எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகப் போகும் நடிகர்..இனி இவருக்கு பதில் விஜய் டிவி நடிகர் தானாம்!?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியின் அப்பாவாக நாச்சியப்பன் கேரக்டரில் நடிக்கும் நடிகர் சீரியலை விட்டு வெளியேறப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அவருக்கு பதிலாக விஜய் டிவி பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் இனி ஜனனியின் அப்பாவாக நாச்சியப்பன் கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம்.

எதிர்பார்க்காத சாதனை
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று, யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த வாரத்தில் புது சாதனையை செய்திருக்கிறது. இதுவரைக்கும் முதல் இடத்தில் இருந்து வந்த ரோஜா சீரியலின் டி ஆர் பி யில் 8% மட்டுமே குறைவான நிலையில் ஆகி இரண்டாவது இடத்தில் இந்த சீரியல் வந்துவிட்டது. எதிர்நீச்சல் சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் இந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றது, இந்த சீரியலுக்கு கிடைத்த வெற்றி தான். கிராமப்புறங்களில் விடவும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது.

ரசிகர்களின் விருப்பம்
எதிர்நீச்சல் சீரியல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் பலரும் இந்த சீரியலை அதற்கு முன்பாக கொண்டு வர வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரோஜா சீரியல் ஒரு சில நாட்களில் முடிந்து விடும் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகி வந்த நிலையில் அந்த சீரியல் முடிவடைந்தால் அந்த இடத்திற்கு ஒன்பது மணிக்கு இது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நாச்சியப்பன் கேரக்டராக நடிக்கும் நடிகர் சௌமியன் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகப் போகிறார் என்ற செய்திகள் பரவி வருகிறது. இதை குறித்து அதிகாரப்பூர்வமாக சௌமியன் எந்த ஒரு தகவலையும் கூறவில்லை.

நாச்சியப்பனின் ஆரம்பமும் நடிப்பும்
ஜனனியின் அப்பாவாக சௌமியன் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பொதுவாக நடிக்கும் அனைத்து கேரக்டர்களுமே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விடும். அந்த மாதிரி தான் நாச்சியப்பன் கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆரம்பத்தில் சௌமியன் ஒரு புகைப்படக் கலைஞர் ஆக இருந்து பல பங்க்ஷன்களில் மட்டுமல்லாமல் திருமண வீடுகளிலும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார் .அதற்குப் பிறகு ஒரு ஒரு திரைப்படத்தையும் இவர் தயாரித்திருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் ரம்பா மற்றும் லிவிங்ஸ்டன் நடித்த சுந்தர புருஷன் திரைப்படத்தில் ரம்பாவின் மாப்பிள்ளையாக இவர் நடித்திருக்கிறாராம்.

இனி இவருக்கு பதில் இவர்தானாம்
அதுமட்டுமல்லாமல் ரஜினி நடித்து பெரிய அளவில் வெற்றி பெற்ற அருணாச்சலம் திரைப்படத்தில் ரஜினியின் தங்கையின் கணவராகவும் இவர் நடித்திருக்கிறாராம். ஆரம்பத்தில் இருந்து எதிர்நீச்சல் சீரியலில் ஒரு ஸ்ட்ரிக்ட்டான அப்பாவாக நடித்து வந்த சௌமியம் திடீரென இந்த சீரியலில் இருந்து விலக இருக்கிறாராம். அவரை தொடர்ந்து இந்த சீரியலில் இனி நாச்சியப்பனாக பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் அப்பாவாக நடிக்கும் நடிகர் தான் அறிமுக போவதாக போகிறார் என்ற செய்திகள் பரவி வருகிறது. இதைக் குறித்து இன்னும் சீரியல் தரப்பில் இருந்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது.
-
உயிரே போயிடும்னு நினைத்தேன்! அந்த அளவிற்கு வலி, வேதனை! பெங்களூரில் நடந்த சம்பவம்! நடிகை ஐஸ்வர்யா உருக்கம் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை!












Click it and Unblock the Notifications