சிறந்த சின்னத்திரை நடிகை பட்டியலில் இடம் பிடித்த நடிகைகள்... போட்டிகள் பயங்கரமாக தான் இருக்கிறது!!
சென்னை: கடந்த மாதம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த சின்னத்திரை நடிகைகள் விவரங்களை தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த மாதம் சன் டிவி விஜய் டிவி சீரியல் நடிகைகள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்ததாக அதில் கூறியுள்ளனர்.
முதல் இடத்தில் சன் டிவி கயல் சீரியல் சைத்ரா ரெட்டி இருந்து வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

வளர்ந்து வரும் சின்னத்திரை
சின்னத்திரை ரசிகர்கள் அதிகமானோர் பார்க்கும் சீரியலாக இருந்தாலும் சரி அதில் நடிக்கும் நடிகைகளாக இருந்தாலும் சரி அவர்களுக்கு கவர்ந்து விட்டால் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு அதிகமாக தான் இருந்து வருகிறது. ரசிகர்கள் இடம் கிடைக்கும் பெரிய ஆதரவு காரணமாகத்தான் பல சீரியல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் சீரியல் நடிகைகளும் அதிகரித்து வருகிறார்கள் .ஒரு சில நடிகைகள் ஆரம்பத்தில் சீரியலில் நடித்து பின்பு திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு பிரபலமாகி விடுகின்றனர்.

நம்புற மாதிரி இல்லையாமே
இந்த நிலையில் சின்னத்திரை ரசிகர்கள் அதிகமாக ரசிக்கும் நடிகைகளின் விவரங்களை ஆர் மேக்ஸ் மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டில் சன் டிவி, விஜய் டிவி சீரியல் நடிகைகள் இடம் பிடித்திருக்கின்றனர் .இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு சிலர் இந்த இரண்டு சேனலை தவிரவும் அதிகமான நடிகைகள் தங்களுக்கு மனதிற்கு கவர்ந்தவர் ஆக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆர் மேக்ஸ் மீடியா நிறுவனம் வெளியிட்ட லிஸ்டில் கோலிவுட் பாலிவுட் என அனைத்து துறைகளிலும் ஒவ்வொரு மாதமும் சிறந்த நடிகர் நடிகைகள் யார் என்று குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது.

முதல் இடத்தில் கயல்
அந்த வகையில் மக்கள் மத்தியில் சின்னத்திரையில் சிறந்த நடிகைகளாக ரசிகர்களின் மனதை அதிகமாக செப்டம்பர் மாதத்தில் கவர்ந்த நடிகைகள் குறித்த விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. அதில் முதல் இடத்தை கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி பிடித்திருக்கிறார். கயல் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் அனைத்து தரப்பட்ட மக்களையும் கவர்ந்திருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக எவ்வளவு கஷ்டங்களை சுமக்கிறார் என்பதில் சைத்ரா ரெட்டி தத்துரூபமாக நடித்து வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கருத்துக்கணிப்பு
இரண்டாவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கேபிரில்லா இருந்து வருகிறார். அவரைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் அதே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்கரி இருந்து வருகிறார். அவரை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவாக நடிக்கும் நடிகை சுசித்ரா இருக்கிறார். அவரைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியல் வினுஷா தேவி இருக்கிறார். இந்த விவரங்களை ஆர் மேக்ஸ் மீடியா நிறுவனம் ரசிகர்களிடம் கேட்ட கருத்துக்கணிப்பின்படி வெளியிட்டதாக கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications