விஜய் சங்கீதா பிரச்சனை, இடையே வந்த மாதம்பட்டி ரங்கராஜன் மனைவி ஸ்ருதி! நடிகைக்கு அட்டாக் போஸ்ட்
சென்னை: தமிழக அரசியல், சினிமா, சோஷியல் மீடியா - மூன்றையும் சேர்த்து ஒரே நேரத்தில் குலுக்கிய விஷயம் என்னன்னா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய் - அவருடைய மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுதான். இந்த செய்தி வெளியான முதல் நிமிஷத்திலிருந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்துக்கொண்டிருக்க, அதற்கு மேல ஒரு புதிய ட்விஸ்ட் மாதிரி மாதம்பட்டி ரங்கராஜின் குடும்பம் இந்த விவகாரத்துக்குள் வந்திருப்பது இணையத்தில் இன்னும் பெரிய பேசுபொருளாக மாறி இருக்கிறது.

சங்கீதா விவாகரத்து மனு
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்த மனுவில் கிட்டத்தட்ட 28 பாயிண்டுகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. நல்லபடியா போய்க்கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் ஒரு நடிகை வந்த பிறகுதான் பிரச்சனை ஆரம்பமானது... அதற்கு பிறகு இருவருக்கும் மனகசப்பு அதிகமானது... சமரசம் நடந்தபோது அந்த உறவை முறித்துக்கொள்கிறேன் என்று விஜய் உறுதி அளித்தார்... ஆனா அதில் மாற்றமே இல்ல... 2021 முதல் ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியா வாழ்ந்தோம்... பலமுறை பேசினேன்... கேட்கலை... அதனால மன உளைச்சலோட பிரிந்து வாழ்கிறேன் - இப்படின்னு அவர் மனுவில் வேதனையோட சொல்லியிருக்கிறார் என தகவல்கள் பரவி வருகிறது.
விஜய் பற்றிய குற்றச்சாட்டு
அதோட, பொது நிகழ்ச்சிகளுக்கு கூட தன்னை அழைத்துச் செல்லவில்லை... அந்த நடிகையின் பெயரை இப்போ சொல்லவில்லை... ஆனால் விஜய் தரப்பில் இருந்து அழுத்தம் வந்தால் அவரையும் எதிர்மனுதாராக சேர்ப்பேன்... விஜய்யின் வருமானத்துக்கும், சமூகத்தில் இருக்கும் செல்வாக்குக்கும் ஏற்றபடி நிரந்தர ஜீவனாம்சம் வேண்டும் -ன்னு கூட குறிப்பிட்டிருப்பதாக பேசப்படுகிறது.
அதிர்ச்சியில் ரசிகர்கள்
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் "இது நம்ப முடியாத விஷயம்"ன்னு ரியாக்ட் பண்ணிக்கிட்டிருக்க, இன்னொரு பக்கம் "இது முழுக்க அரசியல் பின்னணி கொண்ட பிரச்சனை"ன்னு சொல்றவர்களும் இருக்காங்க.
இப்படி சூடு அடங்காம இருக்கும்போதே இன்னொரு சம்பவம் இந்த விவகாரத்துக்கு தீயில் எண்ணெய் ஊத்தின மாதிரி ஆகிவிட்டது. பிரபல சமையல்காரரும் தொழிலதிபருமான மாதம்பட்டி ரங்கராஜ் - அவருடைய முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் தான் சங்கீதாவுக்கு ஓபனாக ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

மாதம்பட்டி ரங்கராஜன் மனைவி போஸ்ட்
ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜின் திருமண வாழ்க்கை, இரண்டாவது திருமணம், குடும்ப பிரச்சனை - இவை எல்லாம் இணையத்தில் பெரிய பஞ்சாயத்தாக ஓடிக்கொண்டிருக்குது. அந்த சூழலில்தான் ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "திருமணத்தை மீறிய உறவை வெட்கமின்றி கொண்டாடும் காலம் இது... நான் சங்கீதா மேடமுக்கு ஆதரவு" ன்னு பதிவு போட்டார்.
அதோட நிற்காம, "விஜய் சார்... இரண்டாவது பெண்ணை விரட்டி அடிங்க... அன்பான மனைவி, குடும்பத்தோட மீண்டும் சேர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்" ன்னு நேரடியாக விஜய்யை டேக் பண்ணி எழுதியிருப்பது தான் இப்போ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்த ஒரு பதிவு வந்ததும் விவாகரத்து விவகாரம் இன்னொரு லெவலுக்கு போயிருச்சு. "இது பெண்களின் குரல்", "இது ஓவரா பேசுறது", "யாரோட குடும்ப விஷயத்துல ஏன் இப்படி கமெண்ட்" -ன்னு ரெண்டு தரப்பும் சண்டை போட ஆரம்பிச்சுருச்சு.
விஜய் - சங்கீதா ஜோடி சுமார் 25 வருடங்களுக்கும் மேலா சேர்ந்து வாழ்ந்தவர்கள். மகன் சஞ்சய், மகள் திவ்யா - இருவரும் பெரியவர்களாகிவிட்ட இந்த நேரத்தில் இந்த பிரிவு வந்திருப்பது ரசிகர்களுக்கு இன்னும் ஷாக்கா இருக்கு. குறிப்பா விஜய்யை ஒரு 'பர்பெக்ட் ஃபாமிலி மேன்'ன்னு பார்த்தவர்களுக்கு இந்த செய்தி செரிக்கவே முடியல.
இப்போ எல்லாரும் கவனமா பார்க்குற விஷயம்
இந்த வழக்கு நீதிமன்றத்துல எப்படிப் போகும்? சமரசம் நடக்குமா? அந்த நடிகை பெயர் வெளியாவா? விஜய் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் வருமா?ன்னு தான்.
மொத்தத்தில் பார்க்கும்போது, இது சாதாரண விவாகரத்து செய்தி இல்ல.. ஒரு முன்னணி நடிகர், ஒரு அரசியல் தலைவர், நீண்ட வருட குடும்ப வாழ்க்கை, 28 பாயிண்ட் மனு, இன்னொரு பிரபல குடும்பத்தின் ஓபன் ஆதரவு.. இவையெல்லாம் சேர்ந்து தமிழ்நாட்டையே பேச வைக்கும் பெரிய சர்ச்சையாக மாறி இருக்கிறது.
-
இனி நீங்க முதல்வரா? உங்க ஜோடி நடிகை முதல்வரா? கேள்விக்கு விஜய் கேரக்டரில் நடித்த நட்டி ஓபன் -
விஜய் வேட்பு மனு பெரம்பூரில் தள்ளுபடி செய்யப்படுமா? சட்ட ரீதியாக விஜய்க்கு உள்ள வாய்ப்பு என்ன? -
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்! -
திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள் -
Vijay Affidavit: குடும்பத்திற்கே கடன் கொடுத்த ஒருவரை பார்த்ததே இல்லை! விஜய் மீது முத்தரசன் தாக்கு! -
TN 2026 ட்ரெய்லரை பார்த்து கொளுத்தி போட்ட ஆதவ்.. விஜயை வைத்து பதிலடி கொடுத்த தம்பி ராமையா மகன் உமாபதி! -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை!












Click it and Unblock the Notifications