அர்ணவுக்கு ஜாமீன் கிடைக்காதது குறித்து திவ்யா வெளியிட்ட பதிவு.. கடைசியில் உருக்கமான தகவல்கள்
சென்னை: கர்ப்பமாக இருக்கும் சின்னத்திரை நடிகை திவ்யாவை அடித்து துன்புறுத்துவதற்காக அவருடைய கணவர் அர்ணவ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் திவ்யா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உண்மை எப்போதும் வெல்லும் என்று திவ்யா வெளியிட்ட பதிவிற்கு ரசிகர்கள் பலர் ஆதரவு குறித்து வருகிறார்கள்.

காதல் முதல் மோதல் வரை
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கேளடி கண்மணி சீரியலில் கதாநாயகியாக நடித்த திவ்யா ஸ்ரீதர் அந்த சீரியலில் அவருடன் நடித்த அர்ணவ்வை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் ஐந்து வருடம் ஒன்றாக லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் இவர்கள் திருமணத்தை முடித்து இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு அர்ணவ் செல்லம்மா சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சீரியலில் நடிக்கும் நடிகைக்கும் அர்ணவுக்கும் தவறான தொடர்பு இருப்பதாகவும் அதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.

ஜாமீன் மனு தள்ளுபடி
திவ்யா கர்ப்பமாக இருக்கும் நிலையில் அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக அதனால் தனக்கு ப்ளீடிங் ஆகி வயிறு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்ந்து இருந்தார். இந்த நிலையில் அவர் அர்ணவ் மீது காவல் துறையில் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தார். அதனால் செல்லம்மா சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அர்ணவ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அர்ணவ் ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார். தற்போது அது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதைக் குறித்து திவ்யா தன்னுடைய இன்ஸ்டாகராம் பக்கத்தில் பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார்.

திவ்யாவின் பதிவு
வணக்கம் என் இன்ஸ்டா ஃபேமிலி, என் வாழ்க்கையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் .இந்த கடினமான நேரங்கள் அன்பும் மற்றும் ஆதரவின் சக்தியை புரிந்து கொள்ள எனக்கு உதவியது .ஆம்! அவருடைய ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. அனைவரும் அறிந்ததே .உண்மை எப்போதும் வெல்லும் என்பது நிரூபணம் ஆனது .இதுவரை நான் பெற்று வரும் அன்பினால் நான் நிரம்பி வழிகிறேன். இந்த இக்கட்டான காலத்திலும் உங்கள் அனைவரின் ஆதரவும், அன்பும் என் தொழில் மற்றும் எனது வாழ்க்கை பிரச்சனைகளை கவனித்து வருகிறேன். நீங்கள் அனைவரும் இல்லாமல் இது சாத்தியம் இல்லை.

சகோதரியைப் போன்றவர்
பிரியா என்னுடைய வக்கீலாக இருப்பவர். எனக்கு சகோதரியை விட மேலானவர் என் இருண்ட நாட்களிலும் நீங்கள் எனக்கு முதுகெலும்பாக நிற்கிறீர்கள். உங்கள் வழிகாட்டுதலும் அன்பும் இல்லாமல் இங்கே ஒன்றுமில்லை. பிரியா அம்மா இன்னும் நீங்கள் உங்கள் வேலைக்காக என்னிடம் எந்த கட்டணமும் கேட்கவில்லை .உங்கள் சொந்த சகோதரியை போல நீங்கள் என்னை கவனித்துக் கொள்கிறீர்கள் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நபராக இருப்பதற்கு நன்றி என்று அவருடைய வக்கீலுக்கு நன்றி கூறியிருக்கிறார்

இதுதான் நட்பு
நட்பு என்பது நீங்கள் யாரை நீண்ட காலமாக அறிந்திருக்கிறீர்கள் என்பது பற்றியது அல்ல. உங்கள் வாழ்க்கையில் யார் நுழைந்து உனக்காக எங்கே இருக்கிறேன் என்று கூறி அதை நீங்கள் நிரூபித்தீர்கள். கருணா உங்களைப் போன்ற ஒரு நண்பரை பெற்றதில் பெருமிதம் கொள்கிறேன் . ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இந்த பிரச்சினையை முன்னிலைப்படுத்திய சேனல்கள், நீதி கிடைக்க கண் திறப்பதற்கு நன்றி, சரியான நேரத்தில் உங்களின் அனைத்து ஆதரவும் எனக்கு அதிகம். எனது செவ்வந்தி தயாரிப்பு நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மற்றும் சன் டிவி எனது கடினமான நேரத்திலும் எனக்கு ஆதரவாக இருந்ததற்காக உங்கள் அனைவருக்கும் என்றும் நன்றி உள்ளவராகவும், ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் உணர்கிறேன் என்று நீண்ட பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications