மஞ்சள் தாலி, கண்ணில் ஏக்கம் திருமணம் முடிந்த சில நாளில்.. ரித்திகா வெளியிட்ட திடீர் வீடியோ!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் அமிர்தாவாக நடிக்கும் ரித்திகா சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில் திடீரென வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
திருமணத்திற்கு பிறகும் எப்போதும் போல எளிமையாக கேரளாவில் இவர் கலக்கலாக பல வீடியோக்களை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார் .கண்களின் ஏக்கத்தோடு கேரளாவின் அழகை காட்டிய இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

உண்மையான பெயர் தமிழ்ச்செல்வி
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் ரித்திகா. இவர் முதல் சீரியலிலே பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் யார் இவர் என்று இவரைப் பற்றி தேட தொடங்கி விட்டனர். அந்த சீரியலில் இவருடைய எதார்த்தமான நடிப்பை ரசிகர்கள் பலருக்கும் பிடித்து விட்டது. அந்த சீரியலில் கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்திருப்பார். இவருடைய உண்மையான பெயர் தமிழ் செல்வி அதனாலே தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் தமிழ் ரித்திகா என இவர் பெயரை வைத்திருக்கிறார்.

ராஜா ராணியில் அறிமுகம்
ராஜா ராணி சீரியல் அதிக அளவில் வரவேற்பை பெற்றிருந்தாலும் ரித்திகாவுக்கு இவர் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை .அதற்கு பிறகு இவர் அதிகமாக சீரியல்களில் இல்லாமல் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்தார். அதே நேரத்தில் சீரியல் ஆகவும் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்தார். ராஜா ராணி சீரியலுக்கு பிறகு ஒரு சில வருடங்கள் சீரியலில் இவர் நடிக்காமல் இருந்தார். அந்த நேரத்தில் இவருக்கு மீண்டும் விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தது. பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து வருகிறார் .இந்த சீரியலில் எழிலின் ஜோடியாக இவர் நடித்து வருகிறார். ஏற்கனவே திருமணம் முடிந்து கணவரை இழந்த பெண்ணாக அமிர்தா இந்த சீரியலின் நடித்து ரசிகர்களின் மனதில் அனுதாப ஆதரவை பெற்று விட்டார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அறிமுகம்
தனக்கு நடிப்பு மட்டும் இல்லை, பல திறமை உடையது என்று இவர் அடிக்கடி நிரூபித்து வருகிறார். அந்த வகையில் தான் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டார் .அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது நிகழ்ச்சியின் கண்டெண்டுக்காக இவரை அதிகமாக பாலா கலாய்த்து கொண்டிருப்பார். அதனால் இவர்கள் இருவருக்கும் காதல் என்ற செய்திகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. அதை குறித்து விளக்கம் கொடுக்கும் வகையில் எங்களுக்குள் அப்படி ஒரு நிலை எங்களுக்கள் இல்லை. நாங்கள் ஒன்றாக நடிப்பதால் அந்த இடத்தில் நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக என்ன தேவையோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதனால் இப்படி பேசாதீர்கள் என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தார்.

எளிமையான அழகு
இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்புதான் ரித்திகாவுக்கு திருமணம் முடிந்து இருக்கிறது. விஜய் டிவியில் வினோத் என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுடைய திருமணம் கேரளாவில் எளிமையாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கேரளாவில் இருக்கும் ரித்திகா கேரளாவின் அழகேடு பல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் .அந்த வகையில் தற்போது நெற்றியில் குங்குமம் வைத்தபடி எளிமையின் உருவமாக சுடிதாரில் இவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்களின் மத்தியில் அதிகமாக வரவேற்பை பெற்று வருகிறது .பலர் இவரிடம் அழகு குறிப்புகளை கேட்டு வருகின்றனர். எப்போது மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு இவர் வருவார் என்று பலர் கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள். சீரியலில் இவர் அவருடைய சொந்த ஊருக்கு சென்று விட்டார் என்று எழில் இடம் அமிர்தாவின் அம்மா அப்பா சொல்லி இருப்பார்கள். இனி பாக்கியலட்சுமி சீரியலிலும் எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் பிரச்சனைகள் தான் வரப்போகிறது. அதனால் சீக்கிரம் சீரியலுக்கு வந்து விடுங்கள் என்று சிலர் கூறுகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
சிறகடிக்க ஆசை: எலக்ஷனில் ஜெயித்த மீனா.. பிறகு நடந்த எதிர்பாராத சம்பவம்! மனம் மாறும் விஜயா.. சிந்தாமணியின் பிளான் -
ராத்திரி நேரத்து பூஜையில்.. விஜய் டிவி நிகழ்ச்சியில் டிஸ்கோ சாந்தி போட்ட டான்ஸ்! அசந்து போன ரம்பா! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்: முத்துவேல் பற்றி தெரிய வந்த பெரிய உண்மை.. அதிர்ச்சியில் கதிர்! உடையும் குடும்பம் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா!












Click it and Unblock the Notifications