கடந்து வந்தது எளிமையானது அல்ல...கால் பாதத்தை காட்டி தத்துவம் சொன்ன விஜி
சென்னை: சர்வைவர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு விஜயலட்சுமி வெளியிட்ட போட்டோஸ் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
Recommended Video
தன்னை பற்றி தவறாக பேசும் நெகட்டிவர்ஸ்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக விஜயலட்சுமி போஸ்ட் வெளியிட்டுள்ளார்.
கடந்து வந்த பாதை எளிமையானது அல்ல என்று தன் பாதத்தை காட்டி விஜி பலரையும் ஃபீல் பண்ண வைத்துள்ளார்.

பதிலடி இதுதானா? ?
சர்வைவர் ஷோ தற்போது முடிவடைந்து அதில் வெற்றியாளர் யார் என்ற செய்தி அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், ரசிகர்கள் பலர் வெற்றியாளரான விஜயலட்சுமிக்கு வாழ்த்துக்களை கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு சில நெகட்டிவர்ஸ் இவருடைய வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சமூக வலைத்தளத்திலும் இவருக்கு எதிராக நெகட்டிவ் கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர். தனக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட் பற்றி கண்டுகொள்ளாமல் இவர் விட்டுவிட்டாலும், தற்போது பதிலுக்கு விஜயலட்சுமி வெளியிட்ட போஸ்ட் தான் வைரலாக பரவி வருகிறது.

குறையாத வேகம்
திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருக்கும் இவர் இளைஞர்களையும் தன்னோடு வயதில் குறைந்தவர்களையும் பின்னுக்குத்தள்ளி தன்னுடைய திறமையால் இன்று வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். உடல் வலுவான போட்டியாளர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் இருந்திருந்தாலும் அவர்களுக்கு டப் கொடுக்கும் விதமாக இவர் ஒவ்வொரு போட்டியிலும் தன்னுடைய திறமையை காட்டிக் கொண்டு தான் இருந்துள்ளார். இந்த நிகழ்ச்சியை விட்டு இவர் வெளியேறி மூன்றாம் உலகத்தில் காத்திருந்தாலும் தனது திறமையை மீண்டும் சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார்.

மன தைரியம்தான் பெருசு
உடல் ஆரோக்கியமாகவும், ஆஜானுபாகுவாக இருந்த போட்டியாளர்கள் பலரை விடவும் விஜி மன தைரியத்தால் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் சிலர் அசால்டாக அவருடைய வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் கண்டமேனிக்கு பேசி வருகின்றனர். ஆனால் பல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி இவருடைய தன்னம்பிக்கையையும் போற்றும் விதமாக இவருக்கு பாசிட்டிவ் கமெண்டுகள் பலவற்றையும் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக விஜி ரசிகர்களின் கமெண்டுகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாவில் தத்துவம்
விஜயலட்சுமி தான் இந்த இடத்திற்கு எளிமையாக வந்துவிடவில்லை. காட்டுக்குள் பல சவாலான தருணங்களையும், பல அடிப்படை தேவைகளையும் கூட இழந்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளோம். அதுமட்டுமல்லாமல் தனக்காக தன் கால் தேய்ந்து தோல் நிறம் மாறியுள்ளது என்று காட்டி உள்ளார். அதுமட்டுமில்லாமல் வெற்றி என்பது எளிதானது என்று எதுவுமில்லை. கடைசியில் மீண்டும் என் இன்ஸ்டா இருப்பது நல்லது என்று இன்ஸ்டாக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த அவருடைய இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் அவரை வரவேற்று அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications