Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமண நாளில் கிடைத்த மகிழ்ச்சி..நெகிழ்ச்சியாய் பதிவு வெளியிட்ட விஜேமணிமேகலை..குவியும் வாழ்த்துக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி தொகுப்பாளராக இருக்கும் மணிமேகலை தன்னுடைய திருமண நாளில் எதிர்பார்க்காத மகிழ்ச்சி கிடைத்து இருக்கிறது என்று ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.

திருமண நாளில் எதிர்பார்க்காத பரிசு கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் விஜே மணிமேகலை வெளியிட்ட பதிவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நான்- ஸ்டாப் பேச்சு

நான்- ஸ்டாப் பேச்சு

கதாநாயகிகளுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டம்..! இருக்கும் அளவிற்கு மியூசிக் சேனல்கள்.. மூலம் விஜே கள்... புகழ் பெற்றிருந்த காலகட்டத்தில்.., தன் நான்-ஸ்டாப் பேச்சால், க்யூட்டான ஆட்டிட்யூட்டாலும்... குறிப்பிடத்தக்க ரசிகர்கள் வட்டத்தை கவர்ந்து வைத்திருந்தவர்..! தான் சன் நெட்வொர்க்கின் விஜே மணிமேகலை..' தான் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது அடிக்கடி அந்த நேரத்தில் ஒளிபரப்பப்பட்ட 'மொட்ட சிவா கெட்ட சிவாடா' என்ற படத்தில் வந்த பாடலுக்கு ராகவா லாரன்ஸ் உடன் ஆடிய ஒருவரின் ஆட்டம் மிகவும் பிடித்துவிட்டது. பேஸிகாகவே டான்ஸ் விரும்பியான மணிமேகலை...தானும் மீடியா ஃபீல்டில் இருந்ததால் அந்த நபரை எப்படியாவது பாராட்ட வேண்டு, என்று மிகவும் கஷ்டப்பட்டு மொபைல் நம்பரை தேடிப்பிடித்து.., கால் செய்து பாராட்டியிருக்கிறார். எதிர்முனையில் பேசிய அந்த டான்ஸர் மணிமேகலை சன் மியூசிக்கில் பெரிய செலிபிரிட்டி ஆக இருந்தாலும்.., அந்த நேரத்தில் பிஸியாக சூட்டில் இருந்ததால்.. பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் செய்யவில்லையாம்...!

காதலுக்கு வீட்டில் சம்மதிக்கவில்லை

காதலுக்கு வீட்டில் சம்மதிக்கவில்லை

கொஞ்சமும் மனம் தளராத மணிமேகலை விடாமல் முயற்சி செய்து... போன் பேசியே.. நேரில் மீட் பண்ணுமளவிற்கு...! காதலை டெவலப் செய்து இருக்கிறார். அந்த டான்ஸர் வேறுயாருமில்லை.. அவர்தான் மணிமேகலை காதல் கணவர் ..ஹுசேன்' வேற்று மதத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக.. மணிமேகலையின் காதலை அவரது வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை.. இதனால் வீட்டைவிட்டு வெளியேறி தன் காதலன் ஹுசேன் குடும்பத்தினருடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். மணிமேகலை. தற்பொழுது வரை தனது பெற்றோர்களுடன் எவ்வித தொடர்பும் இன்றி..தன் காதல் கணவருடன் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வருகிறார் மணிமேகலை.

திருமண நாளுக்கு கிடைத்த பரிசு

திருமண நாளுக்கு கிடைத்த பரிசு

திருமணத்திற்கு பிறகு சொந்தமாக ஒரு சில கார் மற்றும் பைக் என வாங்கி குவித்துக் கொண்டிருக்கும் மணிமேகலை அதை தன்னுடைய youtube சேனல் மூலமாக ரசிகர்களோடு பகிர்ந்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் சமூக வலைத்தளத்தில் இவர் ஆக்டிவ்வாக இருப்பதாலே இவர் என்ன செய்தாலும் அதை அப்படியே ஒரு போஸ்டாக தட்டி விட்டு விடுகிறார். இந்த நிலையில் இன்று இவருடைய திருமண நாள் அதை எல்லா வருடம் அவருடைய கணவரோடு சிறப்பாக கொண்டாடி போட்டோக்களும் வீடியோக்களும் பஞ்சமில்லாமல் வெளியிட்டு வருவார். இந்த வகையில் இன்று இவருடைய திருமண நாளுக்கு பரிசாக ரசிகர் ஒருவர் புடவையில் இவரும் இவருடைய கணவரும் இருக்கும் புகைப்படத்தை பிரிண்ட் போட்டு அனுப்பி இருக்கிறார்.

எதிர்பார்க்காத கிப்ட்

எதிர்பார்க்காத கிப்ட்

பட்டுப் புடவையில் அவருடைய கணவரின் புகைப்படம் மற்றும் இவர்களுடைய திருமண நாள் என அனைத்தும் இடம் பிடித்திருக்கிறது. இந்த எதிர்பாராத கிப்டை இவர் ரொம்பவே அனுபவித்திருக்கிறார். அதுவும் இந்த புடவை இவருடைய ஃபேவரிட் கலரில் வந்திருக்கிறதாம். இது எனக்கு கூடுதல் ஒரு சந்தோஷம் என்று மகிழ்ச்சியோடு ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார் .அது மட்டுமல்லாமல் இன்று இவருடைய ஐந்தாவது திருமண நாளாம். அந்த தேதியை புடவையில் பார்த்ததும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+