தன்னுடைய மோட்டிவேஷனல் இதுதான்... ரகசியத்தை வெளியிட்ட விஜி
சென்னை: சர்வைவர் நிகழ்ச்சியில் தன்னுடைய வெற்றிக்கு காரணம் இதுதான் என்று விஜி கூறியிருக்கிறார்.
அம்மாவாக மாறிய பிறகுதான் தைரியமாக மாறினேன் என்று தாய்மையின் பெருமையை எடுத்துக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
விஜியின் வெற்றியைப் பார்த்து மலைத்து போய் உள்ளனர் நெகட்டிவர்ஸ்.

திரும்பிப் பார்க்க வைத்த திறமை
முயற்சிக்கும், திறமைக்கும் வயதும் சூழ்நிலையும் காரணமல்ல. தன்னுடைய விடாமுயற்சியும் மன தைரியம் தான் காரணம் என்று மீண்டும் மீண்டும் விஜயலட்சுமி தன்னுடைய ரசிகர்களுக்கு நிரூபித்து வருகிறார். சினிமாக்களில் நடிகையாக இருந்தாலும் தன்னுடைய திறமையால் தற்போது ரியாலிட்டி ஷோ மூலமாக அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் இவரிடம் பல பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர். திருமணம் முடிந்து விட்டால் வாழ்க்கை அவ்வளவுதான் என்று வீட்டிற்குள்ளே முடங்கிவிடாமல் தன்னுடைய திறமையை உலகிற்கு காட்ட வேண்டும் என்று விஜியை காட்டி பலர் எடுத்துக்காட்டு கூறிவருகின்றனர்.

சிரித்தவர்களை யோசிக்க வைத்து விட்டாரே
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி வெளிநாட்டு நிகழ்ச்சிகளை போன்று மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பம் முதல் தற்போது வரைக்கும் ரசிகர்களின் மத்தியில் ஒரு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி எந்த நிகழ்ச்சியின் சாயல் போன்றும் இல்லை. இது தனித்துவமாக இருக்கிறது என்று இதன் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் போட்டிகள் மூலமாக உண்மையான போட்டியாளர்களின் திறமைகளை புரிந்துகொள்ள முடிகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த சூப்பர் மாம்
வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் மூலமாக ரசிகர்கள் பலருக்கும் பரிச்சயமான போட்டியாளர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தாலும் விஜயலட்சுமி அவருடைய ரசிகர்களால் ஆரம்பம் முதலே அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறார். இவர் ஏற்கனவே சூப்பர் மாம் எனும் ஒரு பட்டத்தை பெற்றிருப்பதால் இந்த நிகழ்ச்சியிலும் இவர் வெற்றி பெற்றால் இவருக்கு மேலும் சிறப்பு என்று இவருடைய ரசிகர்கள் கூறிவந்தனர். ஆனால் இவரை பிடிக்காத நெகட்டிவ்வர்ஸ் இவருக்கு எதிராக பல கமெண்டுகளை கொடுத்துக் கொண்டிருந்தனர்.

இதுதான் மோட்டிவேஷனா??
நேற்றைய எபிசோடில் இவர் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார். ஆண் போட்டியாளர்களுக்கும் தன்னைவிட வயதில் குறைந்த போட்டியாளர்களுக்கும் ஈடுகொடுக்கும் விதத்தில் தன்னுடைய திறமையை வெளி கட்டியிருக்கிறார். ஒற்றை கம்பத்தில் இவர் அதிகமாக நேரம் நின்றுகொண்டு அனைவருக்கும் அல்லு கொடுத்திருக்கிறார். அப்போது இவர் வெற்றி பெற்றதும் இவரை பாராட்டும் விதமாக அர்ஜுன் விசிலடித்து இவருக்கு எனர்ஜி ஊட்டி இருக்கிறார். அதை பார்த்ததும் இதுதான் என்னுடைய மோட்டிவேஷன்...உங்களிடமிருந்து விசில் சத்தத்தை பெறவேண்டும் என்றுதான் இவ்வளவு போராடினேன் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் நான் என் பையன் பிறப்பதற்கு முன்பு வரைக்கும் இருந்ததை விடவும் அவன் பிறந்த பிறகு தான் அதிகமாக தைரியமாக மாறி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதை பார்க்கும் போது இவரை போன்ற அம்மாக்களுக்கும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications