நிம்மதியே போயிடுச்சி.. தலைமறைவாக இருக்கேன்.. கேரள லாட்டரியில் ரூ.25 கோடி கிடைத்தவர் கண்ணீர்
திருவனந்தபுரம்: கேரள லாட்டரியில் 25 கோடி ரூபாய் பரிசு பெற்ற நபர்.. தன்னிடம் பலரும் பணம் கேட்டு தொல்லை பண்ணுவதாக தெரிவித்து உள்ளார். இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுவிட்டது என்றும் மனஉளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த சில நாட்களுக்கு முன் கேரள அரசு சார்பில் நடத்தப்பட்டது. ஆட்டோ டிரைவர் அனூப் என்பவர் இதில் முதல் பரிசு பெற்றார்.
திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர் வென்றதுதான், இதுவரை லாட்டரியில் கேரளாவில் வெல்லப்பட்ட அதிக தொகை ஆகும். இந்த லாட்டரியில் இவருக்கு 25 கோடி ரூபாய் கிடைத்தது.

வரி
கடுமையான வறுமையில் இருந்த அனூப் வெளிநாடு செல்வதாக இருந்தார். அதேபோல் லோன் கேட்டும் விண்ணப்பம் செய்து இருந்தார். ஆனால் 25 கோடி ரூபாய் பணம் கிடைத்ததால் அந்த திட்டங்களை கைவிட்டார்.தன் மகன் உண்டியலில் சேர்த்து வைத்து இருந்த பணத்தை சேர்த்துதான் இவர் லாட்டரி சீட்டே வாங்கி இருக்கிறார். ஆனால் இவருக்கு முழுமையாக தொகை கையில் வராது.

வங்கி
15.75 கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் இவருக்கு கொடுக்கப்படும். மீதம் உள்ளதில் 8 கோடி ரூபாய் அளவிற்கு வரி பிடித்தம் செய்யப்படும். 10 சதவிகிதம் லீடருக்கு கமிஷனாக வழங்கப்படும். இந்த நிலையில்தான் தன்னிடம் பலரும் பணம் கேட்டு தொல்லை பண்ணுவதாக தெரிவித்து உள்ளார். இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுவிட்டது என்றும் மனஉளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக புலம்பலோடு அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

வீடியோ
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எனக்கு லாட்டரியில் பணம் கிடைத்தது எல்லாம் சந்தோசம்தான். ஆனால் என்னை உறவினர்கள் பணம் கேட்டு தொல்லை செய்கிறார்கள். என்னுடைய சந்தோசம் எல்லாம் போய்விட்டது. நான் இப்போது தலைமறைவாக இருக்கிறேன். காசு கொடுங்கள் உதவி செய்யுங்கள் என்று என்னிடம் கேட்டு நிறைய பேர் வீட்டிற்கு வருகிறார்கள். நான் வீட்டிலேயே இருக்க முடியாத நிலை உள்ளது.

சகோதரி வீடு
இப்போது என் சகோதரி வீட்டில்தான் இருக்கிறேன்.எங்கே சென்றாலும் அங்கேயும் வந்து என்னிடம் பணம் கேட்கிறார்கள். எனக்கே இன்னும் பணம் வரவில்லை. எனக்கு நிம்மதியே இல்லை. பணம் இல்லை என்று சொன்னால் கூட நான் திமிராக பேசுவது போல நினைத்துக்கொள்கிறார்கள். ஏன் இவ்வளவு லாட்டரி கிடைத்தது என்றும் வருந்தும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது, என்று புலம்பலாக தெரிவித்து உள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications