பிக்பாஸில் ஆரம்பமாச்சு குழாயடி சண்டை... இந்த வாரம் உருளப் போவது யாருடைய தலை
சென்னை: கலகலப்பாக இருந்த பிக்பாஸ் இப்போது களை கட்ட ஆரம்பித்து இருக்கிறது.
ஒற்றுமை என்றால் அதற்கு நாங்கள் தான் அடையாளம் என்று சொல்லிக்கொண்டிருந்த போட்டியாளர்களுக்குள் பிரச்சனை பூகம்பமாக வெடித்திருக்கிறது.
இன்றைய மூன்று ப்ரமோக்களும் காயினால் பூதாகரமாக பிரச்சனைகளை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

தாமரையின் உண்மையான முகம்
இதுவரைக்கும் அதிகமாக ப்ரமோக்களில் இடம்பெறாத போட்டியாளர்கள் தான் இன்றைய ப்ரமோக்களில் கண்ணீரை சிந்தி கொண்டு மூன்று ப்ரமோக்களையும் குத்தகைக்கு எடுத்திருக்கின்றனர். இது வரைக்கும் இல்லாத வகையில் இன்றைய எபிசோட் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். என்னதான் இதுவரைக்கும் ஜாலியாக இந்த நிகழ்ச்சியிலிருந்து கொண்டிருந்தாலும் எப்போது இவர்கள் தங்களுடைய உண்மை முகத்தை காட்டுவார்கள் என ரசிகர்கள் பலர் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்றைய ப்ரமோவில் தாமரை தன்னுடைய உண்மையான முகத்தை காட்டி விட்டார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

காயின்களின் பெருமை
என்னதான் தாமரைச்செல்விக்கு ரசிகர்கள் அதிகமாக உருவாகி இருந்தாலும் இவர் ஆரம்பத்திலிருந்தே குழந்தை தனமாகவும், வெகுளித் தனமாகவும் இருக்கிறார் மனதில் பட்டதை டக்கென்று பேசகிறார் என்று ரசிகர்கள் கூறிவந்த நிலையில், இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் பெருகி வருகின்றனர். முதல் வாரத்தில் இவர் தலைவராக இருந்ததால் அந்த ஒரு வாரம் மட்டும் தான் இவருடைய பெயர் எலிமினேஷனில் இல்லை அதற்கு அடுத்து தொடர்ந்து இவருடைய பெயர் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷனில் இருந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் இவரை ரசிகர்கள் அதிகளவில் ஓட்டு அளித்து காப்பாற்றி வந்தனர்.

காயினை கைப்பற்றிய சுருதி
இந்த நிலையில் 3-வது வாரத்திலும் இவருடைய பெயர் எலிமினேஷனில் இருந்து வருகிறது. ஆனால் தன்னுடைய காயினை வைத்து தன்னை காப்பாற்றிக் கொள்ளலாம் அல்லது தனக்கு பதிலாக வேறொரு போட்டியாளரை நாமினேஷன் செய்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று பிக் பாஸ் சலுகை கொடுத்திருந்தது. ஆனால் அதை கூட அவர் பயன்படுத்தாமல் ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் பாசத்தால் எப்படியும் இந்த வாரம் காப்பாற்றி விடுவார் என்று நினைத்து இருந்தார். இந்த நிலையில் இவருடைய காயினை இன்று சுருதி எடுத்துவிட்டார். இதுதான் வீட்டில் பிரச்சனைக்கு காரணமாக இருந்திருக்கிறது.

தீர்வு என்ன??
தாமரைச் செல்வியின் காயின்களை எடுத்தால் எப்படியும் அவர் அழுது கூப்பாடு போட்டு விடுவார் என்று நன்றாகவே தெரியும் என போட்டியாளர்கள் பலர் கூறிக் கொண்டிருந்தது போலவே தற்போது இன்று போட்டியைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் பிரச்சனையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். தடித்த வார்த்தைகளால் தன் மனதில் இருப்பதையெல்லாம் முகத்துக்கு நேராக இவர் பேசியது சக போட்டியாளர்களையும் சங்கடத்தில் ஆழ்த்தி அழவைத்து இருக்கிறது. அதனால் இன்றைய ப்ரமோகளில் பலரும் வரிசை கட்டிக் கொண்டு அழுது கொண்டு இருக்கின்றனர். இதை பார்த்ததும் இந்த வாரம் கமல் முன்னாடி யாருடைய தலை உருளப் போகிறதோ என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications