பிக் பாஸ் இந்த சீசனின் காதல் புறா இவர்கள் தானாம்.. அதனால் தான் இப்படியா? கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் காதல் ஜோடிகள் உருவாகி விடுவது வழக்கமான ஒன்றுதான். அது போல தான் தற்போதைய சீசனிலும் இருக்கிறது என்று போட்டியாளர்களே கலாய்த்து இருக்கிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியே பார்ப்பது கொஞ்சம் தான் ஆனால் உள்ளே நடப்பது ஏராளம் அதை வைத்து சக போட்டியாளர்கள் கலாய்த்ததை தற்போது ரசிகர்கள் நினைவுப்படுத்தி இருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த முறை காதல் ஜோடியாக வலம் வருவது அசல் கோளாறு மற்றும் நிவாதினி என்று சக போட்டியாளர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

பஞ்சமில்லாத சண்டைகள்
பிக் பாஸ் ஆறாவது சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்கு பஞ்சம் இல்லாமல் இந்த சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 40 நாட்களில் நடக்கும் கலவரங்களும், பிரச்சனைகளும் முதல் வாரமே நடக்க தொடங்கி இருக்கின்றது. இதில் பல்வேறு தரப்பட்ட போட்டியாளர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதனால் இவர்களுக்குள் பிரச்சனைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு ராப் பாடகராக அறிமுகம் ஆகி இருக்கும் அசல் கோளாறு செய்யும் செயல்கள் சில்மிஷம் தனமாக இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

சக போட்டியாளர்களின் கருத்து
அடிக்கடி பெண் போட்டியாளர்களுடன் உரசிக்கொண்டு உட்கார்ந்து இருப்பது, அவர்களின் கை, கால், முட்டி, முதுகு என தொட்டு தடவி கொண்டிருப்பது என அசல் கோளாறு செய்யும் சில்மிஷதனத்தை பார்த்து நெட்டிசன்கள் இவரை எப்போது வெளியேற்றுவார்கள் என்று கருத்து தெரிவித்து வரும் நிலையில், அடிக்கடி நிவாவுடன் ஜோடியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். அதனால் ரசிகர்கள் தான் இவர்களுக்கு காதல் தொடங்கிடுச்சா என்று இதுவரைக்கும் சொல்லிக் கொண்டிருந்த நிலையில், இன்றைய எபிசோட்டில் சக போட்டியாளர்களும் இவர்கள் இருவரும் காதல் ஜோடியாக இந்த சீசனில் பறப்பது பற்றி கூறியிருக்கின்றனர்.

என்ன சத்தம் அங்கே
ஏற்கவே டான்ஸ் மராத்தான் நிகழ்ச்சி டாஸ்க்கில் நிவாவின் டான்ஸ்க்கு அசல் அசல் கோளாறு எஸ் பதிலை காட்டவில்லை என்று நிவாவிடம் வந்து நீண்ட விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தார் .நான் அப்படி செய்யவில்லையே என்று நீ கஷ்டப்படுவாய் அல்லவா? அதனால் தான் உன்கிட்ட வந்து விளக்கம் கொடுக்கிறேன். அமுதவாணன் அழகாக ஆடினார். அதற்காக நீ நன்றாக ஆடவில்லை என்று இல்லை நீயும் நன்றாகத் தான் ஆடினாள் என்றெல்லாம் சமாளித்தபடி ,அதனால் அவருக்கு நான் எஸ் சிம்பிள் கொடுத்து வாக்களித்து விட்டேன் என்று கொஞ்சியபடி பேசிக் கொண்டிருந்ததை நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். இந்த நிலையில் இன்றைய எபிசொட்டில் புடவையில் வந்த நிவாவின் பின்னாடியே அசல் செல்வதை பார்த்து அவருடைய நண்பரான ஏடிகே கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார்.

அது இவங்க தானா
அசல், கதிரவன் மற்றும் ஏடிகே மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அங்கே நிவா புடவை கட்டிக்கொண்டு வந்து நிற்கிறார். நிவாவை பார்த்ததும் இவர்களுடன் இருந்த அசல் எழுந்து நிவா பின்னாடியே சென்று விடுகிறார். அதனால் அவர் போன பிறகு ஏடிகே, பாரு இந்த சீசனில் காதல் புறா இவங்க தான். மச்சான் நல்லா....வாழ்கிறான். விட்டு பிரிய மாட்டேங்கிறான் என்று பெருமூச்சு விட்டபடியே அசல் கோளாறு பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். நேற்றைய எபிசோடில் அசல் கோளாறு தனலட்சுமி இடம் பிரச்சனை ஏற்பட்டுக் கொண்டிருக்கும்போது கூட ஏடிகே அசல் கோளாறுக்கு தான் சப்போர்ட் செய்தார்.ஆனால் இன்று அசல் கோளாறுவை இவர் பங்கமாக கலாய்ப்பதை வைத்து அப்போ இந்த சீசனில் காதல் புறா இவர்கள்தானா? என்று நெட்டிசன்களும் கலாய்த்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications