வார்த்தைகளால் மதிப்பை இழந்த சிபி...இதை யாரும் எதிர்பார்க்கவில்லை
சென்னை: தாமரையை பற்றி சிபி பேசிய வார்த்தைகளை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
சபை நாகரீகம் என்பது இல்லாமல் இந்த மாதிரி எல்லாம் பேசலாமா என கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இதுவரைக்கும் இவர் வாங்கி வைத்திருந்த நல்ல பெயர்கள் எல்லாம் தற்போது நெகட்டிவாக மாறிவிட்டது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

பட்டிமன்றம் புரியவில்லையே
நேற்றைய எபிசோட்டில் பட்டிமன்றம் நடக்கும்போது அதில் போட்டியாளர்கள் பாதி புரிந்தும், பாதிபேர் நிகழ்ச்சியைப் பற்றி புரியாமலும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதை பார்க்கும்போது ரசிகர்களுக்கு கடுப்பாக தான் இருக்கிறது. என்னடா இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று என பலர் கூறி வந்த நிலையில் எப்போதும் போல தாமரைச்செல்வி தன்னுடைய மனதில் இருப்பதை என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசிக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்ததும் ரசிகர்கள் இது என்ன இப்படி உளறிக் கொண்டு இருக்கிறார் என கூறிவருகின்றனர்.

கருத்து விபரீதம் ஆச்சு
பட்டிக்காடா, பட்டணமா என்னும் தலைப்பில் இரண்டு அணிகளும் தங்களுடைய கருத்துக்களை, தைரியமாகவும் ரசிகர்களுக்கு சுவாரசியமாகவும் பேசுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஆரம்பத்தில் பேசிய ராஜு எதையோ பேசி காமெடியில் முடிக்கிறேன் என்று அவர் முடித்து விட்டார். ஆனால் அவர் பேசியதையும் கேட்டு ரசிகர்கள் சிரித்துக் கொண்டுதான் இருந்தனர். இந்த நிலையில் அவருக்கு அடுத்ததாக தாமரைச்செல்வி கிராமத்தில் உடை அலங்காரத்தை பற்றியும் அதை பலர் நகரத்தில் வேறு விதமாக அணிந்து தங்களுடைய பூர்வீகத்தை தொலைத்து விடுகிறார்கள் என்று பேசிக்கொண்டிருந்தார்.

சிபியின் கருத்து
இவர்கள் இருவரின் பேச்சைக் கேட்டதுமே போட்டி ரசிகர்களுக்கு அலுப்பு தட்டி விட்டது. என்னப்பா சம்பந்தமே இல்லாம பேச்சு போய்கொண்டு இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், பட்டணத்து அணியிலிருந்து சிபி பேசியதுதான் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. தாமரை எதார்த்தமாக பேசிய வார்த்தைக்கு இவர் உள்நோக்கத்தோடு குறை கூறி இருக்கிறார். இது எத்தனை நாள் இவர் மீது உள்ள கோபம் என்று தெரியவில்லை என பலர் கூறி வருகின்றனர். நீங்கள் அடக்கமாக இருக்கிறீர்களா..!!??என தாமரையைப் பார்த்து சிபி கேட்டதும் ரசிகர்களே ஒரு நிமிடம் ஆடியே போய்விட்டனர்.

இப்படி பேசலாமா..!!??
என்ன இப்படி பொதுவெளியில் ஒரு பெண்ணைப் பார்த்து கேள்வி கேட்கலாமா என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் விடாத தாமரை நான் எந்த விதத்தில் அடக்கம் இல்லாமல் இருக்கிறேன் என்று மீண்டும் தோண்டி தோண்டி சிபிஐ கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கு சிபி அடக்கம் என்றால் என்ன என்று தாமரையை எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு தாமரையும் பதிலை கூறிக்கொண்டு இருக்கிறார். அதற்கு பிறகும் அவர் மனது சமாதானம் அடையாமல் இடத்தை விட்டு வெளியேறிய பிறகு அவருக்கு பின்னால் இவருக்கு மனசு உறுத்துது போல, நான் அப்படி சொன்னது என்று சிபி பேசிக்கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் சிபி மீது ரசிகர்கள் நல்ல மதிப்பை வைத்திருந்த நிலையில் இன்று இவருடைய மதிப்பை குறைத்து விட்டார் என ரசிகர்கள் அதிகமாக கமெண்டுகளை பரப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications