கடைசி நாளில் சரண் கையில் ஏற்பட்ட காயம்..வலியிலும் உமாபதியை நினைத்து வருத்தம்
சென்னை: கையில் சொட்டசொட்ட ரத்தம் வடிந்தாலும் சரண் செய்த செய்கை அனைவரையும் மிரள வைத்துள்ளது.
இதுதான் பாசமா?? என்று ரசிகர்கள் உச்சுக் கொட்டி வருகின்றனர்.
தான் ஜெயித்தாலும் தோற்றுப்போன உமாபதியை நினைத்து வருந்திய சரணை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி.

தேவைகளை புரியவைத்த ஷோ
சர்வைவர் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் உண்மையில் சர்வைவர்கள் தான் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். என்னதான் இவர்கள் செலப்ரிடியாக இருந்தாலும் தங்களுடைய அன்றாட தேவைகளுக்காக ஆக்ரோஷமான போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளனர். இவர்களை பார்க்கும் போது தான் பலருக்கும் உணவின் அருமையும், இருக்கும் இடங்களில் அருமையும் புரிந்துள்ளது. ரியாலிட்டி ஷோ என்றால் இதுதான் என்று ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.

செல்லத்தம்பி சரண்
இந்த ரியாலிட்டி ஷோவில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி அதில் பலர் வெளியேறி இருந்தாலும், கடைசி வரைக்கும் தன்னுடைய திறமையாலும், விடாமுயற்சியாலும் நிலை நிறுத்திய போட்டியாளர்களில் ஒருவராக சரண் இருந்துள்ளார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரை விடவும் வயதில்
இளையவராக இருந்ததால் ஆரம்பம் முதலே இவருக்கு சக போட்டியாளர்கள் பலர் சின்னதம்பி என்றும் செல்லப்பிள்ளை என்றும் செல்லமாக கொஞ்சி வந்தனர். என்னதான் கொஞ்சி கொண்டிருந்தாலும் போட்டி என்று வந்து விட்டால் நாங்கள் வேற என்றுதான் இவர்கள் பல நேரங்களில் நிரூபித்து வந்துள்ளனர்.

வலியிலும். ..வெற்றி
சர்வைவர் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியும் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில்தான் இருந்து வந்துள்ளது. தங்களுடைய உடல் உழைப்பையும், மன உறுதியையும் நிலைநாட்டும் விதமாக ஒவ்வொரு டாஸ்க்கிலும் ஆரம்பத்திலிருந்து நிரூபித்துக் கொண்டிருந்தார். கடைசி நாளில் மூன்றாவது பைனல் போட்டியாளர்களாக உமாபதி மற்றும் சரண் இடையே நடந்த போட்டியில் சரண் வெட்டுப்பட்டு ரத்தம் சொட்டி அனைவரையும் உச்சு கொட்ட வைத்து விட்டார். என்ன தான் இவர் தீ பற்ற வைப்பதில் கெட்டிக்காரராக இருந்தாலும் கையில் காயத்தோடு எப்படி இந்த டாஸ்க்கில் விளையாடுவார் என்று தான் பலர் பதறி வந்தனர். ஆனால் இவர் தன்னுடைய விடாமுயற்சியால் அந்த டாக்ஸ்க்கில் வெற்றி அடைந்து விட்டார்.
Recommended Video

கண்கலங்க வைத்த தருணம்
தான் வெற்றி அடையும் போது தன்னுடைய நண்பராகவும், அண்ணனாகவும் இருக்கும் உமாபதி வெற்றி அடையவில்லை என்பதை பார்த்து ரொம்பவே ஃபீல் பண்ணி உள்ளார். ஒவ்வொருமுறையும் இவர் உமாபதியின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டுதான் இருந்தார். அப்போது உமாபதி விளையாட்டில் ஆர்வம் காட்டாமல் கடைசி நேரத்தில் இருந்ததை பார்த்து என்னாச்சு என்று பதறியபடியே கேட்டுக்கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல் தான் வெற்றி பெற்றாலும் அதில் முழு மன நிறைவை அடையாமல் இவர் ஃபீல் பண்ணியதை பார்த்ததும் ரசிகர்கள் சரணுக்கு வாழ்த்துக்களை கூறிவந்தனர். அதுபோல உமாபதி தான் தோற்றாலும் பரவாயில்லை சரண் வெற்றி பெற்றது போதும் என்று சரணுக்கு ஆதரவாக பேசியது அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்திருந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications