27 வருடங்களுக்கு பின் நடந்த அதிசயம்.. பெரிய ஆபத்திலிருந்து தப்பிய சென்னை! வானிலையில் வந்த மாற்றம்
சென்னை: சென்னையின் அனைத்து பெரிய ஏரிகளும் ஒரே நேரத்தில் நிரம்பிய அதிசயம் நிகழ்ந்து உள்ளது. 1998க்குப் பிறகு, இந்த அரிய நிகழ்வு டிட்வா புயலின் தாக்கத்தினால் மீண்டும் சாத்தியமாகியுள்ளது.
சமீபத்தில் சென்னைக்கு அருகே மையம் கொண்டு கனமழையை கொடுத்த டிட்வா புயல், சென்னை குடிநீர் ஆதாரத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளது. பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் ஒரே நேரத்தில் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

டிட்வா புயல்
சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கூற்றுப்படி, இந்த நீர் இருப்பு வரும் கோடையில் சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும். மூன்று ஏரிகளும் கூட்டாக 12,000 மில்லியன் கன அடிக்கும் அதிகமான தண்ணீரைச் சேமிக்கின்றன. இது கடும் கோடை பற்றாக்குறை ஏற்பட்டால் கூட தண்ணீர் தட்டுப்பாடு அபாயத்தைக் குறைக்கும்.
நவம்பர் 27 அன்று இலங்கை கடலோரம் குறைந்த அழுத்த மண்டலமாக உருவான 'டிட்வா’, வலுப்பெற்று புயலாக மாறியது. இது இலங்கையில் பெரும் சேதத்தையும் 450க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இலங்கையில் நீண்ட நேரம் நிலைத்தபின், அது தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்தது.
தமிழகத்தை அடைந்த டிட்வாவலுவிழந்தாலும், சென்னை அருகே மையம் கொண்டு, தொடர் மழையைப் பொழிந்தது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கும் மேலாக கனமழை பதிவானது. புதுச்சேரி-மரக்காணம் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடந்து, உள் மாவட்டங்களுக்கும் பரவலாக மழை தந்து கலைந்தது.
அசத்திய செம்பரம்பாக்கம்
சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்நிலையில் தான் வரலாற்றில் முதல் முறையாக செம்பரம்பாக்கம் ஏரி முதல் முறையாக முழு கொள்ளளான 24 அடியை எட்டி உள்ளது. இதுவரையில் இல்லாமல் திடீரென்று அதிகாரிகள் முழு கொள்ளவுக்கு தண்ணீரை தேக்கி வைத்தன் பின்னணி குறித்த முக்கிய தகவலை இங்கு பார்க்கலாம்.
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரி 24 அடி உயரம் கொண்டது. இந்த 24 அடிக்கு தண்ணீரை தேக்கும்போது ஏரிக்குள் மொத்தம் 3645 மில்லியன் கனஅடி நீர் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் புழல் ஏரி கிட்டத்தட்ட நிரம்பி உள்ளது. இதன் முழு கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும். கிட்டத்தட்ட 3250 மில்லியன் கன அடி தண்ணீர் அதில் நிரம்பி உள்ளது. மேலும் பூண்டி ஏரி கிட்டத்தட்ட நிரம்பி உள்ளது. இதன் முழு கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி ஆகும். கிட்டத்தட்ட 3150 மில்லியன் கன அடி தண்ணீர் அதில் நிரம்பி உள்ளது.
டிட்வா புயல் வானிலை
வழக்கமாக நவம்பர் வடகிழக்கு பருவமழையால் தமிழகம் நல்ல மழை பெறும். ஆனால், இவ்வாண்டு சுமார் 25 முதல் 30 சதவீதம் மழை பற்றாக்குறை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் சென்னையின் முக்கிய ஏரிகளில் நீர்மட்டம் குறைந்து, கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் நிலவியது.
ஆனால் டிட்வா புயல் மற்றும் தொடர் மழையால், முன் நிலவிய குடிநீர் நெருக்கடி அச்சங்கள் தற்போது நீங்கியுள்ளன. இந்த நீர் ஆதாரங்கள் சென்னையின் நீண்டகால குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து, வரவிருக்கும் கோடை பற்றாக்குறை அபாயத்தை வெகுவாகக் குறைக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
-
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications