நான் முதுகில் குத்தி விட்டேன் என்று சொல்கிறார்கள்...என் பக்கம் நியாயம் இருக்கு.. விஜியின் குமுறல்
சென்னை: சர்வைவர் நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் விஜி நடந்துகொண்டது பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகிறது.
கடைசி நேரத்தில் விஜி இரட்டை வேஷம் போட்டு விட்டார் என்று நெட்டிசன்கள் பலர் குறைகூறி வருகின்றனர்.
தன் பக்கத்து நியாயத்தையும் அன்று நடந்ததையும் விஜி தற்போது தெளிவாக விளக்கியுள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த காடர்கள்
சர்வைவர் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து ரசிகர்கள் பலருக்கும் பிடித்தமான ஒரு அணியாக காடர்கள் அணி இருந்தது. இந்த அணியில் போட்டியாளர்கள் என்னதான் போட்டியில் மோதிக் கொண்டாலும் ஒற்றுமையாகவும் கலகலப்பாகவும் இருந்து வந்தனர். ஒருவருக்கு ஒருவர் இவர்கள் ஆறுதலாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கத் தொடங்கிவிட்டனர். அதில் பலரையும் கவர்ந்த ஒரு போட்டியாளராக உமாபதி இருந்துவந்தார். இவருடைய ஜாலியான கேரக்டர் அனைவரையும் வசீகரித்து உள்ளார்.

கடைசி நேரத்தில் ஏற்பட்ட மாற்றம்
ஆரம்பத்திலிருந்தே உமாபதியிடம் அதிகமாக பாசமாக இருந்த விஜி கடைசி நேரத்தில் டபுள் கேம் விளையாடி விட்டார் என்று விஜியின் மீது ரசிகர்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவர் முதல் பைனல் லிஸ்ட் ஆக செலக்ட் ஆனதும் அவரால் பாதுகாப்பாக அழைத்து சொல்லப்படும் நபராக உமாபதி தான் இருப்பார் என்று பலர் எதிர்பார்த்து இருந்த நேரத்தில் விஜியும் அதேதான் கூறியிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் விஜியின் முடிவில் மாற்றம் ஏற்பட்டதால் ரசிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்து விஜியின் மீது கோபத்தில் இருந்து வருகின்றனர்.

ஏமாற்றத்தைக் கொடுத்த தருணம்
உமாபதி தன் அருகில் இருக்கும் போது தன்னுடைய குடும்பத்தோடு இருக்கும் ஒரு ஃபீலிங் இருக்கிறது என்று அடிக்கடி உறுதியோடு கூறிக்கொண்டிருந்த விஜி மூன்றாம் உலகத்திற்கு செல்லும்போது முதல்முறையாக உமாபதி கண்கலங்கி அழுதுள்ளார். அதுவரைக்கும் எந்த சூழ்நிலையிலும் அழுகாமல் சிரித்தபடியே அனைவரையும் கலாய்த்துக் கொண்டிருந்தவர் முதல் முறையாக விஜிக்காக தான் ஃபீல் பண்ணி அழுது இருந்தார். அதுபோல விஜியும் மூன்றாம் உலகத்தில் அடிக்கடி உமாபதியை மிஸ் பண்ணுவதாக உணர்ந்துள்ளார். ஆனால் மீண்டும் விஜி இவர்கள் அணிக்குள் வரும்போது உமாபதி இவரை அழைக்காமல் அம்ஜத்தை அழைத்துக் கொண்டது விஜிக்கு ஏமாற்றமாக இருந்துள்ளதாம்.

தன் பக்கத்து நியாயம்
அடுத்தடுத்து உமாபதி யின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை பார்த்து விஜி மனதளவில் ரொம்பவே கஷ்டத்தில் இருந்து உள்ளாராம். ஆனால் கடைசி நேரத்தில் கூட உமாபதி இடம் தானாக வலிய வந்து தான், நான் உன்னை பாதுகாப்பாக அழைத்துச் செல்வேன் என்று உறுதி கூறியிருக்கிறார். அதற்குப் பிறகும் அவர்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகளும் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளதாம். கடைசி நாளன்று நடந்த பல விஷயங்களை வெளியில் காட்ட வில்லை. அதனால் தான் என் மனது மாறி நான் இப்படி ஒரு மனசு மாறி வெனசாவை காப்பாற்றினேன் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் உமாபதியை நான் காப்பாற்றி இருந்தால் வெளியிலிருந்து ஓட்டுப்போடும் போட்டியாளர்கள் பலர் உமாபதி தான் ஓட்டு போடுவார்கள் என்று எனக்கு அறிவுறுத்தி இருந்தனர். அதனால் தான் நான் இப்படி முடிவை மாற்றினேன் என்று தன் பக்கத்து நியாயத்தை கூறியிருக்கிறார் .
Recommended Video

ரசிகர்கள் புரிந்து கொள்வார்களா??
அதுமட்டுமல்லாமல் உமாபதி மீது எனக்கு எப்போதுமே பாசம் அதிகம் தான் அவரை ஏமாற்றி நான் வெற்றி பெறவில்லை. அவரை காப்பாற்றாமல் இன்னொருவரை காப்பாற்றினேன். ஆனால் அவருடைய முயற்சியால் மீண்டும் வந்து விடுவார் என்றுதான் நான் நம்பி இருந்தேன். ஆனால் உமாபதியின் முதுகில் நான் குற்றி விட்டேன் என்று பலர் கூறிவருகிறார்கள். கடைசி இரண்டு நாட்கள் நடந்தது வெளியில் அதிகமாக காட்டப்படவில்லை. என் மனதளவில் நான் இதுவரைக்கும் படாத கஷ்டங்களையும், அனுபவங்களையும் அந்த இரண்டு நாட்களில் அனுபவித்து விட்டேன். அதனால் தான் நான் அப்படி ஒரு முடிவை எடுத்தேன். என் பக்கத்து நியாயத்தை என்னுடைய ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று ரசிகர்களுக்காக பெரிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications