பொதுவாக எல்லோரையும் அப்படி நினைக்க கூடாது... நெகிழ்ச்சியாய் பேசிய ராஜலட்சுமி
சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ராஜலட்சுமி மக்களின் பொதுவான பார்வையை குறித்து நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
ஒருவர் தப்பு செய்தால் நாம் மொத்தமாக அனைவரையும் சேர்த்து குறை கூறக்கூடாது என்று ராஜலட்சுமி அட்வைஸுக்கு வாழ்த்துக்கள் அதிகரித்து வருகிறது.

பாடகராக பிரபலம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக ஒரு பாடகராக பலருக்கும் பரிச்சயமான ராஜலட்சுமி தற்போது திரைப்படங்களின் பின்னணி பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .பல்வேறு நாடுகளுக்கு சென்று தன்னுடைய நாட்டுப்புற பாடல்களையும் தான் பாடிய பாடல்களையும் பாடிவரும் ராஜலட்சுமி கிடைக்கும் நேரங்களில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனுள்ள தகவல்களை கூறி வருகிறார்.

அது முதல் நிலை
அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஜலட்சுமி வெளியிட்ட வீடியோ வாழ்க்கையில் நமக்கு ஒரு பிரச்சனை வரும்போது அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பார்ப்பதில் தான் நாம் எப்படி பக்குவமாக இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியும். உதாரணத்துக்கு ஒரு பையனோ இல்லை ஒரு பொண்ணே ஒருத்தரை ஏமாத்திட்டாங்க என்றால் இந்த பசங்களே இப்படித்தான், இல்லை இந்த பொண்ணுங்களே இப்படித்தான் என்று பொதுவான ஒரு முடிவுக்கு வருவது முதல் நிலை என்று கூறியிருக்கிறார்.

இந்த மனசு பெருசு
அதோடு இந்த பையன் இப்படி இருக்கிறான் என்றால் எல்லா பையனும் இப்படி இருக்க மாட்டாங்க! இந்த பொண்ணு இப்படி பண்ணிட்டு இருந்தா? எல்லா பொண்ணுங்களும் எப்படி பண்ண மாட்டாங்க! என்று புரிஞ்சுக்கிறது இரண்டாவது நிலை. மூன்றாவது நம்மள ஏமாத்தினவர்களே திரும்ப வந்து நான் எல்லா தப்பும் தெரியாம பண்ணிட்டேன் என்று வரும்போது ,ஒருவன் எல்லா நேரமும் நல்லவனாகவும் இருக்க எல்லா நேரமும் கெட்டவனாகவும் இருக்க முடியாது மன்னித்து ஏற்றுக் கொள்வது மூன்றாவது நிலை.

காரணம் பார்வை தான்
இதனால் நாம மூன்றாவது நிலையில் இருக்கிறோமா இல்லையா என்பது சந்தேகம்தான். ஆனால் முதல் நிலையில் இல்லாமல் இருக்க வேண்டும். நம்ம வாழ்க்கையில் நடக்கும் எக்ஸ்பீரியன்ஸை வைத்து எல்லாரும் இப்படித்தான் எப்பவுமே இப்படித்தான் என்று ஒரு பொதுவான முடிவுக்கு வராமல் ஒரு சிறந்த பக்குவம் என்று கூறி இருக்கிறார். எந்த விஷயத்தையும் அல்லது யாரையும் நாம் பார்க்கும் பார்வையால் தான் அது சரி தவறு என்று தெரிகிறது என்று ராஜலட்சுமி கூறியிருப்பதற்கு ரசிகர்கள் பலர் லைக்குகளை அளித்து வருகிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications