நாளையோடு முடிவடையும் பாரதி கண்ணம்மா சீரியல்... கடைசி நேரத்தில் "இதை” மட்டும் மறந்து விட்டார்களா?
முடிவடைய இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவை மட்டும் காணவில்லையே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் நாளையோடு முடிவடைய இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே பாரதி கண்ணம்மா சீரியல் முதல் பாகம் முடிவடைந்தாலும் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பை இயக்குனர் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் முதல் பாகம் முடிவடையும் தருணத்திலும் வெண்பாவை மட்டும் காணவில்லையே என்று ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

நிறைவேறாத எதிர்பார்ப்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் சுமார் நான்கரை வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிலையில் இந்த சீசனின் முதல் பாகம் நாளையோடு முடிவடையை இருக்கிறது. இந்த வாரத்தில் முடிவடையும் இந்த சீரியலில் பல்வேறு திருப்பங்கள் கடைசி நேரத்தில் நடைபெற்றது. ஏற்கனவே சண்டை சச்சரவுகளோடும் கண்ணம்மாவும் பாரதியும் பிரிந்து இருந்த நிலையில் இவர்கள் இப்போதுதான் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். ஒரு சில மாதங்களுக்கு முன்பே டி என் ஏ டெஸ்ட் ரிசல்ட் வெளியானதும் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

மீண்டும் திருமணம்
நான் டெஸ்ட் ரிசல்ட் வந்த பிறகும் இந்த முடிவு சரியாக இருக்காது என்று மீண்டும் கண்ணம்மா பாரதியை ஏற்றுக் கொள்ளாதது போல சில மாதங்கள் சீரியலை இழுத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது பாரதிக்கு பழசை எல்லாம் மறந்து விட்ட நிலையில் பாரதியின் பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்த கண்ணம்மா பாரதியை மன்னித்து ஏற்றுக் கொண்டிருக்கிறார். தற்போது இவர்கள் இருவருக்கும் மீண்டும் திருமணம் நடந்து இருக்கிறது. இன்று இவர்களுடைய திருமணம் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தனர்.

வெண்பாவை காணவில்லை
இந்த நிலையில் இன்று சினேகன், கன்னிகா தாலி எடுத்துக் கொடுக்க பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. திருமணத்திற்கு வெண்பாவின் அம்மாவும் வெண்பாவின் கணவரான ரோகித்தும் வந்திருக்கின்றனர். ஆனால் வெண்பா மட்டும் வரவில்லை அதைப்பற்றி ரசிகர்கள் இப்போது கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே வெண்பா ஜெயிலிலிருந்து தப்பிப்பதற்காக தனக்கு மனநிலை சரியில்லை என்பது போன்று நாடகம் ஆடியதால் மனநல மருத்துவமனையில் கோட்டில் இருந்து சேர்க்க கூறி இருந்தனர்.

வருவாரா இல்லையா
இந்த நிலையில் பாரதி மற்றும் கண்ணம்மாவிற்கு இருவருக்கும் திருமணம் முடிந்து மீண்டும் இவர்கள் சென்னைக்கு சென்ற பிறகு, மனநல மருத்துவமனையில் இருந்து வரும் வெண்பா கண்ணம்மாவை மீண்டும் பலி வாங்க தொடங்குவது போன்று இரண்டாவது பாகம் இருக்கப் போகிறதா? அதனால் தான் வெண்பா மட்டும் திருமணத்திற்கு வரவில்லையா? என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் வெண்பா சில நாட்களுக்கு முன்பு அவருடைய அம்மாவாக நடிக்கும் ரேகா உடன் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு லாஸ்ட் நாள் சூட்டிங் போஸ்ட் என்று பதிவிட்டதை குறித்து, நாளை ஒரு நாள் இருக்கும் நிலையில் நாளை வெண்பா வருவாரா? இல்லையா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications