For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீரியல்கள் இல்லை.. பொழுதே போக மாட்டேங்குது.. கிராமத்துப் பெண்களின் கவலை!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவால் உலகமே முடங்கிப் போயுள்ளது. ஆனாலும் சுறுசுறுப்பாக இருப்பது டிவி மட்டும்தான். 24 மணி நேரமும் டிவியில் கொரோனா குறித்த செய்திகளை அறிய மக்களிடையே ஆர்வம் அதிகமாக இருப்பதை மறுக்க முடியாது.

அதேசமயம், டிவியில் மக்கள் முக்கியமாக பார்க்கும் சீரியல்கள் அடி வாங்கியிருப்பது மக்களுக்கு சோர்வைக் கொடுத்திருப்பது என்னவோ உண்மைதான். குறிப்பாக பெண்கள்தான் இதில் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினசரி வீட்டு வேலையைப் பார்த்துக் கொண்டே சீரியலை ரசிக்கும் பெண்கள் அதிகம். அவர்களுக்கு இருக்கும் தரமான பொழுது போக்காக சீரியல்கள் இருந்து வந்தது. காலை 11 மணி முதல் இரவு வரை சீரியல்கள் பார்க்காத வீடுகளே இல்லை என்று சொல்லலாம்.

கோட்டு போட்ட நாட்டாமைக்கு பிறந்தநாள் ... ரசிகர்கள் ,பிரபலங்கள் வாழ்த்து!கோட்டு போட்ட நாட்டாமைக்கு பிறந்தநாள் ... ரசிகர்கள் ,பிரபலங்கள் வாழ்த்து!

 கிராமத்துப் பெண்கள்

கிராமத்துப் பெண்கள்

இந்த லாக் டவுன் டைம்ல சீரியல்கள், திரைப்படங்கள் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் திரைப்படத்துறையினர், டிவி கலைஞர்கள் அனைவரும் வீட்டில் முடங்கியிருக்கின்றனர். இது அனைவருக்கும் கஷ்டமாக தான் இருக்கிறது. அவர்களுக்கு மட்டுமல்ல அவர்கள் நடித்துக்கொண்டிருக்கும் சீரியல்களை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கும் கஷ்டமாக தான் இருக்கிறதாம்.

டயர்டாகிட்டோம்

டயர்டாகிட்டோம்

வீட்டில் எல்லாரும் முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்துல பெண்கள் வேலைகளை செஞ்சு செஞ்சே அலுத்து போயிருக்காங்க. முன்னாடிலாம் காலையிலேயே கணவன்மார்கள் வேலைக்கு சென்று விடுவார்கள். குழந்தைகளும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று விடும். வீட்டில் இருக்கும் பெண்கள் வேலைகளை முடித்து சீரியல்களைப் பார்த்து கொண்டு நேரத்தை பொழுதுபோக்கி வருவது இயல்பு.

 டிவி கிடைக்கலை

டிவி கிடைக்கலை

ஆனால் இப்போது எல்லா ஜனமும் வீட்டிலேயே இருப்பதால் முழுக்க முழுக்க அவங்களுக்கு சமையல்கட்டில் ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்கிறது. வேலையெல்லாம் முடிச்சுட்டு கொஞ்சம் டிவி பாக்கலாம்னு போனா அங்க சுட்டி டிவியும், நியூஸும் தான் ஒடி கிட்டு இருக்கு. சீரியலும் புதுசா இல்லை.பழசையே போட்டுட்டுருக்காறங்க.

 கிராமத்துப் பெண்களின் கஷ்டம்

கிராமத்துப் பெண்களின் கஷ்டம்

பெண்களின் மனசுக்கு புடிச்ச, அவங்க எப்பவும் பாத்துக்கிட்டு இருக்குற சீரியல்கள் இப்ப ஒளிபரப்பாகாததால், டிவியில் எதைப் பார்ப்பது என்பதில் ஆர்வம் குறைந்து போய் விட்டதாம். சிட்டியில் இருக்கும் பெண்களாவது இணையதளத்திலும் ஓடிடி தளத்திலும் திரைப்படங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் .ஆனால் கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு அந்த வசதிகள் எல்லாம் இல்லை.

 அலுப்பு தெரியாமல் வேலை

அலுப்பு தெரியாமல் வேலை

மேலும் கிராமங்களில் பெண்களில் பலர் வீட்டிலிருந்தே குடிசைத் தொழில்களை செய்து வருகின்றனர். வீட்டிலேயே வேலை செய்து கொண்டே டிவி பார்ப்பதுதான் அவர்களது வழக்கம். அதாவது வேலையும் நடக்கும், பொழுதும் போகும். இப்படி நேரம் போவதற்கு பார்த்து பழகி வந்த இவர்கள் இந்த சீரியல்கள் இல்லாததால் மிகவும் வருத்தப் படுகிறார்கள்.

 கைத்தொழிலும் சீரியலும்

கைத்தொழிலும் சீரியலும்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டில் இருக்கும் பெண்கள் பீடி சுற்றுவதை தொழிலாக கொண்டிருக்கின்றனர். இங்கு பீடி சுற்றுவது பெண்களுக்கு மிகச் சிறந்த கைத் தொழிலாக இருக்கிறது. பீடி சுற்றும் போது பொழுது போவதற்காக சீரியல்களை பார்த்துக்கொண்டுதான் சுற்றுவார்கள். பெரும்பாலும் சீரியல்கள்தான் ஓடிக் கொண்டிருக்கும். சீரியல்களை பார்த்துக்கொண்டே வேலை செய்வதால் இவர்களுக்கு வேலையின் அலுப்பும் தெரியாமல் இருந்தது.

 அம்பிகாவின் கவலை

அம்பிகாவின் கவலை

ஆனால் இப்போது ரொம்ப போரடிக்கிறதாம். இதைப்பற்றி திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகில் உள்ள தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த அம்பிகா என்ற இல்லத்தரசியிடம் கேட்டோம். உங்களுக்கு எப்படி இப்ப பொழுது போகுது என்று கேட்டதற்கு, "நாங்க டெய்லி சீரியல் பார்த்துட்டு தான் பீடி சுத்திக்கிட்டு இருப்போம். ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி ,யாரடி நீ மோகினி எல்லாம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சது. அந்த சீரியல்களை பார்ப்பதற்காக நாங்க ரொம்ப நேரம் முழிச்சி இருப்போம். எங்களுக்கு வேலையும் நடந்த மாதிரி இருக்கும். ஆனால் இப்போது அந்த சீரியல் போடாததனால் எங்களால் எங்க வேலையை செய்ய முடியல" என்று கவலையுடன் சொல்கிறார்.

 ரொம்ப கஷ்டம்தான்

ரொம்ப கஷ்டம்தான்

பீடி சுற்றுவது மட்டுமல்லாமல் வீட்டிலிருந்து குடிசைத் தொழில் செய்யும் எல்லா பெண்களுமே சீரியல் பார்த்துகிட்டு வேலை செஞ்சுட்டு இருக்காங்க. இது அவங்களுக்கு வேலையின் களைப்பை குறைப்பதோடு மனசையும் உற்சாகமாக வைத்திருக்க உதவியது. அதை விட முக்கியமாக பக்கத்து வீட்டுக்கு சென்று புரணி பேசுவதையும் குறைக்க உதவியது.. அதான் டிவியிலேயே கலர் கலராக புறணி பேசுகிறார்களே..அதைக் கேட்டாலே போதுமே.. .ஆனால் இப்போது சீரியல்கள் இல்லாததனால் கிராம பெண்கள் ரொம்பதான் கஷ்டப்படுறாங்க.

எப்படியெல்லாம் கஷ்டப்படுத்துது இந்த கொரோனா பாருங்க!

English summary
Village women are the worst hit after the TV serials are stopped. Here is a special story.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X