பேசுறவங்க என்ன வேணாலும் பேசுங்க.. என் உறவு இவங்க தான்! வெளிப்படையாக போஸ்ட் போட்ட திரிஷா.. வதந்திகளுக்கு பதிலடி
சென்னை: தமிழ் சினிமாவில் சமீபமாக பெரும் பேசுபொருளாக மாறியிருக்கும் விவகாரம் நடிகை திரிஷா, இயக்குநர்-நடிகர் பார்த்திபன் மற்றும் அவரது மகள் அபிநயா (Isshi Krishna) ஆகியோரின் சமூக வலைதள பதிவுகள் மூலம் மேலும் வைரலாகியுள்ளது. குந்தவை குறித்த பார்த்திபனின் கருத்தால் தொடங்கிய இந்த சர்ச்சை தற்போது ரசிகர்களிடையே புதிய விவாதத்தை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் திரிஷா வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

குந்தவை பேச்சால் கிளம்பிய சர்ச்சை
ஒரு விருது விழாவில் கலந்து கொண்டிருந்த பார்த்திபனிடம், நிகழ்ச்சியில் இருந்தவர்கள் நடிகை த்ரிஷாவின் புகைப்படத்தை காட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் "குந்தவை வீட்டில் குந்த வைத்தால் நல்லது" என்று கூறி இருந்தார். இந்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதுடன், அது ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வைரலான பிறகு த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பலரும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க தொடங்கினர்.
பார்த்திபனின் மன்னிப்பு மற்றும் முதல் வீடியோ
விவாதம் பெரிதாகிய பிறகு பார்த்திபன் முதலில் ஒரு ஆடியோ மூலம் வருத்தம் தெரிவித்தார். பின்னர் அவர் வெளியிட்ட வீடியோவில் இந்த விவகாரம் குறித்து விரிவாக பேசினார். அந்த வீடியோவில் அவர், தனது வாழ்க்கையில் முக்கியமானவர்களை பற்றி பேசும்போது முதலில் நடிகர் விஜய், அடுத்ததாக அவரது மனைவி சங்கீதா, பின்னர் ட்வீட் போட்ட "மூன்றாவது மனிதர்" என்று குறிப்பிட்டார்.
இந்த "மூன்றாவது மனிதர்" என்ற குறிப்பே சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியது. பலரும் அதனை த்ரிஷாவை குறித்தே கூறியதாக எடுத்துக் கொண்டு அவரை பற்றி விமர்சிக்க தொடங்கினர்.

இரண்டாவது வீடியோ வெளியிட்ட பார்த்திபன்
இந்த நிலையில் முதல் வீடியோ மிகவும் நீளமானதாக இருந்ததால் அதன் இரண்டாம் பாகத்தை வெளியிடுவதாக பார்த்திபன் அறிவித்தார். ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை விரைவாக வெளியிடுமாறு கேட்டுக் கொண்டதால், மாலை வெளியிட திட்டமிட்டிருந்த அவர் மதியமே அதை வெளியிட்டார்.
இரண்டாவது வீடியோவில் அவர் விஜயின் அரசியல் பயணம், என்.டி.ஏ கூட்டணி பற்றிய விவாதங்கள் மற்றும் தன்னை பற்றிய தவெக தொடர்பான வதந்திகள் குறித்து பேசினார். "வொர்த் இல்ல என்று விஜய் சொல்வது போல என் பேச்சும், அந்த ட்வீட்டும் வொர்த் இல்ல என்று விட்டுவிடுங்கள்" என்று அவர் கூறினார்.
மேலும் உடல் தானம் செய்திருப்பதாக முன்பு அறிவித்திருந்த த்ரிஷாவை அவர் பாராட்டியபடியே தனது வீடியோவை முடித்தார். இதன் மூலம் இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.

த்ரிஷா மற்றும் இஸ்ஸியின் இன்ஸ்டா ஸ்டோரி
பார்த்திபனின் வீடியோ வெளியான நேரத்தில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு வீடியோவை பகிர்ந்தார். அதில் ஒரு செல்ல நாய் "குந்தவை" கெட்டப்பில் இருக்கும் காட்சியை அவர் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள், பார்த்திபன் கூறிய "குந்தவை" குறிப்பு குறித்து த்ரிஷா மறைமுகமாக பதில் அளித்திருக்கிறார் என்று பேச ஆரம்பித்தனர்.
அதே நேரத்தில் பார்த்திபனின் மகள் இஸ்ஸி கிருஷ்ணனும் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அதில் அவர் இரண்டு பொம்மைகளுடன் தூங்க முயற்சி செய்யும் காட்சி இடம்பெற்றிருந்தது. பின்னணியில் "நீ தூங்கு என் அழகு செல்லமே... நான் இருக்கேன்" என்ற பாடல் ஒலித்தது.
பார்த்திபன் "மூன்றாவது மனிதர்" என்று கூறியதற்கே இந்த வீடியோக்கள் மறைமுக பதிலாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதிக்க தொடங்கினர்.

நண்பர்களுடன் புகைப்படம் பகிர்ந்த த்ரிஷா
இதற்கிடையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராமில் நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்தார். தன்னை பற்றி எவ்வளவு வதந்திகள் வந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் தன் வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வருகிறேன் என்பதுபோல் அவர் இந்த பதிவை பகிர்ந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்வி
இந்நிலையில் இன்று விமான நிலையத்தில் த்ரிஷாவை சந்தித்த செய்தியாளர்கள், சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யுடன் ஜோடியாக கலந்து கொண்டது குறித்து சமூக வலைதளங்களில் அதிகமாக விமர்சனங்கள் எழுந்து வருவது பற்றி கேள்வி எழுப்பினர்.
ஆனால் அந்த கேள்விக்கு த்ரிஷா எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாக அங்கிருந்து கிளம்பிச் சென்றிருந்தார். இதனால் தன்னை பற்றிய சர்ச்சைகள், விமர்சனங்கள் குறித்து இனிமேல் எந்த பதிலும் அளிக்க வேண்டாம் என்று த்ரிஷா முடிவு செய்துவிட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனால் பார்த்திபன் வெளியிட்ட வீடியோ, த்ரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி மற்றும் ரசிகர்களின் விவாதங்கள் ஆகியவை இணைந்து இந்த விவகாரம் இன்னும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகவே இருந்து வருகிறது.
-
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்












Click it and Unblock the Notifications