போன் நம்பர் கேட்ட ராபர்ட் மாஸ்டருக்கு ரட்சிதா கொடுத்த பதில்... முடிவு இப்பவே தெரிஞ்சிடிச்சோ!?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி யில் இருக்கும் ரட்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் நேற்று போன் நம்பர் கேட்டிருக்கிறார். இதை குறித்து நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பம் முதலே ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவிடம் அதிகமாக உரிமை எடுத்து பழகிக் கொள்வதை பார்த்த நெட்டிசன்கள் காண்டாகி இருக்கும் நிலையில் நேற்று எபிசோட்டில் ராபர்ட் மாஸ்டரின் கேள்விகளுக்கு ரட்சிதா கொடுத்த பதில் சிறப்பாக இருந்தது என்று பலர் பாராட்டி வருகிறார்கள்.

நினைவுக்கு வரும் கேரக்டர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலமாக பலருக்கும் மீனாட்சியாக தெரிந்த ரட்சிதா மகாலட்சுமி முதல் முதலில் ஆரம்பமானது பிரிவோம் சந்திப்பும் சீரியல்தான். அதைத்தொடர்ந்து அவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். திரைப்படங்கள் அவர் எதிர்பார்த்த அளவில் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்ற நிலையில் மீண்டும் சீரியலுக்கே வந்து சரவணன் மீனாட்சி சீரியலை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர், ஜீ தமிழில் நாச்சியார்புரம் தற்போது கடைசியாக கலர் தமிழில் இது சொல்ல மறந்த கதை என பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். ஆனால் எத்தனை சீரியல்களில் நடித்திருந்தாலும் ரட்சிதா என்ற பெயரை சொன்னதும் அவருடைய மீனாட்சி கேரக்டர் தான் பலருடைய மனதிற்கும் வந்து போகும். கேரக்டரோடு இவர் பழகிப் போனார்.

வாழ்த்து கூறிய கணவர்
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய நிஜமான கேரக்டரை ரசிகர்களின் முன்பு காட்டி ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்து பல வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ட்ரை பண்ணிக் கொண்டிருந்தாராம். இந்த நிலையில் தற்போதைய ஆறாவது சீசனில் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ரட்சிதாவும் அவருடைய கணவரான சின்னத்திரை நடிகர் தினேஷ் கார்த்திக்கும், ஒரு சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்கிறார் என்ற போது தினேஷ் இவருக்கு வாழ்த்து கூறி சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.

பொறுத்துக் கொள்ள முடியவில்லை
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தினேஷும் ரட்சிதாவும் சேர்ந்து வாழ்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் கருத்து கூறி வந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள்ளே ராபர்ட் மாஸ்டர் தன்னுடைய குழந்தைக்காக உள்ளே வந்தேன் என்று கூறிக்கொண்டு ரட்சிதாவின் பின்னாடி அதிகமாக சுற்றிக் கொண்டிருக்கிறார். மூக்குத்தி என்று செல்லமாக அழைத்தபடி ரட்சிதா என்னுடைய ஆள் என்கிற மாதிரியே நடந்து கொள்கிறார் என பலரும் இவர் மீது காண்டாகி கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்குள்ளே ரட்சிதாவிடம் யாரேனும் பேசினால் பொறுத்துக் கொள்ளாத ராபர்ட் மாஸ்டர் செய்யும் செயல்கள் பலருடைய அதிர்ச்சியை பெற்றிருக்கிறது.

செய்த வேலை வெளியே வந்தால் தெரியும்
இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் ரட்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் போன் நம்பர் வேண்டும் என்று கேட்க அவர் எப்போதும் போல எதற்கு மாஸ்டர் ஆரம்பத்திலிருந்து இதையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? நாம் இங்கே விளையாட வந்திருக்கோம் அந்த விளையாட்டை கவனத்தை செலுத்துங்கள் என்று சொல்ல தருவியா? தரமாட்டியா? என உரிமையாக ராபர்ட் மாஸ்டர் கோபப்பட, என்னிடம் பேனா நோட்டு புக் இல்லை என்று சொல்ல, ஏன் நேற்று இருந்துல என்று கூற அதை பத்தி இப்போ பேசாதீங்க விட்ருங்க என அந்த பேச்சை முடித்துக் கொள்கிறார்..அது மட்டும் அல்லாமல் ஷிவினுக்கும், மணிகண்டனுக்கும் ரட்சிதா லவ் யூ லாட் ஆஃப் என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். இதை குறித்து என்னை நீ ஏமாத்திட்டியா என பீலிங்கோடு ராபர்ட் மாஸ்டர் கேட்க இப்படி எல்லாம் சொல்லாதீர்கள் என்று வழக்கமாக சிரித்தபடியே ரட்சிதா சொல்கிறார். ஆனாலும் இதன் அர்த்தம் புரிந்து கொண்ட ராபர்ட் மாஸ்டர் பெண்ணை நம்பாதே என்ற பாடலை பாடிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு வழியாக ராபர்ட் மாஸ்டருக்கு இந்த வாரம் வெளியேறி விடுவோம் என்பது தெரிந்து விட்டதோ? முடிவு தெரிந்ததால் தான் ரட்சிதாவிடம் போன் நம்பர் கேட்டு நச்சரித்து கொண்டு இருக்கிறாரோ? வெளியே வந்து பார்த்தால் தெரியும் அவர் செய்து கொண்டிருந்த வேலை எல்லாம் என்று பலரும் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications