சாண்டி மாஸ்டர் மாதிரி இருப்பாரா அமீர்...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதியதாக களமிறங்கி இருக்கும் போட்டியாளரை பற்றி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடன மாஸ்டர் அமீர், சாண்டி மாஸ்டர் போல என்டர்டைன்மென்ட் கொடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.
முதல்நாளில் அமைதியாக நடந்து கொண்டாலும் போகப்போகத்தான் புரியும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

18 போட்டியாளர்கள் அறிமுகம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முன்பு இருந்த சீசன்களிலும் இல்லாத வகையில் முதல் முறையாக பதினெட்டு போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி இருந்தது. போட்டியாளர்கள் அதிகமாக இருப்பதால் இந்த ஐந்தாவது சீசன் அனைவரையும் எதிர்பார்ப்பில் ஆழ்தி இருந்தது. ஒவ்வொரு சீசனும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால், தொடர்ந்து இந்த சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்றுதான் பல ரசிகர்கள் ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டிருந்தனர்.

முதல் வைல்ட் கார்ட் என்ட்ரி
ஆரம்பிக்கும்போது அதிகமான போட்டியாளர்கள் களமிறங்கி இருந்ததால் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு படிதான் நடந்துகொண்டிருக்கிறது. இதுவரைக்கும் 6 போட்டியாளர்கள் வெளியேறி இருந்தாலும் இரண்டு போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்து இருக்கின்றனர். அதில் ஒருவர் அபிஷேக், அவர் ஏற்கனவே இந்த வீட்டிற்குள் போட்டியாலராக இருந்து எலிமினேஷன் ஆகி வெளியே சென்றவர் மீண்டும் முதல் வையட் கார்ட் என்ரியாக வந்திருக்கிறார்.

இரண்டாவது வைல்ட் கார்ட் என்ட்ரி
இந்த வாரம் யார் வெளியே செல்வார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து இருக்கும் நேரத்தில் இரண்டாவது வைல்ட் கார்ட் என்ட்ரி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதுவும் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு நடன மாஸ்டர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தான். அதுவும் இதுவரைக்கும் எந்த ஒரு நிலையிலும் இவருடைய பெயரை எதிர்பார்க்காத ரசிகர்கள் அமீர் என்ட்ரியை பார்த்து அசந்து போய் விட்டார்கள்.

நடன மாஸ்டர் ஆட்டத்தை துவங்குவாரா??
அமீர் வந்த முதல்நாளே டாஸ்க் கொடுத்து அவருக்கு நடன ஆசிரியர் பதவியும் கொடுத்து விட்டனர் பிக்பாஸ் அணியினர். இந்நிலையில் இவருடைய அமைதியான கேரக்டர் மற்றும் பவ்யமான குரலை கேட்டு ரசிகர்கள் பலர் இவர் சாண்டி மாஸ்டரை போன்று இந்த நிகழ்ச்சியில் என்டர்டைன்மென்ட் கொடுப்பாரா??என்று ஆர்வத்தில் காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர் சிரிக்கவே மாட்டுக்காரர் என்று அடிக்கடி போட்டியாளர்கள் இவர் மீது குறை கூறிக் கொண்டிருக்கும் போது, இவரால் இந்த வீட்டிற்குள் எப்படித்தான் தாக்கு பிடிக்க முடியுமோ என்று இவருக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications