திருமண நாளில் மகிழ்ச்சியான செய்தியை சொன்ன ரோஜா சீரியல் நடிகை.. வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: ரோஜா சீரியலில் அனுவாக நடிக்கும் அக்ஷயா ரசிகர்களிடம் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார்.
திருமணம் முடிந்ததே தெரியாமல் இருந்த ரசிகர்கள் தற்போது அக்ஷயா கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேட்டதும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்களாம்.
இத்தனை நாட்களாக மறைத்து வைத்த உண்மையை திடீரென்று கேள்விப்பட்டதும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அனுவாக புது அவதாரம்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பலருக்கும் பரிசயமான விஜேவாக வலம் வந்து கொண்டிருந்த அக்ஷயா. அதே சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் அனு கேரக்டரில் நெகட்டிவ் கேரக்டராக நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த சீரியலில் ஏற்கனவே அணு கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த ஷாமிலி கர்பமாக இருப்பதால் இந்த சீரியலை விட்டு விலகி இருந்தார். அவருக்கு பதிலாக அக்ஷயா வந்ததும் ரசிகர்கள் ஆரம்பத்தில் முகம் சுளித்தாலும் போக போக அக்ஷயாவை அனு கேரக்டரில் பார்த்து நன்றாக பழகி விட்டனர்.

நிஜத்தில் ஜாலி கேரக்டர் தான்
சீரியலில் கதாநாயகிக்கு இணையாக அக்ஷயாவும் வில்லி கேரக்டரில் அனைவரையும் மிரட்டி கொண்டிருக்கிறார். இவருடைய வில்லங்கத்தை பார்த்து ஒருபுறம் ரசிகர்கள் பலர் இவரை திட்டி தீர்த்தாலும் இவருடைய அழகைப் பார்த்த பல ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் பாலோவர்ஸ்களாக இருந்து வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் விஜே அக்ஷயா சீரியலில் மட்டும் தான் வில்லி நிஜத்தில் ஜாலியான கேரக்டராக தான் இருந்து வருகிறாராம்.

திருமண நாள் கொண்டாட்டம்
தற்போது ரோஜா சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் அக்ஷயா வெளியிட்ட போட்டோஸ்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. விநாயகர் சதுர்த்தி அதுமாக அனைத்து ரசிகர்கள் பிரபலங்களும் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை கூறி கொண்டிருக்கும் நேரத்தில் தன்னுடைய இரண்டாவது திருமண நாளை கொண்டாடி அக்ஷயா இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் தன்னுடைய ரசிகர்களுக்கு போட்டோ வெளியிட்டு கூறி இருக்கிறார். அதை பார்த்த பல ரசிகர்கள் திருமணம் ஆனதே தெரியாது அதற்குள் இப்படியா என்று புலம்பி வருகிறார்கள்.

குட்டி குழந்தை வரப்போகுது
அக்ஷயா தன்னுடைய போஸ்டில் எங்களுடைய குடும்பம் விரைவில் ஆத்மார்த்தமாக மூவராக மாறும் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சிறிய அதிசயம் நடக்க உள்ளது மற்றும் இரண்டாம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் என்று தன்னுடைய கணவருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். இரண்டு வருடங்கள் மட்டுமல்லாமல் என்றென்றும் இதே மகிழ்ச்சியில் தொடர வேண்டும் என்று பல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தன்னுடைய குழந்தை விரைவில் வரப்போகும் செய்தியை மகிழ்ச்சியோடு ரசிகர்களிடம் பகிர்ந்து உள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications