கடைசி நேரத்தில் அசீம் குழந்தை பிக் பாஸ் வீட்டிற்குள் வராத காரணம்.. உண்மையை கூறிய அசீமின் தம்பி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அதிகமான ரசிகர்களின் ஆதரவை பெற்று இருக்கும் போட்டியாளர்களில் ஒருவராக அசீம் இருக்கிறார்.
அசீம் கமல்ஹாசன் இடமும் பிக் பாஸ் இடமும் தன்னுடைய மகன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்து தன்னுடைய ஆசையை கூறி வந்தார்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத மாதிரி கடைசி நேரத்தில் அசீமுடைய மகன் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவில்லை.
முதல்முறையாக அசீமுடைய மகன் எதற்காக வரவில்லை என்று காரணத்தை அசீமுடைய தம்பி கூறி இருக்கிறார்.

ஆரம்பத்தில் இருந்தே அதே கேரக்டர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கடைசி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதில் அதில் ரசிகர்கள் பலரும் குறிப்பிடும் நபர்களில் அசீமுடைய பெயரும் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீம் நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக செய்யும் செயல்கள் பல நேரங்களில் ரசிகர்களை கடுப்பாக்கி கோபப்பட வைத்தாலும், இவர்தான் உண்மையாக இந்த வீட்டிற்குள் இருக்கிறார் மீதம் இருப்பவர்கள் நடிக்கிறார்கள் என்று சொல்லும் விதமாக இவர் தன்னுடைய கோபத்தை வெளியே அடிக்கடி காட்டிக் கொண்டிருக்கிறார்.

கோபம் தான் காரணம்
என்னதான் அசீம் கோபப்பட்டு டாஸ்க் நேரத்தில் சக போட்டியாளர்களிடம் சண்டையிட்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாலும் அது அன்றைய பிரமோவிலும் நிகழ்ச்சிக்கு பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. அசீம் மட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லை என்றால் சுவாரசியமே இருக்காது என்று ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு தான் ஒவ்வொரு நாளும் விளையாட்டை விளையாடி வருகிறார். ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் இவர தன்னை பாதுகாக்க வேண்டும் என்றால் எதிரே இருக்கும் போட்டியாளர்களை சண்டை என்று வரும்போது தரம் தாழ்த்தி பேசி அவர்களை வாயடைக்க வைப்பதற்காக மரியாதை இல்லாமலும் பேசி விடுகிறார் என்று குற்றச்சாட்டுகளும் எதிர்ப்புகளும் இருக்கின்றது.

மகன் மீது பாசம்
ஒவ்வொரு வாரமும் அசீம் வார நாட்களில் சண்டையிட்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டாலும், வார கடைசியில் கமல் முன்னிலையில் திட்டு வாங்கி அவரிடம் கண்டிப்புகளை பெற்றாலும், அடுத்த நாளே அதையெல்லாம் மறந்துவிட்டு மீண்டும் அவருடைய பழைய நிலைக்கு மாறிவிடுகிறார். இதை சிலர் பாராட்டவும் சிலர் கலாய்க்கும் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்து அசீம் தன்னுடைய மகன் மீது தனக்கு இருக்கும் பாசத்தையும் தன்னுடைய மகன் தன்னை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

நிறைவேறாத ஆசை
இந்த நிலையில் தன்னுடைய மகன் வரவேண்டும் என்று அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஃப்ரீஸ் டாஸ்க் ஆரம்பத்தில் மைனாவின் மகன் வரும்போது பிக் பாஸுக்குள் குறும்பா பாடல் ஒலித்ததும் அசீம் உடைய மகன்தான் வருகிறார் என்று அசீம் கண்கலங்கிவிட்டார். இந்த நிலையில் அசீம் உடைய மகன் அவர் ஆசைப்பட்ட மாதிரி கடைசி வரைக்கும் வரவில்லை ஆனாலும் அதை குறித்து அசீம் தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் அவருடைய தம்பி இதற்கான விளக்கத்தை கொடுத்திருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மகன் வராத காரணம்
அதில் அசீமுடைய முன்னாள் மனைவியோடு தான் அவருடைய குழந்தை இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் அசீமிற்க்கு சனி மற்றும் ஞாயிறு நாட்களில் மட்டும் தான் குழந்தையை சந்திக்கும் அனுமதி இருக்கிறது. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் நாங்கள் வந்தது புதன்கிழமை அதனால்தான் அவரை அழைத்து வர முடியவில்லை. அது மட்டும் அல்லாமல் அந்த நேரத்தில் அவருக்கு சளி பிடித்திருந்தது. அதனால் அவரை கூட்டிக் கொண்டு வர முடியாமல் ஆகிவிட்டது என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில் அசீம் ரசிகர்கள் அசீம் ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்த்தது நடக்காமல் போய்விட்டது அது அவருக்கு மட்டுமல்லாமல் எங்களுக்கும் வருத்தம் தான் என்று கருத்து கூறி வருகிறார்கள்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications