந்தது என்று தெரியவில்லை ஆனால் நான் இந்த சீரியலை விட்டு விலகவில்லை என்று ரசிகர்களுக்கு தன்னுடைய விளக்கத்தை செளமியன் கொடுத்திருக்கிறார்.

ரசிகர்களின் விருப்பம்
எதிர்நீச்சல் சீரியல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் பலரும் இந்த சீரியலை அதற்கு முன்பாக கொண்டு வர வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரோஜா சீரியல் ஒரு சில நாட்களில் முடிந்து விடும் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகி வந்த நிலையில் அந்த சீரியல் முடிவடைந்தால் அந்த இடத்திற்கு ஒன்பது மணிக்கு இது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நாச்சியப்பன் கேரக்டராக நடிக்கும் நடிகர் சௌமியன் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகப் போகிறார் என்ற செய்திகள் பரவி வருகிறது.

சௌமியனின் ஆரம்பமும் நடிப்பும்
ஜனனியின் அப்பாவாக சௌமியன் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பொதுவாக நடிக்கும் அனைத்து கேரக்டர்களுமே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விடும். அந்த மாதிரி தான் நாச்சியப்பன் கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆரம்பத்தில் சௌமியன் ஒரு புகைப்படக் கலைஞர் ஆக இருந்து பல பங்க்ஷன்களில் மட்டுமல்லாமல் திருமண வீடுகளிலும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார் .அதற்குப் பிறகு ஒரு ஒரு திரைப்படத்தையும் இவர் தயாரித்திருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் ரம்பா மற்றும் லிவிங்ஸ்டன் நடித்த சுந்தர புருஷன் திரைப்படத்தில் ரம்பாவின் மாப்பிள்ளையாக இவர் நடித்திருக்கிறாராம்.

ரஜினியுடன் நடிப்பு
அதுமட்டுமல்லாமல் ரஜினி நடித்து பெரிய அளவில் வெற்றி பெற்ற அருணாச்சலம் திரைப்படத்தில் ரஜினியின் தங்கையின் கணவராகவும் இவர் நடித்திருக்கிறாராம். ஆரம்பத்தில் இருந்து எதிர்நீச்சல் சீரியலில் ஒரு ஸ்டிர்க்ட்டான அப்பாவாக நடித்து வந்த சௌமியம் திடீரென இந்த சீரியலில் இருந்து விலக இருக்கிறாராம். அவரை தொடர்ந்து இந்த சீரியலில் இனி நாச்சியப்பனாக பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் அப்பாவாக நடிக்கும் நடிகர் தான் அறிமுகமாக போகிறார் என்ற செய்திகள் பரவி வந்தது. இதை குறித்து சௌமியன் முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இதுதான் உண்மை
அதில் சமீப காலமாகவே பல செய்திகள் நான் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகுவதாக பரவி வருகிறது. அது எல்லாம் பொய். அதனால் இனி இப்படி ஒரு செய்தியை பரப்பாதீர்கள் என விளக்கம் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே செளமியன் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்திரா சீரியலில் கதாநாயகியின் அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் தான் இந்த சீரியலை விட்டு இவர் விலக இருப்பதாக செய்திகள் பரவி இருக்கலாம். ஆனால் அதற்கும் தனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இனி நான் அப்படி ஒரு முடிவு எடுக்கப் போவதில்லை என்று இவர் உறுதியாக கூறியிருக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு எதிர்நீச்சல் சீரியல் மூலமாகத்தான் இவர் மீண்டும் ரசிகர்களின் மனதில் வேரூன்ற தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் பிரபலப்படுத்திய சீரியலில் இவர் விலகி விட்டாரே என்று பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இப்போது இவர் விலகவில்லை அதற்கு காரணமும் இல்லை என்று கூறிய பதிலை கேட்டு சிலர் ஆறுதல் அடைந்திருக்கின்றனர். ஏற்கனவே ஜனனியின் அப்பா அதிகமாக இப்போது காட்டப்படுவதில்லை கதை முழுக்க குணசேகரனின் வீட்டிற்குள்ளே நடைபெறுவதால் ஜனனியின் குடும்பத்தை மாதத்தில் இரண்டு மூன்று நாட்கள் தான் காட்டுகின்றனர். இந்த நிலையில் இனி வரப்போகும் எபிசோடுகளில் சௌமியனின் நடிப்பு தெரிகின்ற மாதிரி எபிசோடுகள் வந்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

எதிர்பார்க்காத சாதனை
எதிர்நீச்சல் சீரியல் தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று, யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த வாரத்தில் புது சாதனையை செய்திருக்கிறது. இதுவரைக்கும் முதல் இடத்தில் இருந்து வந்த ரோஜா சீரியலின் டி ஆர் பி யில் 8% மட்டுமே குறைவான நிலையில் இரண்டாவது இடத்தில் இந்த சீரியல் வந்துவிட்டது. எதிர்நீச்சல் சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் இந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றது, இந்த சீரியலுக்கு கிடைத்த வெற்றி தான். கிராமப்புறங்களில் விடவும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது.
-
உயிரே போயிடும்னு நினைத்தேன்! அந்த அளவிற்கு வலி, வேதனை! பெங்களூரில் நடந்த சம்பவம்! நடிகை ஐஸ்வர்யா உருக்கம் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை!












Click it and Unblock the Notifications