பிக் பாஸ் 6 போட்டியாளரை குறித்து பாலாஜி முருகதாஸ் மறைமுகமாக வெளியிட்ட ட்வீட்.. ஓ... இது..அது இல்ல?
சென்னை: பிக் பாஸ் ஆறாவது சீசனில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர் ஒருவரை பற்றி பாலாஜி முருகதாஸ் மறைமுகமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் .
நேற்றைய எபிசோட்டில் போட்டியாளர்களுக்குள் ஏற்பட்ட கலந்துரையாடலை மனதில் வைத்து தான் பாலாஜி முருகதாஸ் இப்படி ஒரு ட்வீட் போட்டுள்ளார் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

பிரபலங்களின் ஆதரவு
தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு சில போட்டியாளர்களுக்கு பிரபலங்களும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜி.பி. முத்துவுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்கள் வரைக்கும் அவருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. அதுபோல ரட்சிதா மகாலட்சுமிக்கும் சின்னத்திரை ரசிகர்கள் வட்டாரத்தில் அதிக அளவில் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

பாலா பெயர் குழப்பம்
நேற்றைய எபிசோட்டில், இதற்கு முன்பு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பாலா தான் தனக்கு ஃபேவரைட் ஆன போட்டியாளர் என்று சீரியல் நடிகையும் டான்ஸ் மாஸ்டர் ஆன சாந்தி கூறியதற்கு,தனக்கும் பாலாவை பிடிக்கும் என்றும் ஆனால் அந்த பாலாவிற்கு வாழ்க்கையை உருவாக்கி கொடுத்ததே அமுதவாணன் தான் என்று அமுதவாணனை பாராட்டி பேச அதை கேட்டுக் கொண்ட அமுதவாணன் சிரித்துக் கொண்டே எல்லாம் சரிதான் ஆனால் அந்த பாலா இந்த பாலா இல்லை என்று கூற ஜி.பி முத்து குழம்பிப் போனார்.

தலைவரே அவர் இவரு இல்லை
சாந்தி கூறியது இதற்கு முந்தைய சீசனில் போட்டியாளராக களம் இறங்கிய பாலாஜி முருகதாஸ் எனவும், தனது நண்பர் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு புகழ் பாலா என்று தெளிவுபடுத்த தனக்கு மற்ற போட்டியாளர்களை பற்றி தெரியாது என்றும் தனக்குத் தெரிந்தது கே பி ஒய் பாலா மட்டுமே என்று ஜிபி முத்து சொன்னதை கேட்டு சக ஹவுஸ்மேட்டுகள் குலுங்கி குலுங்கி சிரித்ததோடு மட்டுமன்றி, ஜி.பி முத்துவை கலாய்த்தும் வந்தனர்.

உப்புமா ஸ்பெஷல்
இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தனக்கு வர வர "உப்புமா தான் அதிகமாக பிடிக்கிறது" என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் உப்புமா கிண்டி பேமஸ் ஆனவர் சாந்தி மாஸ்டர் தான். அதைத்தான் இன்றைய ப்ரோமோவில் கூட கமல் கிண்டல் செய்திருந்தார். இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் தனக்கு பிக் பாஸ் ஆறாவது சீசனில் பிடித்திருப்பது சாந்தி மாஸ்டர் தான் என்பது மறைமுகமாக கூறியிருக்கிறார். தன்னுடைய ஆதரவு சாந்தி மாஸ்டருக்கு இருக்கிறது என்பதை இவர் தெரிவித்ததும், பாலாஜி முருகதாஸின் ரசிகர்கள் சாந்தி மாஸ்டருக்கு தான் எங்களுடைய ஆதரவு என்று கூறி வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications